தேதி: October 18, 2012
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
முட்டை - 3
பால் - ஒரு கப்
சீனி - ஒரு கப்
முந்திரி - 15
ஏலக்காய் - ஒன்று
நெய் - ஒரு தேக்கரண்டி
முந்திரியை அரை மணி நேரம் சுடுநீரில் ஊற வைக்கவும். மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அத்துடன் சீனி சேர்த்து அடித்து கொள்ளவும்.

பின்னர் முட்டை, சீனி கலவையை மிக்சியில் அடித்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் பாலுடன் முந்திரியை சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

வடிதட்டில் இந்த இரு கலவையையும் வடிகட்டி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் நெய் தடவி வடிகட்டிய அனைத்தையும் ஊற்றவும். ஏலக்காய் பொடியை இத்துடன் சேர்ந்து கலக்கவும்.

எலெக்ட்ரிக் குக்கரில் தட்டை போட்டு கால் பங்கு தண்ணீர் ஊற்றி இந்த பாத்திரத்தை உள்ளே வைக்கவும்.

முப்பது நிமிடத்தில் வெந்து விடும் ஆறிய உடன் துண்டுகள் போடவும்.

சுவையான வட்டலாப்பம் தயார்.

Comments
அட்மின்
எனது குறிப்பை உடனெ வெளியிட்ட அட்மின் குழுவினற்க்கு மிக்க நன்றி...
சூப்பர்
வட்டிலாப்பம் சூப்பரா செய்து இருக்கீங்க ஷமிலா.நாங்கலும் இதே மாதிரி தான் செய்வோம்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
Shameela...
Mmm... Nalla tasty vattalaappam recipe kuduthu irukeenga... Apdiye inga oru parcel podunga parkalam:) vazhthukkal shameela...
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
ஷமீலா
முட்டை சேர்த்தா தான் வட்டலாப்பம்... ஆனா அதை நான் இப்ப செய்ய முடியாதே... ஒரு வாரம் போகட்டும், செய்துடுறேன்... இத்தனை அழகா படம் போட்டு காட்டின பிறகு சும்மா இருக்க முடியுமா??? வாழ்த்துக்கள்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஷமீலா பொதுவா எல்லா முஸ்லீம்
ஷமீலா
பொதுவா எல்லா முஸ்லீம் வீட்டிலும் எந்த ஒரு விசேஷம் என்றாலும் இந்த வட்டிலாப்பம் இடம் பெராமல் இருக்காது இல்லையா!
படம் ரொம்ப அருமையா இருக்கு.
இந்த பெருநாளைக்கு செய்திட வேண்டியது தான்.
தலை தேங்காய் பாலில் செய்தாலும் ரொம்ப சுவையா இருக்கும்.
SSaifudeen:)
ஷமீலா,
ஷமீலா,
எளிமையான குறிப்பு
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
முசி.
ரொம்ப நன்றி முசி...நீங்க எந்த ஊரு மா?
நித்தி
வாழ்த்துக்கு நன்றி நித்தி...உங்களுக்கு இல்லாத பார்சலா?அனுப்பிட்டா போச்சு...
வனிதா
வாழ்த்திற்க்கு நன்றி...கண்டிப்பா செஞ்சு பாருங்க அக்கா...ட்ரடிஷனல் ஃபுட்...
சமீஹா
வாழ்த்திற்க்கு நன்றி...
ஆமாம் சமீஹா..நமக்கு எல்லாம் வட்டலாப்பம் வச்சா தானே பெருநாள் மாதிரியே இருக்கும்...நானே இந்தியால இருந்தப்போ எல்லாம் வச்சதே இல்லை..இப்போ சிங்கப்பூர் வந்து தான் செய்றேன்...
இது வரைக்கும் தேங்காய் பாலில் ட்ரை பண்ணினது இல்லை.ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டு சொல்றேன்.
கவிதா
வாழ்த்திற்க்கு நன்றி கவிதா...ஒவ்வொரு குறிப்புக்கும் வாழ்த்தி உற்சாகப்படுத்துறீங்க..ரொம்ப சந்தோஷமா இருக்கு.....
ஷமீலா வட்டலப்பம்
ஹாய் ஷமீலா எங்க அம்மா செய்வாங்க. எனக்கு செய்யத்தெரியாது ஆர்டினரி குக்கர்ல வைக்கிறது எப்படி?பால்,சர்க்கரை போட்டுருக்கீங்க 1கப்னா எவ்வளவு சரியான அளவு சொல்லுங்கபா.நான் பெருநாளைக்கு செய்ய போறேன்
ஷமிலா.
நல்லா செய்து இருக்கீங்க,இதே போல தான் நாங்களும் செய்வோம்.
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
ஹலிலா.
வாழ்த்திற்க்கு ரொம்ப நன்றி ஹலிலா....
ஷமீலா
நாகூர் பக்கம் ஒரு கிராமம்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
ஷமீலா
சூப்பரா இருக்கு. கண்டிப்பா இந்த வாரம் செய்றேன். வழ்த்துக்கள்...
Love Makes Life Beautiful...
With Love,
Indira.
super sweet....
எனக்கு ரம்ஜான் sweet la வட்டலப்பம் ரொம்ப பிடிக்கும். நானும் நெட்லயெல்லாம் பார்த்தேன் இப்போ தான் கிடைத்தது நான் உடனே செய்துவிட்டேன் ரொம்ப அருமையா இருந்தது thanks shameela.
ovvoru nodiyaiyum rasithu val
sameela
hai sister.assalamu alaikkum.wattalappam ok bt egg vasam varamattatha? pothuva wattalappam enda colour than main bt inga athu illayea.coconut milk la try panni parunga super o super......nan eathum thappa solliruntha sry 4 that sis.anyway keep n tuch