பட்டிமன்றம் -76 குடும்ப விரிசல்களுக்கு காரணம் யார்???

அறுசுவை தோழர் / தோழிகளே,அனைவருக்கும் என் அன்பார்ந்த வணக்கங்கள்.
இந்த பட்டிமன்றம் 76 ஐ நடுவராக ஏற்று நடத்த வாய்ப்பு குடுத்தமைக்கு என் நன்றிகள் பல.
((நான்கு நாளைக்கி முன்னாடி அரட்டைல பேசினதோட தாக்கம் தான் நான் இந்த தலைப்ப தேர்ந்தெடுக்க காரணம்))
இப்போ நேரா விஷயத்துக்கு வரேன். இந்த வார நம் பட்டி மன்ற தலைப்பு இதோ
***கணவனின் உறவினர்கள் குடும்ப விரிசல்களுக்கு காரணமா ?மனைவியின் உறவினர்கள் குடும்ப விரிசல்களுக்கு காரணமா ?***
தலைப்பை கொடுத்த தோழி பாரதிமதனசெல்வம் அவர்களுக்கு நன்றிகள்.தலைப்பிற்கு விளக்கம் தேவை இல்லைனு நினைக்கிறேன் இருந்தாலும் சுருக்கமா சொல்றேன். நம்ம குடும்பத்துல நடக்குற சண்டை, சச்சரவு அதனால வர மனஸ்தாபம் பிரிவு இதற்கெல்லாம் காரணம் கணவரோட உறவுகளா? மனைவியின் உறவுகளா? இந்த உறவுகள்ல கணவன்,மனைவியோட அம்மா, அப்பா, அக்கா, தங்கை ,அண்ணன், தம்பி,அத்தை ,மாமா, சித்தி,சித்தப்பா, பெரியம்மா ,பெரியப்பா ,தாத்தா ,பாட்டி இன்னும் யாரெல்லாம் இருக்காங்களோ எல்லாரையும் சேர்த்துக்கலாம்.
என்ன எல்லாரும் சண்ட போட ரெடியா? வாங்க வாங்க சீக்கிரம் வந்து உங்க வாதங்களை ஆரம்பிங்க....
பட்டி விதிமுறைகள் இதோ...
****************************
1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.
3.பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
4.நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இருக்காது.
5.அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.
6.அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

பட்டி மன்ற தோழிகள் எல்லாரும் வாங்க வந்து உங்க வாதங்களை ஆரம்பிங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

கண்டிப்பாக கணவர் குடும்பத்தினரே. ஏனெனில் மனைவி குடும்பத்தார் யாரும் கணவன் மனைவிக்குள் பிரச்சனைவர விரும்புவதில்லை. தன் மகளின் சந்தொஷமே பெரிது என நினைப்பார்கள். ஆனால் கணவன் வீட்டார் அப்படி பெரும்பாலும் நினைப்பதில்லை.பெண்ணை பெற்றவர்கள் விட்டு கொடுத்தே செல்வார்கள். ஆனால் ஆணை பெற்றவர்கள் கணவன் மனைவிக்குள் கோர்த்துவிட்டு வேடிக்கைப் பார்ப்பார்கள். நாம் ஒரே பெண்ணாக பெற்றோருக்கு இருந்தாலும் அவர்களை நாம் கவனிக்கக்கூட விட மாட்டார்கள். அப்படியிருந்தாலும் மனைவி வீட்டார் என்ன சொல்வார்கள் தெரியுமா? எங்களை பத்தி கவலைபடாதே. நீ சந்தோஷமாய் இருந்தால் போதும் என்று சொல்லும் பெற்றோரே அதிகம். ஆனால் மருமகளுக்காக மகனின் வாழ்வை கெடுத்த மாமியார் பலருண்டு.அண்ணன், தம்பியிடம் பணம் பெற அவன் மனைவியை விரட்டிய நாத்தனார் பலருண்டு. இது போல் தம்பி அல்லது அண்ணன் மனைவியை தவறாக பார்த்த கொழுந்தனும் உண்டு. இவற்றையெல்லாம் விட பெரிய கொடுமை ஒன்று உள்ளது குழந்தை இல்லை என்று தன் மகனுக்கு மறுமணம் செய்துவைக்க நினைப்பது. இந்த செயலை நிச்சயம் பெண்ணை பெற்றவர்கள் செய்ய மாட்டார்கள். எங்காவது மகளுக்கு குழந்தை இல்லை என்று மறுமணம் செய்த பெற்றோரை பார்த்ததுண்டா? இல்லையே. இதனால் நான் தெரிவிப்பது என்னவெறால் குடும்ப விரிசல்களுக்கு முழுக்க முழுக்க காரணம் கணவன் வீட்டாரே என்று கூறி என் வாதத்தை ஆரம்பம் செய்கிறேன். வாருங்கள் வதாட......

