ஜப்பானிய சீஸ்கேக்

தேதி: October 22, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

க்ரீம் சீஸ் - 250 கிராம்
பட்டர் - அறையில் வெப்பதில் 3 ஸ்பூன்
பால் - 1/2 கப்
ரெடிமேட் கேக் மிக்ஸ் - 1/2 கப்
கார்ன் ஃப்லார் - 2 ஸ்பூன்
உப்பு - 1 பின்ச்
முட்டை - 4
ஐசிங் ஷுகர் - 1.5 கப்


 

பட்டர்,பால் மற்றும் க்ரீம் சீசை நன்கு மிக்செர் கொண்டு கலந்து விடவும்
கேக் மாவு ,கார்ன் ஃப்லார்,உப்பு மற்றும் முட்டையின் மஞ்சல் கருவை கட்டியின்றி கலக்கவும்..தேவைக்கு பால் ஊற்றி திக்காக கலக்கவும்
முட்டையின் வெள்ளையை தனியாக தண்ணீர் இல்லாத பாத்திரத்தில் சேர்த்து கூம்பு வடிவில் நிற்கும் அளவு மிக்செர் கொண்டு அடிக்கவும்...பாத்திரத்தை கவிழ்த்தாலும் கீழே விழாத அளவு அடிக்க வேண்டும்..அதனுடன் ஐசிங் ஷுகர் சேர்த்து கலக்கவும்
பின்பு க்ரீம் சீஸ் கலவை,கேக் மாவு கலவை மற்றும் கடைசியாக கலந்த முட்டையின் வெள்ளை கரு கலவையை ஒன்றாக சேர்த்து மிக்சரால் அடிக்காமல் ஒரு ஸ்பூன் கொண்டு மெதுவாக ஒன்று சேர கலக்கி விடவும்
15 நிமிடம் முற்சூடு செய்த பேகிங் அவனில் ஒரு பாத்திரத்தில் பாதி தண்ணீர் நிரப்பி அதன் மேல் ஒரு கேக் பேனில் பார்ச்மென்ட் பேப்பர் விரித்து அல்லது வெண்ணை தடவி இந்த கேக் மிக்சை ஊற்றி பேக் செய்யவும்.தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில் இந்த பேன் பாதி மூழ்கியிருக்க வேண்டும் கீழ்பகுதி நிறம் மாறாமல் மென்மையாக கிடைக்கும்
30- 40 நிமிடம் பேக் செய்தபின் டூத் பிக்கை லேசாக குத்தி பார்த்தால் ஒட்டாமல் வரும்
சூடு ஆறி குளிர வைத்து பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்


வாயில் போட்டால் கரைந்து போவது போன்று மென்மையாக இருக்கும்.கருகாமல் டெம்பெரேச்சரை குறைத்து பேக் செய்தால் சரியான பதத்தில் கிடைக்கும்

மேலும் சில குறிப்புகள்