வாங்க பேசலாம்

புது இழை ஆரம்பிச்சாச்சு எல்லாரும் இங்க வாங்க. பதிவு தமிழில் மட்டுமே இருக்கவேண்டும். நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம்

எனக்கு தெரிய வில்லை கௌரி, அனுபவம் உள்ள தோழி யாரவது பதில் சொல்லுவாங்க

சமீஹா... நானும் இனிம தொழுகை எடுத்ததும் தினமும் ஒதுறேன். நீங்க சொல்லுரது உண்மைதான் எல்லாம் அவன் கைல தான் இருக்கு(பிறப்பும்,இறப்பும்?

கெளரி..சில பேருக்கு கருமுட்டை முதல் 10 நாள்ல வெளிய வந்துரும்.அப்ப contact அவங இருந்தாக conceive ஆவாங்க. நீங்க டாக்டர்ட போரதால உங்களுக்கு எப்ப ovalation ஆகுதுனு தெரிந்திருக்கும்ல?

எனக்கு ஒரு ஹோமியோபதி டாக்டர் சொன்னது....

இப்போ நமக்கு 28 நாள்களுக்கு ஒரு முறை பீரியட் வருதுன்னு வச்சிக்குவோம் அப்போ நமக்கு 14வது நாள் கருமுட்டை வெடிக்குமாம்.
30 நாட்களுக்கு ஒன்சா இருந்தால் 15வது நாளாம்...

ஆனால் நமக்கு தான் சில மாதம் 28,29சில மாதம் 32 கூட ஆகுது .சோ இது நமக்கு பீரியட் வந்த பிறகு தான் தெரியுது அப்படினா நமக்கு இந்த நாள்ல கருமுட்டை வெடிச்சிருக்குன்னு...

அதுனாலதான் முதல்ல நம்ம பீரியட் சர்குலேசனை ஒழுங்கா குறைந்த பட்ச்சத்திலிருந்து அதிக பட்ச்சம் வரை கணக்கு வச்சிகிட்டு அதுக்கு தகுந்தாற்ப்போல் கான்டேக்ட் வச்சிக்க சொல்லுராங்க..

///நான் சொன்னதில் ஏதும் தவறு இருந்தால் தெரிந்த தோழிகள் மறக்காமல் பதிவிடவும்...///

ஆனால் கௌரி நீங்க சொன்ன 5 டேய் நானும் கேள்வி பட்டு இருக்கிறேன்...என் சிஸ்டர் எனக்கு இப்படிதான் அட்வைஸ் பண்ணுனா

SSaifudeen:)

சாதிக்கா,சமீஹா,ஸ்கந்தா,கவுரி அனைவரும் நலமா?

ஹசீன்

வாங்க ஹசீன். நலம். நீங்க எப்படி இருக்கீங்க. உங்களை பற்றி சொல்லுங்க

ஹசீன் வாங்க என்ன இந்த நேரத்துல.

நான் வந்த உடனே உங்களை விசாரிச்சேனே கவனிக்கலையா?

என்னை பற்றி சொல்ல என்ன இருக்கு...
நானும் உங்களை மாதிரி ஓர் உயிருக்கு ஏங்கும் ஓர் உயிரு தான் ஷ்கன்தா.
என்ன!நீங்க வெளினாட்டில் உங்க கணவரோட இருக்கீங்க நான் இந்தியாவுல என் கணவரோட இருக்கேன் அவ்வளவு தான்.

SSaifudeen:)

இல்ல உங்க உடம்பு சரி ஆச்சானு கேட்டேனே

அஸ்ஸலாமு அலைக்கும் ஹஸீன்.
அல்ஹம்துலில்லாஹ் நாங்க நல்லா இருக்கோம்.
நீங்க,ஹனு,அண்ணாலாம் எப்படி இருக்கீங்க?

SSaifudeen:)

நான் அப்ப உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்டேன் நீங்க கவனிக்கலனு நினைக்குறேன்.உம்ராக்கு தனியா வந்தாலும்(ladies)க்கு எந்த பிரச்சனையும் இல்லல.

மேலும் சில பதிவுகள்