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

நல்ல தலைப்பை தந்த தோழி பாரதிக்கும், மனக்குமுறலை கொட்ட சிறந்ததொரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்த தோழியான நடுவருக்கும் என் நன்றிகள். வாழ்த்துக்கள்..

தலைப்பில் மூன்றாவதாக ஒன்றையும் சேர்த்திருந்தால் சிறப்பாக இருந்திருக்குமோ என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம். அது யாதெனில், கணவர் குடும்பத்தாராலோ, மனைவி குடும்பத்தாராலோ குடும்பத்தில் விரிசல் ஏற்படாத குடும்பங்களில் பெரும்பாலும் தம்பதியிரிடையே வீரிசல் ஏற்படும். அதற்கு பெரும்பாலும் பொறுப்பு வகிப்பவர்கள் பெண்களா? ஆண்களா? என்பதே. இதையும் சேர்த்திருந்தால் தலைப்பு அனுமார் வாலாக நீண்டிருக்கும்.

நானும் மெஜாரிட்டி எந்த அணிக்கு அதிகம் உண்டோ.. அந்த அணியின் பக்கமே சாய விரும்புகிறேன். ஆம்.. கணவர் குடும்பத்தாரே இன்றைய காலக்கட்டத்தில் நூற்றுக்கு தொண்ணூறு சதவிகித குடும்பத்தில் விரிசலை உண்டாக்கி கொண்டிருக்கிறார்கள். அதில் படித்தவர், படிக்காதவர் என்ற பாரபட்சமின்றி படித்தவர்களும் படிக்காத மாக்களாகவே ஊறி கிடக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. பாபு அண்ணா வாதங்களை பார்த்து பொங்கி வந்துடாதீங்க... நாங்க சம்பந்தப்பட்டவங்களை பத்தி மட்டும் தான் சொல்றோம் :) ஒரு சில ஆண்களை பற்றி மட்டுமே என்பதை மேற்கோளிட்டு சொல்ல விரும்புகிறேன். இனி தோழிகளின் வாதங்களை பொறுத்து என் வாதங்களை வைக்கிறேன்.. ஜூஸை ஊத்தி சீட்டை பிடிச்சாச்சு... இனி யாராவது மூக்கை வச்சு என் இடத்தை பிடிக்க முடியுங்கறீங்க :)

இனி பட்டியில் கலந்து பட்டையை கிளப்பவிருக்கும் அனைத்து தோழிகளுக்கும் என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

புது நடுவருக்கு வாழ்த்துக்கள் :)
பொதுவாக ஒரு குடும்பத்தினர் தான் விரிசலுக்கு காரணம் என்று சொல்வது சற்று கடினம் தான்... ஒவ்வொரு குடும்பத்திலும் அது வேறுபடும், ஆனால் பெரும்பான்மையாக நடக்கும் விஷயங்களை கொண்டு பார்த்தால் விரிசல்களுக்கு முக்கிய காரணம் மனைவியின் குடும்பத்தினரே :)

எந்த குடும்பத்திலும், மேலோட்டமாக பார்த்தால் எப்படி தோன்றினாலும், உண்மையில் அதன் ஆணிவேராக இருப்பது பெண் அதாவது மனைவி தான். மனைவி நினைத்தால் ஒரு சின்ன விஷயத்தை பூதாகரமானதாக மாற்றவும் முடியும், அதே போல் பெரிய விஷயத்தை ஒன்றும் இல்லாததாக ஊதி தள்ளவும் முடியும்.

