சீதாலக்ஷ்மி மேம்

தியானம் பற்றி தெரிந்தால் சொல்லுங்க ப்ளிஷ்

வந்த ஒரே நாளில் எத்தனை இழை??? இது போல் யாரையும் பெயர் சொல்லி அழைத்து தலைப்பிடாதீங்க, எல்லாரும் விரும்ப மாட்டாங்க. நீங்க அழைத்தது படித்தவை ரசித்தவை எழுதும் சீதாலஷ்மி மேடம் என்றால் தலைப்பை மாற்றுங்க. கூடவே இது போல் விசயங்களுக்கு சின்ன சின்ன சந்தேகங்கள் என்று ஒரு இழை இருக்கு... அங்கையே கேளுங்க. எல்லாரோடும் பேச விரும்பினால் அரட்டை இழை மேல தான் இருக்கு... பேசுங்க. தனி தனி இழை துவங்க வேண்டாம் நபிஷா. மற்ற இழைகள் உள்ளே போய்விடும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு நமீஷா,

என் பெயரைக் குறிப்பிட்டு இழையைத் தொடங்கியிருப்பதைப் பார்த்து ஆச்சரியமாகிட்டுது!

தியானம் - மனசை லகுவாக்கணும், அமைதி கிடைக்கணும்.

உங்க மத வழக்கப்படி நீங்க ஐந்து முறை தொழுகை நடத்துவீங்கதானே. அதுவே தியானம்தான். சிந்தனையை ஒருமுகப்படுத்தி, கவனச் சிதறல் இல்லாமல், பிரார்த்தனை செய்வது சிறந்த தியானம்தானே.

சின்னக் குழந்தைகள் தூங்கும்போது பார்த்திருப்பீங்க, சீராக மூச்சு விடுவாங்க. நாமும் அதே போல நம்முடைய மூச்சு சீராக இருக்கும்படி பார்த்துக் கொண்டாலே போதும். கோபப்படும்போது, டென்ஷன் ஆகும்போது, மூச்சு சீராக இல்லாம, வேகமாக, கொஞ்சம் தாறு மாறாக ஆகிற மாதிரி உணர்ந்தால், உடனே ஒரு இடத்தில் ரிலாக்ஸ் ஆக உட்கார்ந்து, மூச்சை சீராக வெளிப்படுத்துங்க. இதை பழக்கப் படுத்திகிட்டா, தியானம் செய்வதும் பழகிடும்.

எனக்குத் தெரிந்ததை சொல்லியிருக்கேன். மற்ற தோழிகளும் சொல்வாங்கன்னு நினைக்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

ரொம்ப ரொம்ப நன்றிங்க மேடம்.நான் இழை அனுப்புவது புதுசு.அது மட்டுமில்லாமல் செல்போனில் இருந்து அனுப்புகிறேன்.ஆதலால் தவறு ஏதாவது இருந்தால் மன்னித்து விடுங்கள்.இழையில் இருக்கும் அனைவரும் எனக்கு சொல்லிக்கொடுத்து என்னை எங்கேயோ கொண்டு போயிருங்கள்.அன்புடன் நபிஷா.

மேலும் சில பதிவுகள்