சன்னா மசாலா

தேதி: October 12, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (14 votes)

 

கொண்டைக்கடலை (வேக வைத்தது) - ஒரு கப்
உருளைக்கிழங்கு (சிறியது) - ஒன்று
வெங்காயம் - 2
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 3
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
அரைத்த தேங்காய் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
சீரகத் தூள் - அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 2
அன்னாசிப்பூ - ஒன்று
மல்லித் தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

கொண்டைக்கடலையை வேக வைத்துக் கொள்ளவும். உருளையையும் முக்கால் பதமாக வேக வைத்து சதுரமாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். மிளகாயை நடுவில் கீறி வைக்கவும். தக்காளியை மிக்ஸியில் விழுதாக தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, பெருஞ்சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும்.
கொண்டைக்கடலை, உருளையை சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
வதங்கியதும் தூள் வகைகள், உப்பு சேர்க்கவும்.
பின்னர் தக்காளி விழுது சேர்த்து நன்கு கலந்து விடவும். மசாலாவை 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு தேங்காய் விழுது சேர்த்து 5 நிமிடம் சிம்மில் வைக்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் மல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான சன்னா மசாலா தயார். இது சப்பாத்தி, பூரி, பரோட்டா, நாண் ஆகியவற்றிற்கு நல்ல காம்பினேஷன்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பரா இருக்குங்க குறிப்பும் படங்களும் :) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னுடைய குறிப்பை உடனே வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி...

மிக்க நன்றி அக்கா...ஒவ்வொரு குறிப்புக்கும் வாழ்த்தி உற்சாகப்படுத்துறீங்க...ரொம்ப நன்றி....

Romba nallaa iruku parka... Taste um supera irukum pola:) singapore to chennai channa masala oru parcel pls... vazhthukkal shameela...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

வாழ்த்துக்கு நன்றி பா..
நித்திக்கு இல்லாத பார்சலா??அனுப்பிட்டா போச்சு ...

சன்னா மசாலா அருமையாக செய்துஇருக்கீங்க,வழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க நன்றி முசி....

நானும் 2முறை ட்ரை பண்ணிருக்கேன். பட் கிரேவி பதம் வரலை,தக்காளியை நான் கட்பண்ணி போட்டுடுவேன்.நாளை இப்படி செய்து பார்த்துவிட்டு பதிவிடுறேன்பா......

சுவையான குறிப்பு.படங்கள் அழகா வந்திருக்கு, வாழ்த்துக்கள்!

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

இந்த முறையில செஞ்சு பாருங்க ரேணுகா ஹோட்டல் டேஸ்ட் கிடைக்கும்...செஞ்சு பார்த்துட்டு எப்படி இருந்துச்சுன்னு மறக்காம சொல்லுங்க பா...

அஸ்ஸலாமு அலைக்கும் ஹலிலா
வாழ்த்தியதற்க்கு ரொம்ப நன்றி மா...

சமீலா பார்க்கவே டிஷ் நல்லா வரும்னு நல்லா இருக்கும்னு தெரியுது நிச்சயம் செய்துடுவேன்பா. இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்

முகப்புல இருக்குர படத்துல புஷ் புஷ் பூரியோட சன்னா மசாலா சூப்பரா இருக்கு...படங்களும் தெளிவா இருக்கு...வாழ்த்துக்கள்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ஷமீலா
பசி நேரத்தில் பார்த்துட்டேன்.. அப்படியே அந்த பிளேட்டை இங்கே தந்திருங்க.. சூப்பர்.
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வாழ்த்திற்க்கு மிக்க நன்றி உமா....
செஞ்சு பார்த்துட்டு மறக்காம சொல்லுங்க....

வாழ்த்திற்க்கு ரொம்ப நன்றி இந்திரா..

மிக்க நன்றி ரம்யா...
உங்களுக்கு இல்லாததா தாராளமா எடுத்துக்கோங்க .....

ஷமீலா,

எளிமை+தெளிவு..
அசத்துங்க

என்றும் அன்புடன்,
கவிதா

சன்னா மசாலா சூப்பரா செய்து இருக்கீங்க,வழ்த்துக்கள்....
கண்டிப்பா ஒரு நாள் ட்ரைப் பன்றேன்...

ஹசீன்

பாராட்டிற்க்கு நன்றி கவிதா...

வாழ்த்தியதற்க்கு நன்றி ஹசீன்...செஞ்சு பார்த்துட்டு மறக்காம சொல்லுங்க....

சன்னா மசால் சனிக்கிழமை இரவு பூரிக்கு செய்தேன்பா......ரொம்ப நல்லா இருந்துச்சு.டேஸ்ட் சூப்பர்.......சும்மா இல்லை போன முறை நான் செய்தபோது சன்னா தனியாவும் குழம்பு தன்னிபோல இருந்தது.பட் இப்ப தக்காளி அரைத்து ஊத்தினதால கிரேவி பதமா நல்லா இருந்தது.....பாராட்டும் கிடைத்தது.
மிளகாய்பொடிக்கு பதிலா சன்னா மசால் யூஸ் பண்ணினேன்பா.காரம் குறைவாதான் சாப்பிடுவோம்.......வாழ்த்துக்கள்.....:-)

வீட்டில் பாராட்டு கிடைக்கிறத விட பெரிய சந்தோஷம் ஏது? ரொம்ப மகிழ்ச்சி ரேணுகா..என் குறிப்பை சமைத்து பார்த்து மறக்காம பதிவு பண்ணினதற்க்கு நன்றி...

வாவ் பார்த்தவுடனே வாயில நீர் ஊற வைக்குது போங்க!
வாழ்த்துக்கள் ஷமீ(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.