பொதுவாகவே மாமியாருக்கும் மருமகளுக்கும் பல கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு தான். குடும்பத்தில் ஏற்படும் இது போன்ற இயல்பான, இயல்பில்லாத, சவால்கள் / பிரச்சனைகள் அனைத்தும் எந்த விதமாக, எந்த பக்கமாக செல்கின்றன என்பதை நிர்ணயிப்பது மனைவிக்கு நெருக்கமான தாய் வீட்டில் இருந்து கிடைக்கும் டிப்ஸ் வைத்து தான். மாதம் ஒரு ஆயிரம் ரூபாய் ஏதேனும் சீட்டில் சேர்ந்து சேமித்தால் நல்லது என்று மாமியார் சொல்லும் போது யோசிக்க வேண்டிய ஒன்றாக தோன்றும் விஷயம் அதே கருத்தை அம்மா கொஞ்சம் மாற்றி சொல்லும் போது உடனே சரியானதாக தோன்றுவது இல்லையா?

சரி இவ்வளவு ஏன் முக்கியமான, இல்லை இல்லை, முக்கியமில்லாத விஷயங்களுக்கு கூட, அம்மா, அக்கா, தங்கச்சி என்று பிறந்த வீட்டு நெருங்கிய உறவினரிடம் அறிவுரை கேட்டு நடக்காதவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்ன? அதிர்ஷ்டவசமாக அந்த அறிவுரைகள் எல்லாம் புயலை கிளப்பாதவையாக இருந்தால் பிரச்சனை இல்லை, அப்படி இல்லையென்றால் கொஞ்ச நாளுக்கு கஷ்டம் தான்!

அது என்னவோ பெண்கள் மட்டும் திருமணத்திற்கு பிறகும் அம்மாவிடம், பிடித்தவர்களிடம் எல்லாம் யோசனை / அறிவுரை கேட்கலாம்... அது போல் நடக்கலாம்... தப்பே இல்லை... ஆனால் ஆண்கள் மட்டும் அதையே செய்தால், மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்களாக, பெற்றவர் சொல் பேச்சு கேட்டு நடக்கும் பொம்மைகளாக சித்தரிக்க படுகிறார்கள்... இதன் லாஜிக் தான் புரியவில்லை.

ஒரு குடுமபத்தின் அமைதிக்கு முக்கிய காரணமானவள் பெண்.... அவளை எளிதாக மனதை மாற்ற வைக்க கூடிய வல்லமை பெற்றவர்கள் அவளின் குடும்பத்தினரே. ஆகவே பெரும்பாலான குடும்பத்தில் ஏற்படும் விரிசல்களுக்கு காரணம் மனைவியின் குடும்பத்தினரே.

மேலும் பல பாயின்ட்டுகளோடு நேரம் கிடைக்கும் போது வருகிறேன் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

அன்பான நடுவருக்கும் தோழிகளுக்கும் வணக்கங்கள். நல்லா குஸ்தி ப்போடும் தலைப்பா தேர்ந்தெடுத்திருக்கீங்க. தலைப்பை கொடுத்த பாரதிக்கும் தேர்ந்தெடுத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

ஆஹா என்னை மாட்டி விடுற தலைப்பா இருக்கே :). ஏன்னா என் தனிப்பட்ட விஷயத்தில் ரெண்டு குடும்பமுமே பிரச்சினையா இல்லை. அதனால் எந்த பக்கம் பேசறதுன்னு குழப்பம் :). அதுக்காக பட்டிமன்றத்தில் பங்கு பெறுவதை தவைர்க்க முடியுமா???. பொதுவாக யோசித்துப் பார்த்தால் மனைவியின் குடும்ப உறுப்பினர்களே விரிசல்களுக்கு காரணமாக இருக்கிறார்கள்.

