9 மாத குழந்தை

9 மாத குழந்தைக்கு பசி எடுக்க என்ன செய்ய வென்டும்?

பசியெடுக்க வைக்க எதுவும் செய்யக் கூடாதாம்..நல்லதில்லைன்னு சொல்றாங்க..நீங்க பசிக்கும் வரை அப்படியே விடுங்க..என் மகளும் அப்படி தான் இருந்தாள் பெரிசானா சரியாகிடும்..ஒரு அஞ்சு வயசு போல பசியெடுக்க ஆரம்பிச்சிடும் அதுவரை ஃபோர்ஸ் பண்ணி கொடுக்காம பசிக்கிறப்ப மட்டும் கொடுங்க அதன் அளவு தேவை எவ்வளவு அவ்வளவு மட்டும் கொடுங்க

குழந்தைகளுக்கு பசிக்க மருந்து எதுவும் உண்மையில் இல்லைங்க. சிலர் கொடுப்பார்கள், ஆனால் அதுக்கு ஒன்னும் பலனிருக்காதுன்னு டாக்டர்ஸே சொல்லிடுறாங்க. ஒரே வழி தான் நல்லா பசிக்க... நல்ல விளையாட வைங்க. கையில் தூக்கி வைக்காம, எதாவது மூவ்மண்ட்ஸ் இருக்கும் படி, விளையாடட்டும் பிள்ளை. நல்லா ஜீரணமாகும், நல்லா பசிக்கும், நல்லா தூங்குவாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Thank you thalika and vanitha

மேலும் சில பதிவுகள்