க்வில்டு ஃப்ளவர் - பாகம் 1

தேதி: October 22, 2012

5
Average: 4.3 (4 votes)

 

க்வில்லிங் ஸ்ட்ரிப்ஸ்
கம்
க்வில்லிங் டூல்

 

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
ஒரு இன்ச் அளவுள்ள பேப்பரை எடுத்துக் கொள்ளவும்.
படத்தில் காட்டியபடி சீராக வெட்டிக் கொள்ளவும்.
க்வில்லிங் டூல் கொண்டு அதை சுற்றவும்.
க்வில்லிங் செய்ததும் படத்தில் காட்டியபடி கம் கொண்டு முனையை ஒட்டி விடவும்.
கம் காய்ந்ததும் விரும்பியபடி விரித்துவிடவும்.
மேலே சொன்னதைப் போலவே இரண்டு வண்ணங்களில் பேப்பர்களை வெட்டிக் கொண்டு உட்புறம் ஒரு வண்ணத்தில் க்வில் செய்து ஒட்டியபின், வெளிப்புறம் வேறொரு வண்ணத்தில் படத்தில் காட்டியபடி ஒட்டவும்.
வெளிப்புறம் இருக்கும் பேப்பரை மட்டும் விரித்து, உட்புறம் விரிக்காமல் இருந்தால் படத்தில் காட்டிபடி பூ செய்யலாம்.
ஒரு இன்ச் பேப்பரை எடுத்து நீளவாக்கில் இரண்டாக மடித்து, சற்று சாய்வாக படத்தில் காட்டியபடி வெட்டிக் கொள்ளவும்.
அதன் முனையை இன்னொரு வண்ணம் கொண்ட ஸ்ட்ரிப் கொண்டு ஒட்டவும்.
படத்தில் காட்டியபடி க்வில் செய்யவும்.
கம் கொண்டு ஒட்டி காய்ந்ததும் விரும்பியபடி விரிக்கவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்