பனீர் பீஸ் மசாலா

தேதி: October 16, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (8 votes)

 

வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
பட்டாணி - அரை கப்
பனீர் - ஒரு கப்
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - கால் தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். மிளகாயை கீறி வைக்கவும். தக்காளியை மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்க்கவும்.
பச்சை வாசம் போனதும் பட்டாணி சேர்த்து வதக்கி தூள் வகைகள், உப்பு சேர்க்கவும்.
நன்கு வதங்கியதும் தக்காளி விழுது சேர்க்கவும்.
அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
ஒரு கடாயில் 2 கரண்டி எண்ணெய் ஊற்றி பனீர் துண்டுகளை பொரித்து எடுக்கவும்.
மசாலாவில் எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து பனீர் துண்டுகளை அதில் சேர்க்கவும்.
சுவையான பனீர் பீஸ் மசாலா ரெடி. இது சப்பாத்தி, நாண், பரோட்டா ஆகியவற்றுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அட்மின்
எனது குறிப்பை உடனே வெளியிட்ட அட்மின் குழுவினற்க்கு மனமார்ந்த நன்றி....

பீஸ் மசாலா அருமை.பீஸ் & பன்னீர் புது காம்பினேஷன்...
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்.

All For The Best

வாழ்த்துக்கள் ஷமீ(:- ஒரே கலக்கல் தான் போங்க!
விருப்பப்பட்டியலில் சேர்த்தாச்சு.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நான் இன்று உங்களுடைய பன்னீர் பீஸ் மசாலா செய்தேன்.மிகவும் அருமையாக இருந்தது.ஆனால் சுலபமாக செய்ய கூடியது. சொல்லி கொடுத்ததிற்கு மிகவும் நன்றி.வாழ்த்துக்கள் ஷமீலா.

ஒரு சந்தேகம் நான் செய்ததில் வெங்காயம் மிகவும் சிறியதாக நறுக்கி நல்லா வதக்கி கொதிக்க விட்டேன்.ஆனால் வெங்காயம் கண் முழித்து கொண்டிருந்தது. ஏன் அப்படி?

Expectation lead to Disappointment

ஷமீலா,
எளிமையான முறையில் அழகா கொடுத்து இருக்கீங்க..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

hai shameela... enkita paneer irukku last week adha oil la porichu edthu oru kuruma ready panunen. ayyo da idhu varaikum naan avlo kevalama paneer senjadhu illa. indha kurippu nalla colour full ah kuduthirukinga. kandipa try pannitu soldren. naan toffu soya paneer use pandren. neengalum idhey dhan use panuningala. bcoz paneer layum variety irukkudha? enaku therila adhan kekuren....

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

வாழ்த்திற்க்கு நன்றி பானு...
இந்த காம்பினேஷன் சூப்பரா இருக்கும்...அவசியம் செஞ்சு பாருங்க....

வாழ்த்திற்க்கும் ,விருப்ப பட்டியலில் சேர்த்ததற்க்கும் நன்றி செல்வி.

வாழ்த்திற்க்கும் ,செய்து பார்த்துட்டு பதிவு போட்டதற்க்கும் மிக்க சந்தோஷம் மீனா....
நீங்க தாளிக்கும் போது வெங்காயம் சரியா வதங்காமல் இருந்துருக்கும்...அடுத்த முறை செய்யும் போது நன்கு வதங்க விடுங்க....நல்லா இருக்கும்....

ரொம்ப நன்றி கவிதா......

ரேவதி
நான் உபயோகிச்சிருக்கிற பனீர் பாலில் இருந்து செய்யபடுவது பா..சோயாவில் இருந்து தயாரிக்கபடும் பனீரை டோஃபு என்று சொல்வோம்...நான் அது எப்போவாவது தான் உபயோகிப்பேன்..அதுல ருசி அவ்வளவாக இருக்காது...
நீங்க பாலில் செய்யபடும் பனீரில் செஞ்சு பாருங்க நன்றாக வரும்...நன்றி..

பன்னீர் பீஸ் மசாலா மிகவும் அருமை.நல்ல குறிப்பு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

k sis. thk u for ur explanation...

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

ஷமிலா பனீர் பீஸ் மசாலா அருமை செய்துபார்த்து விட்டு சொல்கிறேன். இன்னும் அருமையான குறிப்புகள் வர வாழ்த்துக்கள்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

Paneer peas masala supero super pa... Kandippa seiven senjittu vandhu solven... Thanks shameela vazhthukkal:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

வாழ்த்திற்க்கு மிக்க நன்றி முசி....நேரம் கிடைச்சா செஞ்சு பாருங்க...

வாழ்த்திற்க்கு மிக்க நன்றி ஹலிலா....செஞ்சு பார்த்துட்டு மறக்காம சொல்லுங்க மா...

வாழ்த்திற்க்கு மிக்க நன்றி நித்தி....செஞ்சு பார்த்துட்டு மறக்காம சொல்லுங்க பா...

நல்ல குறிப்பு :) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி அக்கா...

paneer masala super.....

ஹலோ சமீலா

நலமா? பனீர் பீஸ் மசாலா மிகவும் அருமை. செய்து சாப்பிட்டுவிட்டு என் தோழிக்கும் சொல்லியாச்சு அவங்க வீட்டிலும், எங்க வீட்டிலும் ஒரே பாராட்டு மழைதான். இது அனைத்தும் உங்களுக்கே. பின்னுட்டம் தாமதமாக கொடுத்ததுக்கு மன்னிக்கவும். விருப்ப பட்டியலிலும் சேர்த்தாச்சு. இதுபோல் நிறைய குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.

அன்புடன்
மேனகா

மேனகா
இப்பொழுது தான் உங்க பதிவை பார்த்தேன்....உங்க வீட்டிலும்,தோழி வீட்டிலும் அனைவருக்கும் பிடித்திருப்பதே சந்தோஷமா இருக்கு.....
வாழ்த்துக்கு நன்றி மா...