மட்டன், உருளைக் குழம்பு

தேதி: October 20, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (4 votes)

மட்டன் - அரை கிலோ
உருளைக்கிழங்கு - 2 (பெரியது)
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 2
மல்லிதூள் - ஒன்றரை தேக்கரண்டி
மிளகுதூள் - ஒரு தேக்கரண்டி
சீரகதூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்புதூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - கால் மூடி
முந்திரி - 10
இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
தயிர் - 4 தேக்கரண்டி
மல்லிதழை - 2 கொத்து
புதினா - 2 கொத்து
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை நடுவில் கீறி வைத்துக் கொள்ளவும். மல்லி புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை நான்காக நறுக்கி கொள்ளவும். தேங்காய் மற்றும் முந்திரிபருப்பை நன்றாக அரைத்து வைக்கவும்.
மட்டனை கழுவி சுத்தம் செய்து அதில் கரம் மசாலா, மிளகாய் தூள், தவிர்த்து எல்லா மசாலா தூள் வகையையும் சேர்க்கவும். அதில் ஒரு தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, தயிர், உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும்.
பிரசர் குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கி விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, புதினா, கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
தக்காளி சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும்.
மட்டனை போட்டு அரைத்த தேங்காய், முந்திரி பருப்பு விழுதை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
அதில் தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விடவும் ப்ரஷர் அடங்கியதும் உருளைக்கிழங்கை எடுத்து விட்டு குக்கரை மூடி 5 விசில் வரும் வரை வேக விடவும். நன்கு வெந்ததும் வேக வைத்த உருளைக்கிழங்கு, மல்லி தழை போட்டு இறக்கவும்.
சுவையான மட்டன், உருளை குழம்பு தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

அருமையான குறிப்பு, பார்க்கவே நல்லா இருக்கு,இதை சிக்கன் ல செய்யலாமா,எத்தனை விசில் வைக்கனும் சொல்லுங்க, சிக்கிரம் செய்து பார்க்கிறேன்

எனது குறிப்பை உடனே வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு ரொம்ப நன்றி.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

இது போல் சிக்கனிலும் செய்யலாம் 2 விசில் வைக்கவும். நன்றி.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

Halila... Romba nallaa iruku ma... Neenga mutton la masala piratti vechirukiradhe romba superb ah iruku. Vazhthukkal halila:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நல்லா செஞ்சு இருக்கிங்க ஹலிலா.....
பராட்டாவோட சாப்பிட்டா ஹ்ம்ம்ம்...சூப்பர்....

மட்டன் குழம்பு நல்லா செஞ்சி இருக்கீங்கப்பா சூப்பர் வாழ்த்துக்கள்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

மட்டன் குழம்பு சூப்பர்...

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

குறிப்பு அனுப்புவதில் தவறு நடந்துவிட்டது. பிரட்டி வைத்த மட்டனில் தயிர் சேர்த்து பிரட்டி வைக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்க்கவும். விடுபட்டமைக்கு மன்னிக்கவும்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப நன்றி நித்யா டேஸ்டும் அருமையா இருக்கும் ட்ரை பண்ணிபாருங்க.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப நன்றி ஷமிலா அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வாழ்த்திற்க்கு ரொம்ப நன்றி இந்திரா அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப நன்றி முஹ்சினா செய்து பார்த்து சொல்லுங்க.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

na inaki dhan member ah sendhurken....ungaloda mutton urulai kolambu dhan enoda first dish romba romba super ah irundhuchi enoda pasanga romba virumbi saptanga................innam neraya recipe seidhu anupunga plzzzzzzz....

ஹலீலா மட்டன் உருளை குழம்பு பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு(:- வாழ்த்துக்கள்!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஹளீலா ,
சுவையான,கம கம குறிப்பு..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

செய்து பார்த்து பின்னூட்டம் அளித்தமைக்கு ரொம்ப நன்றி சாந்தி. எல்லோருக்கும் பிடிச்சது ரொம்ப மகிழ்ச்சி.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப நன்றி அருட்செல்வி டேஸ்டும் அருமையா இருக்கும் ட்ரை பண்ணிபாருங்க.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வாழ்த்திற்க்கு ரொம் நன்றி கவிதா அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)