பட்டிமன்றம் பூட் காம்ப்

பட்டிமன்றம் என்றால் என்ன? இதில் நாம் கலந்துக் கொள்ளலாமா? இதில் கலந்து கொள்ள நன்றாக தமிழ் பேச தெரிந்திருக்கனுமா? இப்படி ஏகத்துக்கும் கேள்விகள் நம் மனதில் இருக்கும்/இருந்திருக்கும் (எல்லாமே கலந்துக் கொள்ளும் வரை தான்). இந்த இழை பட்டி மன்றம் என்றால் என்ன என்பதிலிருந்து எப்படி கருத்துகளை பதிய வேண்டும் என்பது வரையில் எல்லாவற்றை பற்றியும் கலந்துரையாடலாம் வாங்க.

எங்கே பட்டிமன்ற ஜாம்பவான்கள் எல்லோரும் வந்து உங்களின் கருத்தை பதியுங்கள் பார்ப்போம்.....புதியதாய் வரும் தோழிகளுக்கு இது ஒரு ரெஃபரென்ஸ் மாதிரி இருக்கட்டும்.

இருந்தாலும் அட்ஜெஸ்ட் மாடி.....

எல்லோருக்கு ஏற்ப்படும் தயக்கம் தான் முதலில் எனக்கும் பட்டிமன்றம் பற்றி இருந்தது. எவ்வளவு தயக்கம் என்றால் படிக்க கூட பயம். சில நேரங்களில் வரும் தலைப்பு என்னையும் மீறி படிக்க வைத்தன. அதில் வாதடியவர்கள் எல்லாம் பிச்சி உதறுவார்கள். ஒருநாள் நாமும் அவர்களை போல் வாதாட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் எனக்கும் ஒரு புஷ் தேவை பட்டது. அதை சரியான நேரத்தில் தயங்காமல் என்னை புஷ் செய்த தோழிகளுக்கு நன்றிகளுடன் ஆரம்பிக்கிறேன்.

முதலில் தலைப்பை நன்றாக படிக்க வேண்டும். சிலர நேரங்களில் தலைப்பே மிகவும் குழப்பமாக இருக்கும். தலைப்பு சரிவர படித்து புரிந்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை தலைப்பு புரியவில்லை என்றால் தயங்காமல் விளக்கத்தை நடுவரிடம் கேட்கவும். இல்லை நீங்கள் புரிந்துக் கொண்டது சரிதானா என்றும் உறுதி படுத்திக் கொள்ளுங்கள். தயக்கம் அல்லது தெளிவு இருந்தால் மட்டுமே உறுதி படுத்திக் கொண்டால் போதுமானது. இல்லையென்றால் அதுவே அதிக பதிவுகள் ஆயிடும் :)

தலைப்பு தெளிவு பெற்றப்பின் எந்த அணி என்பதை தீர்மானிக்க வேண்டும். அணியை தீர்மானிப்பது தான் இருப்பதிலே மிகவும் கஷ்டமான வேலை. அணியை தீர்மானிக்கும் முன் இரண்டு பக்கத்தில் உள்ள நிறை குறைகளை ஆராய்ந்து பார்க்கவும். நிறைகள் எது அதிகமாக நமக்கு தோன்றுகிறதோ அந்த அணி தான் நம் அணி. என்னடா இவ உல்டாவா சொல்றாளேன்னு பார்க்காதீங்க. எப்பொழுதுமே குறைகளை விட நிறைகளை தான் பேச வேண்டும். எதிரணியை குறை கூறி தான் உங்களின் அணிக்கு பலம் சேர்க்கவேண்டும் என்றில்லை. உங்களின் அணியில் உள்ள நிறைகளை மட்டுமே பேசியே அணிக்கு வலு சேர்க்கலாம். ஜெயக்கவும் செய்யலாம். தவிர்க்க முடியாத நிலையில் அந்த கருத்தை மறுத்தே ஆக வேண்டும் என்கின்ற சூழிநிலையில் மறுக்கலாம் தப்பில்லை. கவனிக்கவும், கருத்தை மறுக்கலாமே தவிரே மறைமுகமாக சாடுதல் கூடாது.

இன்னும் வருகிறேன். இப்போ கொஞ்சம் வேலை. வந்து கண்டினியூ பண்றேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வாவ் லாவி... பலருக்கு பயன்படும் நல்ல இழை :) வரேன், இப்ப தான் எழுந்திருக்கேன்... கொஞ்சம் நேரம் விட்டு வரேன் பதிவோட. “ஜாம்பவான் இல்லை” என்னையும் சேர்த்துக்கங்க.

கவிசிவா, பூர்ணிமா, சீதாலஷ்மி, சாந்தினி, ரம்யா, இளவரசி... எல்லாம் வாங்க தோழிகளே. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பட்டிமன்றம் என்பது பெரிய கம்பு சுத்துற வேலை இல்லை... பட்டி நடுவரா வர நாம எல்லாம் சாலமன் பாப்பையா வோ, வாதாடுற நாம எல்லாம் ராஜா வோ, பாரதி பாஸ்கர் அளவு தமிழ் புலமை வாய்ந்தவர்கள் இல்லை.. அதே நேரத்துல நாம ஏதும் அறியாதவங்க இல்லை... நம்மளோட கருத்துக்களை வெளிப்படுத்துற அளவு தமிழ் தெரிஞ்சா போதும்...

