தேதி: October 11, 2012
பழைய ஜீன்ஸ் பேண்ட்
உல்லன் நூல்
கத்தரிக்கோல்
ஸ்டோன்ஸ்
பெவிக்கால்
கிலிட்டர்ஸ்
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

பழைய ஜீன்ஸ் பேண்ட்டின் பின்பக்கம் உள்ள பாக்கெட் ஒன்றை கத்தரிக்கோலால் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

நறுக்கிய பாக்கெட்டின் அகலத்திற்கேற்ப படத்தில் உள்ள வடிவத்தில் வரைந்து அதனை தனியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். (இது தான் பாக்கெட்டினை மூடும் மேல் பகுதி).

படத்தில் உள்ளவாறு தனியாக நறுக்கி வைத்துள்ள பகுதியை பாக்கெட்டின் மேல் பக்கம் வைத்து சரிபார்த்துக் கொள்ளவும்.

இணைத்து வைத்துள்ள பாக்கெட்டின் ஓரத்தை சுற்றி வைத்து தைக்க தேவையான அளவிற்கு உல்லன் நூலை 2 செ.மீ அளவில் துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். அதனை பாக்கெட்டின் ஓரத்தில் வைத்து அதன் மேல் மெஷின் எம்பிராய்டரியில் சாட்டின் தையலை (Satin Stitch) போடவும்.

பாக்கெட்டின் மேல் பகுதியை தவிர சுற்றிலும் உல்லன் நூல் வைத்து சாட்டின் தையல் தைத்து முடிக்கவும். ஒரத்தில் வெளிப்பக்கம் உள்ள உல்லன் நூலை சமமாக நறுக்கி விடவும்.

பாக்கெட்டின் மேல் பக்கத்தில் முக்கோணமாக நறுக்கி வைத்துள்ள துணியை இணைக்கவும். படத்திலுள்ளவாறு இணைத்த துணியின் மீது மெஷின் எம்பிராய்டரியில் தேன் கூட்டுத் தையல் (Honey Comp Stitch) போடவும்.

இணைத்த துணியின் இரு ஓரங்களிலும் ஒரு செ.மீ அளவுக்கு விடவும். பின்னர் அதன் மேலே முக்கோணமாக உள்ள பக்கத்தின் ஒரங்களில் உல்லன் நூலை வைத்து சாட்டின் தையலை (Satin Stitch) தைத்து முடிக்கவும். ஓரத்தில் உல்லன் நூலை சமமாக வெட்டி விடவும்.

தையல் மெஷினில் பட்டன் தைப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள முறைப்படி, பர்ஸின் மூடும் பகுதியில் உள்பக்கத்தில் நுனியில் படத்தில் காட்டியுள்ளவாறு (Button Fixing) காஜா தைத்துக் கொள்ளவும்.

காஜா தைத்த பகுதியை துளையிடுவதற்கு கொடுத்துள்ள கருவியால் நடுவே நுளையிட்டு கொள்ளவும்.

பர்ஸின் மேல் பகுதியில் காஜா தைத்தற்கு நேராக ஒரு பட்டனை (Button Hole) வைத்து தைத்துக் கொள்ளவும்.

இவ்வாறு மெஷின் மூலமோ அல்லது கைகளாலோ பட்டனை தைத்து முடிக்கவும்.

ஏற்கனவே ஜீன்ஸ் பாக்கெட்டின் நடுவில் நூலால் டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதனை வடிவமாக கொண்டு அதன் மேல் க்ளூ தடவி ஸ்டோனை ஒட்டவும்.

பேப்பர் பைகளுக்கு பயன்படுத்தும் நாடாவை, செய்து வைத்துள்ள ஜீன்ஸ் பையின் இரு ஓரங்களிலும் வைத்து தைத்து முடிக்கவும்.

ஜீன்ஸ் பேண்ட்டில் செய்யப்பட்ட குழந்தைக்களுக்கான ஜீன்ஸ் பேக் தயார்.

Comments
செண்பகா
முகப்பில் பார்த்ததும் கண்டு பிடிச்சுட்டனே டீம் வேலையா தான் இருக்கும்னு ;) நீங்களே தான். சூப்பர். ரொம்ப அழகா செய்திருக்கீங்க. கலர் காம்பினேஷனும் சூப்பர்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சூப்பர்
நல்லா அழகா செய்திருக்கீங்க.சூப்பர்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
jeans bag
wow epidlam think pandringoooo..... superb ah irukkudhu... vazhthukkal.
The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)
jeans bag
இந்தியாவில உள்ள அத்தனை அறிவாளிகளும் இங்கதான் இருக்காங்க................very very nice............
by,
AnuGopi,
Be happy and Make others happy........
செண்பகா...
சூப்பர். அழகு & பயன்படுத்தக் கூடிய க்ராஃப்ட். தெரிவுசெய்திருக்கும் வண்ணங்கள் பொருத்தமாக இருக்கு.
- இமா க்றிஸ்
valuthukal
its very useful to ladies .i appericate ur creativity.
Nadpathellam nalluthuke