பிரார்த்தனை

தாய்மை என்ற வரத்துக்காக இங்கு அறுசுவையில் நிறைய தோழிகள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் எண்ணம் ஈடேற இறைவனிடம் அனைவரும் பிரார்த்திப்போம். மேலும் மேலும் பிரார்த்திப்போம்.

எனக்கு தெரிந்து இங்க குழந்தை வரம் வேண்டி கொண்டு இருக்கும் தோழிகள் பலர்.
சாதிகா, கௌரி, ஷமீஹா, கார்த்திகா, இன்னும் நிறைய தோழிகள்.... அப்பறம் நான்
பெயர் சொல்லலன்னு தப்ப நினைக்க வேண்டாம்....
எனக்கு மட்டும் கேட்டா அது ரொம்ப சுயநலம்.
இறைவனிடம் அனைவரும் வேண்டிகோங்க.

இறைவனிடம் நாம் நம் அனைத்து தோழிகளுக்காகவும் பிரார்த்திப்போம்னு சொன்னேன்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

அறுசுவை தோழிகள் மட்டும் இல்லபா குழந்தை இல்லாத நிறைய தோழிகள் இருக்கிறார்கள் அனைவருக்காகவும் நம் ப்ரார்த்தனை இருக்கட்டும். தோழிகளே தயவு செய்து இதை செய்யுங்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.

குழந்தை பெற்றுக்கொள்ள தாமதாகும் அனைத்து தோழிகளுக்காகவும் இறைவன் வெகு வெகு........சீக்கிரத்தில் தாய்மை எனும் அந்தஸ்தை தரவேண்டும் என நானும் பிரார்த்திக்கின்றேன்.

பரணிகா:)

Indha ulagil kuzhandhai varam vendi kaathukondirukum nam thozhi's anaivarukkum seekirame kuzhandhai varam pera en prarthanaigal, vendudhalgal, vazhthukkal...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மிகவும் நன்றி தோளிகளே...உங்கலின் வார்த்தைகல் நிரைவேரினால் அதை விட மகிழ்ச்சி இப் பிரப்பில் எங்கலுக்கு வேறெதுவும் இல்லை..மிகவும் மகிழ்சி..

குழந்தை வரனுக்காக காத்திருக்கும் அறுசுவையில் எனது நெருங்கிய அனைத்து அனைத்து தோழிகளும் சீக்கிரமே தாய்மை என்னும் அற்புத பேற்றை பெற வேண்டும் என்ற எனது அடிமன பிரார்த்தனைகளை வைக்கிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

குழந்தைக்காக காத்திருக்கும் அனைத்து தம்பதியருக்கும் விரைவில் குழந்தை கிடைக்க என்னுடய பிரார்த்தனைகள் .....................

ஷமீனா,

எங்கள் சந்தோசத்தில் அக்கறை கொண்டு எங்களுக்காக தனி இழை துவங்கினதுக்கு ரொம்ப நன்றி ஷமீனா.

ஷ்கன்தா,

உங்கள் பெயரோடு மறக்காமல் எங்கள் பெயரையும் சேர்த்து சொன்னதற்க்கு ரொம்ப நன்றி ஷ்கன்தா.

என்தோழிகளுக்கு,

எங்களுக்காக பிராத்தித்த இன்னும் பிராத்திக்க போற அனைத்து தோழிகளுக்கும் என் மனமார்ந்த நன்றி.
புது நம்பிக்கை வந்தார்போல் உள்ளது.

SSaifudeen:)

என் அறுசுவை தோழிகளின் எண்ணம் (நன் மக்கட்பேறு) விரைவில் ஈடேற இந்த அன்புத் தோழியின் ப்ரார்த்தனை என்றும் உண்டு.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மேலும் சில பதிவுகள்