அதுக்கு அப்புறம் தலைப்பை படிங்க... எல்லா தலைப்புகளுமே நம்மளை சுத்தி என்ன நடக்குதோ அதை பத்தி தான் பேசுறோம்... அது சம்மந்தமா 10, 20 வரிகள் பேச சொன்னால் பேச முடியாதா என்ன??? கண்டிப்பா எல்லாருமே பேசலாம். பேச முடிந்தவர்கள் தான்.

இப்போ என்ன முதல் கட்டமா ஒரு 10 வரி போட்டாச்சா.. அடுத்த நாள் நம்ம எதிர் அணி என்ன சொல்லியிருக்காங்கன்னு படிங்க... அதுல இருந்தே நமக்கு பல பாயிண்ட் கிடைக்கும். அதுல இருந்து எடுத்து நாம தொடர்ந்து பேசலாம் பா..

நாம எந்த அணியில இருக்கோமோ அதுல தெளிவா இருக்கணும்... எதிர் அணி என்ன பதில் கொடுத்தாலும் நம்மால முடிஞ்ச வரை அவங்களுக்கு பதிலடி கொடுக்கணும்... இன்டர்வியூ ல குரூப் டிஸ்கஷன் இருக்கும் ல.. அது மாதிரி தான் இதுவும்.... நாம தமிழை தப்பா பேசுறோமா, சரியா பேசுறோமா னு யோசிக்காம நாம பேசுற பாயிண்ட் ல தெளிவா பேசணும்... அவ்வளோ தான்

இனி என்ன தயக்கம்... அடுத்து நம்ம இந்திராவோட பட்டி ல பழைய அறுசுவை முகங்கள் (ஆனா பட்டிக்கு புதுசு) எல்லாரும் கலந்துக்கிட்டு சிறப்பிக்க வாங்க... பட்டி இழை 50 பக்கத்தை தாண்டனும்... பாத்துக்கொங்க....

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

லாவி இப்படி அருமையான ஒரு இழையை ஆரம்பித்ததற்கு நன்றி. ஆரம்பிச்சதோட நிற்காமல் அழகா பதிவையும் கொடுத்துட்டீங்க. வாழ்த்துக்கள் லாவி. நானும் ஜாம்பவான் லேது. இருந்தாலும் அட்ஜஸ்ட் மாடி... :)

இங்கே பட்டிமன்றத்தில் பேசுவது (எழுதுவது) மேடையில் பேசுவதைக்காட்டிலும் எளிதுதான். நாம் எழுதியதை எத்தனை முறை வேண்டுமானாலும் படித்து திருத்தி பின் வெளியிடும் வசதி இருக்கிறதே.

லாவி சொன்னது போல் தலைப்பை புரிந்து கொண்டு பின் அணியை தேர்ந்தெடுத்த பின் முதல் கட்ட வாதமாக தலைப்பை ஒட்டிய நமது கருத்துக்களை தெளிவாக சொல்ல வேண்டும்.

நான் பத்தாவது படிக்கும் போது எனது கணித ஆசிரியர் சொன்ன ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. உனது விடைத்தாளை திருத்தும் ஆசிரியருக்கு எதுவுமே தெரியாது என நினைத்துக் கொள். உனது பதில்கள் அவருக்கும் புரியும் படி விளக்கமாக தெளிவாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு விடையளிக்க வேண்டும் என்பார். அது பரீட்சைகு மட்டும் இல்லை. இங்கே பட்டிமன்றத்தில் பேசவும் உதவும்.

நம் பதிவை படிப்பவர்களுக்கு நம் எண்ணங்கள் முழுமையாக தெரியாது. அதனால் நாம் சொல்ல வரும் விஷயத்தை நம் மனதில் தோன்றும் எண்ணங்களை முழுமையாக எழுத்தில் கொண்டு வர வேண்டும். அது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை. நாம் சொல்ல வேண்டிய கருத்துக்களை எழுதி விட்டு உடனேயே வெளியிட்டு விடாமல் மீண்டும் நாம் எழுதியதை ஒரு மூன்றாம் மனிதராக வாசித்துப் பார்த்து அது நமக்கு தெளிவாக புரிகிறதா நாம் சொல்ல வந்திருக்கும் கருத்துக்கள் கோர்வையாக இருக்கிறதா என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு தேவையென்றால் மாற்றங்கள் செய்து வெளியிடலாம்.

பட்டிமன்ற பதிவுகள் உரைநடைத் தமிழில் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. நாம் சாதாரணமாக பேசும் பேச்சு வழக்கிலேயே எழுதலாம். சிறிய சிறிய பத்திகளாக பிரித்து எழுதினால் படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும். ஒட்டு மொத்தமாக ஒரே பத்தியாக எழுதினால் படிக்க சலிப்பு தட்டி விடும். நாம் சொல்ல வரும் கருத்துக்கள் சரியாக படிப்பவரை எட்டாது.