விரைவில் வாதங்களுடன் வருகிறேன் நடுவரே.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

முதல் முறையாக அரியணையில் வீற்றிருக்கும் அன்புத்ததோழிக்கு வாழ்த்துக்கள்+வணக்கம். பூக்கோள வரைபடத்தில் உள்ள இண்டு,இடுக்கு,சந்து,பொந்து என அத்துணை இடங்களிலும் கோலோச்சிக்கொண்டிருக்கும் என் அறுசுவை தோழிகள் (எதிரணி, சக அணி பார்வையாளர்கள்)அனைவருக்கும் வணக்கம்.
கண்டிப்பா பிரச்சினக்கு காரணம் கணவர் ஊட்டு ஆளுங்களேனு வாதட வந்துள்ளேன். வாதம் பொறவு வரும்.
தலைப்பு கொடுத்த தோழிக்கு வாழ்த்துக்கள்.
மனச வெளக்கி கலழுவறமாதிரி தலைப்பு கொடுத்து இருக்கீங்க. ஆயுத பூஜைக்கு வீட்ட மட்டும் அல்ல மனசில் இருக்கிற கழிவுகளையும் நீக்கிறலாமே!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நடுவருக்கும் மற்றும் என் முகம் பாரா தோழிகளுக்கும் அன்பு காலை வணக்கம் :)

கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சனை கணவன் வீட்டு ஆளுங்களால தான் வரும்.

1 . மாமியார் பிரச்சனை - தன் மகனை எங்கே பிரித்து விடுவாளோ என்று எண்ணி அவுங்க பிரச்சனை பண்ணுவாங்க
2 . கவுரவம் - நாங்க பையனை பெத்தவுங்க, பையன் வீட்டு காரங்க அப்படி இப்படின்னு சொல்லி பெருசா அலட்டிகிறது. சின்ன விஷயத்த கூட ஊதி ஊதி பெருசா பண்றது.

பாவங்க பொண்ணு வீட்டு காரங்க எல்ல விஷயத்துலேயும் பயந்து பயந்து தான் நடந்துக்கணும். என்ன பொண்ண பெத்துட்டாங்கள்ள. அவ லைப் நல்லா இருக்கனும்ன்னு நினைத்து எல்லாத்தையும் பொறுத்து போவாங்க. ஆனா பையன் வீட்டு காரங்க தலை மேல ஏறி உடகார்ந்து ஆடு ஆடுன்னு ஒரே ஆட்டம் போடுவாங்க.

பிறகு வருகிரேன் ....

ஜென்னிவினோ

Dare To Paly With Life

என் இனிய நடுவர் தோழிக்கு அன்பு வணக்கங்கள்... அருமையான தலைப்பை கொடுத்த பாரதி அவர்களுக்கும், அதை தேர்ந்தெடுத்த நடுவர் தோழிக்கும் பாராட்டுகள்..

குடும்ப விரிசல்களுக்கு காரணம் கணவர் வீட்டாரா, மனைவி வீட்டாரா எனக் கேட்டால் நான் சொல்வது கணவன் வீட்டாரே என்று தான்.

குடும்பத்திற்குள் விரிசல் விழாமல் இருக்க முதல்ல கணவன் மனைவி இடையே பாசமும், அன்பும் நிரம்பி இருக்க வேண்டும். அன்யோன்யம் அதிகரிக்க வேண்டும். இப்படி இருக்குறதை பார்க்கும் போது மனைவி வீட்டார் மனமெங்கும் பூரிப்பு அடைவர்.. ஆனா இடையே கணவன் வீட்டார் பார்க்கும் போது முதல்ல அவங்களுக்கு தோன்றுறது என்னனா மகன் தன்னை விட்டு விலகி மனைவியிடம் பாசமாக இருப்பதாக நினைத்து வீட்டிற்கு வந்த மருமகளை வில்லி மாதிரி நினைக்க ஆரம்பிச்சுடுவாங்க... ஏங்க... நான் தெரியாம தான் கேட்கிறேன்.. மகன் சந்தோஷமா இருக்க தானே ஒரு பெண்ணை பார்த்து திருமணம் முடித்து வைக்கிறீர்கள்!!! அப்படி சந்தோஷமா இருக்கும் போது அதை ஏன் உங்களால தாங்கிக்க முடியலை

