மனம் கஷ்டம்ட்டில் எழுதுகிறேன்

வணக்கம் ... நான் ஓவரு மாதமும் ஏமாந்து போகிறேன்: ஏன் husband நான் அறுதல் சொல்லுகிறேன்... என்னக்கு அறுதல் சொல்ல யாரும் இல்லேய் ... சமூகமும் என் மாமியாரும் என் முகட்டில் முன் பேசடத குறெய் தன் ..... என்னக்கு நல்ல husband இருந்தும் .... நான் அவறுக்கு பிடித்தா மாதிரி பிள்ளேய் பெட்று குடுக்க முடிய வில்லெய் .....நான் என்ன பாவம் செய்தேன் தெரிய வில்லெய் .......

கவலை படாதிங்க ப்ரீத்தி உங்கள் நிலையில் இன்னும் நிறைய தோழிகள் இருக்கிரார்கள்.நம்பிக்கையோடு இருங்கள் அதுதான் நம்மை அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க வைக்கும்.அரட்டை பக்கம் வாங்க உங்களுக்கு இந்த கஷ்டமே தெரியாது ரிலாக்ஸ் ஆகிடுவிங்க,நிறைய தோழிகள் உங்களுக்கு ஆறுதல் சொல்ல இருக்கிறார்கள் நீங்க யாரும் இல்லையென கவலைபட தேவையில்லை சந்தோஷமாக இருங்கள் கடவுள் கைவிடமாட்டார்

கவலைப்படாதீர்கள் ப்ரீத்தி.கவலைப்பட்டு ஒண்ணும் மாறப்போறதில்லை.அதற்கு பதில் அந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று யோசித்து செயல் படுங்கள்.கடவுள் நம்பிக்கையை ஒருபோதும் கைவிடாதீர்கள்.நீங்கள் ஒரு பாவமும் செய்யவில்லை.

முதலில் உங்களை சந்தோஷமாக வைத்து கொள்ளுங்கள்.எப்போதும் கவலையுடன் இருப்பது போல தெரியாமல் ஜாலியாக இருங்கள்.உங்கள் தாம்தயத்தில் நமக்கு இந்த மாதமாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்போடு ஈடுபடாமல்,குழந்தை எனக்கு கிடைக்கும் என்று மனதார நினைத்து,ஒரு குழந்தையுடன் சிரித்த முகத்தை மனதில் நினைத்து ஈடுபடுங்கள் நிச்சயம் நல்லதே நடக்கும்.

உங்கள் முயற்சி ஒரு புறமிருக்க கடவுள் நம்பிக்கையை கைவிடாதீர்கள்.மேலும் மருத்துவரை பாருங்கள்.எல்லாம் நல்லவிதமாக முடியும்.மாமியார் பேசுவதை ஒரு பேச்சாக நினைக்க வேண்டாம்.குழந்தை பிறந்த பின்னும் ஒரு குறை சொல்லுவர்.நீங்களும் உங்கள் கணவரும் மகிழ்ச்சியாக வாழ ஒரு குழந்தை வேண்டும்.

உங்களுக்கும்,மற்ற தோழிகளின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்க சீக்கிரம் ஒரு குழந்தை கிடைக்க மனதார வாழ்த்தி,கடவுளிடம் பிராத்தனை செய்து கொள்கிறேன்.

Expectation lead to Disappointment

neengal ovoru maathamum 13 am naalil irunthu 15am naal varaikkum try pannunga,oru naalaikku 3 or 4 time try pannunga,,kandippaga ,kulanthai unndakum,

ரொம்ப நன்றி உங்கள் ஆறுதால்க்கு ....

மேலும் சில பதிவுகள்