ஸ்கின் அலெர்ஜி???ஃபங்கல் இன்பெக்ஷனா ?

எனக்கு மேல் வயிற்றில் அதாவது உள்ளாடை போடும் பகுதிக்கு கீழே தோல் சிவப்பாக உள்ளது...அரிப்பும் இருக்கிறது..நான் பேபி லோஷன் உபயோகித்து பார்த்தேன்..அந்த நேரம் அரிப்பு இல்லை..இது எதனால் என்று யாருக்காவது தெரியுமா??ஸ்கின் அலெர்ஜியா??ஃபங்கல் இன்பெக்ஷனா ?
எனது தோழி ஒருவர் சில உள்ளாடைகள் ஒத்துக் கொள்ளாமல் போனால் இப்படி எற்படும் என்று கூறுகிறார்??இது பற்றி யாருக்காவது தெரிந்தால் கூறவும்.....

Enakum work pannum podhu ipdi aanadhu undu shameela. Idhu sweat andha area la adhigama serradhala yerpadum. So best veetla irukum podhu coconut oil apply pannittu konjam free ya dress pannikonga. Daily kooda light ah coconut oil apply pannittu kooda inner podunga. Seekiram sariyagum. Coconut oil vendam na vaseline kooda use pannalam. Romba itching irundha dr kitta consult pannidunga shameela...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

விளக்கமான பதிவிற்க்கு ரொம்ப நன்றி நித்தி...
நீங்க சொல்ற மாதிரி ஃபாலோ பண்றேன் பா...

எனக்கு தெரியலயேங்க... நித்யா சொன்னதை ட்ரை பண்ணுங்க, இல்லன்னா டாக்டரை பாருங்க. கவலைபடாதீங்க, சரியாகிடும் சிக்கிரம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

enaku hair fall romba iruku ,so any tips?

ஷமீலா! candid B என்னும் ஆயின்மென்ட் அனைத்து மருந்துகடைகளிலும் கிடைக்கும் போட்டுபாருங்க. ஒரு வாரத்திற்கு அப்புறமும் மாற்றம் ஏதுமில்லையெனில் மருத்துவரை பார்க்கவும்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ரொம்ப நன்றி அருட்செல்வி ....
இங்க candid க்ரீம் தான் இருக்கு...நான் ட்ரை பண்ணி பார்க்குறேன் பா..பதில் சொன்னதற்க்கு நன்றி....

பரவாயில்லை வனிதா....நான் நம்ம தோழிகள் சொன்ன மாதிரி செய்றேன்....நன்றி...

ஸ்கின் அலெர்ஜி, ஃபங்கல் இன்பெக்க்ஷன், துணி அலர்ஜி, வெப்பம், உணவு எதுவாகவும் இருக்கலாம். எப்போதும் இல்லாமல் இடையில் இப்படி மாற்றங்கள் ஆவது உண்டு. //பேபி லோஷன் உபயோகித்து பார்த்தேன்..அந்த நேரம் அரிப்பு இல்லை.// அப்படியானால் சருமம் முற்றாக சரியாகும் வரை அதையே தொடரலாமே. அனேகம் சரியாகும்.

கூடவே கொஞ்ச நாளைக்கு மென்மையான காட்டன் (அல்லது விஸ்கோஸ்) உள்ளாடைகளுக்கு மாறலாம். இதில் இரண்டு லாபம் இருக்கிறது. பருத்தி ஒவ்வாமைத் தன்மை இல்லாதது. இரண்டாவது வியர்வை, சிவந்து இருக்கும் சருமத்திலிருந்து வெளியாகும் திரவம் இரண்டையும் உறிஞ்சிக் கொள்ளும் உலர்வாக வைத்திருக்கும். சிந்தெடிக் துணிகள் உறிஞ்சாது, மீண்டும் உலரும்போது மென்மையை இழந்து கடினப்பட்டுவிடும். சருமத்தில் இதனால் உராய்வு அதிகமாகும். வீட்டிலிருக்கும்போது தளர்வான ஆடை அணியப் பாருங்கள். எலாஸ்டிக் உள்ள துணிகளாலும் இப்படிச் சிரமங்கள் வருவதுண்டு. வெளியே அணியும் துணிகளும் குளிர்மையானவையாகத் தெரிந்து கொள்ளுங்கள். கடும் வர்ணங்கள் வியர்க்க வைக்கும்.

ஆறும் வரை சவர்க்காரத்தைத் தவிர்த்தால் நல்லது. சிரமம்தான் இல்லையா! பேபி சோப் பயன்படுத்தலாம். தேய்த்துக் கழுவ வேண்டாம். மென்மையான துவாலையால் ஈரலிப்பை ஒற்றி எடுங்கள்.

ஒன்றிரண்டு நாட்களில் சரியாகாவிட்டால் மருத்துவரிடம் காட்டிக் கேட்டுவிடுவதுதான் நல்லது. இதற்கென்றே பூச்சு மருந்துகள் இருக்கின்றன. சட்டென்று ஆறிவிடும்.

‍- இமா க்றிஸ்

தோழிகளுக்கு வணக்கம் .என் கணவருக்கு கடந்த ஒரு வாரமாக உடம்பு முழுவதும் அரிப்பு ,அரிப்பு ஏற்படும் இடத்தினை நகத்தால் லேசாக சொரியும் போதே உடம்பு நன்றாக சிவந்து விடுகிறது , அதனால் அவர் மிகவும் அவதிப் படுகிறார் ,மருத்துவரிடம் சென்றதற்கு மாத்திரை ,களிம்பு எழுதி கொடுத்து இருக்கிறார் ,இருப்பினும் பலனில்லை .என்ன செய்வதென்றே தெரியவில்லை ,உங்கள் ஆலோசனை வேண்டும் தோழிகளே .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

முதலில் நகத்தால் சொறிந்து கொள்வதை விட்டுவிடச் சொல்லுங்கள். அது பெரிய எதிரி. கொஞ்சம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். மாத்திரை அரிப்பைக் குறைக்கும். ஆனால் மாறவேண்டுமானால் நோயாளியும் உடம்போடு ஒத்துழைக்க வேண்டும். இப்பிடிச் செய்வதால் வேறு தொற்றுக்கள் ஏற்படலாம். அதற்கும் சேர்த்து மருந்து செய்ய வேண்டும். மாத்திரை, களிம்பு எல்லாம் வேலை செய்யவும் கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும் இல்லையா? சட்டென்று மாஜிக் போல குணமாக வேண்டுமென்று எதிர்பார்க்க முடியாது. சரியான நேரத்துக்கு மருந்தை எடுத்துக் கொள்ள வையுங்கள்.
இங்கு இது சம்பந்தமாக முன்பு பேசிய சில இழைகள் இருக்கின்றன. படித்துப் பாருங்கள். உணவு... இந்த மாதிரி சமயத்தில் சாதாரண நாட்களில் எதுவும் செய்யாதவை கூட பொருந்தாமல் போகலாம். அவதானியுங்கள். சந்தேகமாக இருந்தால் திரும்ப போய்க் காட்டுங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்