தோழிகளுக்கு வணக்கம்.
நான் இப்பொழுது 4 மாதம் கர்ப்பமாக உள்ளேன். இது இரண்டாவது குழந்தை. என் முதல் குழந்தை 9 மாதம் வயிற்றில் இருக்கும்போது தண்ணீர் கொஞ்சம் குறைவாக உள்ளதாக கூறினார்கள். ஆனால் கடவுள் அருளால் சுக பிரசவம் ஆகிவிட்டது. இந்த குழந்தைக்கு அந்த மாதிரி பிரச்சினை வராமல் இருக்க அதாவது கர்ப்பபையில் தண்ணீர் அளவு குறையாமல் இருக்க இப்பொழுது இருந்தே எப்படி இருக்க வேண்டும், எடுத்து கொள்ள வேண்டிய உணவு முறைகள் பற்றி தயவுசெய்து கூறுங்கள் தோழிகளே.
amutha
அமுதா
கர்ப்ப பையில் தண்ணீர் குறைவது இப்போது பரவலாகி வருகிறது , நமது ஊரில் இதற்கு முக்கிய காரணம் அதிகப் படியான வெயில் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமாக உடலைப் பாது காப்பதின் மூலம் தண்ணீர் குறைவதை தடுக்கலாம்.
போதுமான அளவு தண்ணீர் குடித்து உடல் வறட்சி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
சத்தான உணவு உண்ண வேண்டும்
போதுமான அளவு தூக்கம்
இவற்றை கடை பிடித்துப் பாருங்கள்.
அமுதா
ஹாய் அமுதா இதேபோல் என் சித்திக்கு இருந்தது. டாக்டர் அவருக்கு தந்த அட்வைஸ் நிறைய மாதுளை ஜூஸ் குடிக்க சொன்னார்கள். நீங்களும் செய்யுங்கள். கடவுள் நிச்சயம் கருணை காட்டுவார்.
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
amutha
என் அக்காவிற்கும் தண்ணீர் அளவு குறைவா தான் இருந்தது. மாதுளம் ஜுஸ் ஆப்பிள்ஜுஸ் கொடுத்தாங்க.
by,
AnuGopi,
Be happy and Make others happy........
மிக்க நன்றி தோழிகளே
மிக்க நன்றி தோழிகளே