புதிதாக பட்டிமன்றத்துக்கு வருபவர்கள் கருத்திதில் கொள்ள வேண்டிய விஷயம்.... (பழையவர்களுக்கு ஓரிரு பட்டியில் கலந்து கொண்டதுமே இது புரிந்திருக்கும். அதனால்தான் புதியவர்களுக்கு என்று சொன்னேன்) இங்கே நாம் ஒரு தலைப்பைதான் ஒட்டியும் வெட்டியும் பேசுகிறோமே தவிர பேசுபவர்களை எதிர்த்து அல்ல என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். கருத்துக்களுக்கு மட்டுமே எதிர் கருத்துக்கள். எதையும் பெர்சனலாக எடுத்துக் கொண்டு வருத்தம் அடையத் தேவையில்லை. ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொண்டால் பிரச்சினை இல்லை.

பட்டிமன்ற வாதங்களில் இரண்டு வகை உண்டு. நம் கருத்துக்களில் நாம் ஆணித்தரமாக நின்று நம் பக்கத்தை தெளிவாக எடுத்துச் சொல்லி வாதாடுவது ஒருவகை. இதற்கு நாம் அந்த தலைப்பை பற்றி அதிகமாக அறிந்திருக்க வேண்டும். அதிகமாக ரிசர்ச் தேவைப் படும். அடுத்தது எதிரணியினரின் கருத்துக்களில் இருந்தே நமக்கு வேண்டிய பாய்ன்ட்சை பிடித்துக் கொள்வது. அவர்கள் பாய்ன்ட்சை அவருக்கே திருப்பி விடுவது :). இதுக்கு கொஞ்சம் மாத்தி யோசிக்கனும் :). ஆனால் ஏதேனும் ஒருவகையான முறையில் மட்டுமே வாதாடாமல் இரண்டு வகையிலும் கலந்து வாதாடினால் வாதங்கள் சுவாரசியமாக இருக்கும்.

மேலே சொன்னது எல்லாமே நான் கடைபிடிக்கும் விஷயங்கள். இன்னும் ஏதாவது தோன்றினால் சொல்கிறேன். நன்றி!!!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இந்த பயனுள்ள இழை எங்களைப் போன்ற புதுமுகங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
நன்றி லாவண்யா. கருத்து சொல்லி இருக்கும் கவி, கார்த்திகா,
இனி கருத்து சொல்லவரப்போகும் தோழிகள் அனைவருக்கும் நன்றிகள் பல. இன்னொரு சந்தேகம் தெளிவுபடுத்தி விடுங்கள், ஆf லைனில் டைப் அடித்து விட்டு ஆன்லைனில் காப்பி பண்ண ஏதாவது வழிஉண்டா கூறுங்கள் தோழிகளே!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ekalappai or NHMwritter உங்க சிஸ்டத்தில் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் பன்னிட்டீங்கன்னா ஆஃப் லைனில் இருந்து நோட்பேடில் தமிழில் டைப் செய்து காப்பி செய்து ஆன்லைனில் இங்கே பேஸ்ட் பண்ணிடலாம். நேரடியாகவும் இங்கேயே டைப் செய்யலாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி கவி. ஆன்லைனில் டைப் செய்யும் பொழுது பில் தொகை அதிகமாகிறது.
இது வரை நேரடியாக இங்கேதான் டைப் செய்துகொண்டிருக்கிறேன்.
NHMwriter டவுன்லோட் ஆகமாட்டேங்குது. ekalappai முயற்சி பண்ணி பார்க்குறேன்.
முயற்சி பண்ணினேன் ஈமெயில் ஐடி கேட்குது கொடுக்கலாமா?

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இந்த மாதிரி தளங்களுக்கு கொடுக்கன்னு தனியா ஒரு ஐடி வச்சுக்கோங்க. பிரச்சினை இல்லை

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆமாம் தோழிகளே எனக்கும் தமிழில் டைப் செய்ய கஷ்டம் தான். பட் நான் 4 லைன் டைப் பன்ன 1/2 மனி நேரம் ஆகும். எனக்கும் எல்லார் மாதிரியும் பட்டில நல்லா வாதடனும்னு ஆசை தான். இன்னும் நான் அதற்கு நல்லா ட்ரை பன்னனும்னு எனக்கே தெரியும். ம் ட்ரை பன்ட்ரென். ஓகே அடுத்த பட்டி இன்னும் ஆரமிக்கலையா?

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

தோழி அருட்செல்வி
www.google.com/transliterate/tamil/
இந்த பக்கத்திற்கு சென்று Download Google Transliteration IME என்பதனை டவுன்லோட் செய்தால் எளிதாக அது பதிவிறக்கம் ஆகும் .இதனால் நீங்கள் தமிழில் wordpad ல் டைப் செய்து copy paste செய்தால் போதும் .எளிதாக இருக்கும் .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

மேலும் சில பதிவுகள்