புதுசா ஒரு இடத்துல வாழ வர்ற பொண்ணுக்கிட்ட நிறையும் இருக்கும். குறையும் இருக்கும்.. கல்யாணம் ஆகி வந்த உடனே கணவன் வீட்டில் எல்லோர் மேலயும் பாசம் வருவது கடினம் தான்.. முதல்ல அந்த பொண்ணுக்கு இருக்க தயக்கத்தை போக்கி இது தான் உன் வீடுனு புரிய வைக்கணும்.. அதை விட்டுட்டு வந்ததும் வராததுமா அவ கிட்ட இருக்க குறையை தான் பெரும்பாலும் சுட்டி காட்டுறாங்க. அது முதல்ல ரொம்ப தப்பு.. இதுனால மிஞ்சுறது என்னவோ வெறுப்பு மட்டும் தான்.. முதல்ல உங்க பாசத்தை காட்டுங்க... அப்புறம் அந்த பொண்ணுக்கிட்ட இருக்க நல்ல குணங்களை பாராட்டுங்க.. பிறந்த வீட்டுல இருந்த ஒரு சகஜ நிலைமையை உருவாக்குங்க. அதுக்கு பின்னாடி கொஞ்சம் கொஞ்சமா குறைகளை நிறைகளா மாத்த சொல்லுங்க. இப்படி செய்யும் போது ஏன் குடும்பத்தில் விரிசல் வர போகுது?

குழந்தை இல்லைனா அதுக்கு காரணம் மகனா கூட இருக்கலாம். அதை கணவன் வீட்டார் புரிஞ்சுக்கிறதே இல்லை..எதுக்கு எடுத்தாலும் வாழ வந்த பொண்ணை குறை சொல்லியே பழக்கப்பட்டுட்டாங்க...

மருமகளை திட்டுறதோட நிறுத்தாம, உங்க வீட்டுல இப்படி தான் சொல்லிக் கொடுத்தாங்களா? னு மருமகள் வீட்டாரையும் குறை கூறுவது வழக்கம் ஆகிருச்சு. அப்புறம் முக்கியமான விஷயம் என்ன னா ஆளு (மனைவி) இல்லாதப்ப தன் மகனிடம் இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி கொடுத்து இருவருக்கும் இடையே சண்டை வர வைத்து வேடிக்கை பார்க்கிறது யாருங்கோ??

வீட்டுக்கு வந்த மருமகள் தன் வீடா நினைச்சு எல்லார் மேலயும் என்ன சண்டை வந்தாலும் பாசமா இருக்கணும் னு நினைக்கிறங்க!! ஆனா அதையே மகன் தன் மாமனார் , மாமியார் மேல பாசம் காட்டுனா இவங்களுக்கு ஏன் தாங்கிக்க முடியலை??? பெண்ணிற்கு ஒரு நியாயம். பையனுக்கு ஒரு நியாயமா? இது என்னங்க அநியாயமா இருக்கு !!!

இப்படி பிரச்சனைகளுக்கு பிள்ளையார் சுழி போடுவது கண்டிப்பாக கணவனின் உறவினர்களே!!!

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

அன்னைவருக்கும் என் முதற்கன் வணக்கம். இதுவரை நடந்த எல்லா பட்டியிலும் பங்கேற்க மிகுந்த ஆசை . ஆனால் இதுவெ என் முதல் பட்டி பதிவு.
நடுவருக்கும் , தலைப்பு தந்த தோழிக்கும் நன்றிகள் பல.

குடும்பத்து விரிசல்கலுக்கு முக்கிய காரணம் கணவன் குடும்பத்து உறவே.

மனைவி வீட்டார் எல்லோரும் தன் பெண்ணிண் வாழ்க்கை நல்வழியே சென்றால் மகிழ்வதோடு தன் வேலையை பார்க்க போவர். அவர்களுக்கு அவர் வீட்டு பரச்சினை ஆயிரம் இருக்க பெண் வீட்டு ப்ரச்சினை பற்றி யோசிக்க நேரம் ஏது?

ஆனால் கணவன் வீட்டிலோ தன் பிள்ளை ,தன் அண்ணன் என்று யோசித்து யோசித்து, ப்ரச்சினையை உதி பெரிதாக்குவர்.இதில் உரிமை போராட்டம் வேறு.

idhuvum kadanthu pogum

நடுவருக்கு வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள்........கணவன் குடும்பத்தின்னரே விரிசல்கKஉக்கு காரணமு பேச வந்திருக்கேன்.....வாதங்களை ரெடி பண்ணிட்டு வருகிறேன் மீண்டும்........

மேலும் சில பதிவுகள்