வெஜிடபிள் அவல் உப்புமா

தேதி: September 8, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அவல் - 3 1/2 கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
வேக வைத்த பட்டாணி - கால் கப்
காரட் - ஒன்று
தக்காளி - ஒன்று
கடலைப் பருப்பு - 2 மேசைக்கரண்டி
இஞ்சி - அரை அங்குலத் துண்டு
வெள்ளை உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 5
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி


 

எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். பட்டாணியை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். பச்சை பட்டாணி என்றால் ஊற வைத்து வேக வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
அவலுடன் மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பிரட்டி விட்டு ஊறவிடவும்.
வெங்காயம், தக்காளி, காரட், இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். பிறகு கடலை பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி போட்டு 30 நொடிகள் வதக்கவும்.
பின்னர் நறுக்கின வெங்காயம் சேர்த்து 30 விநாடிகள் வதக்கவும்.
பொடியாக நறுக்கின காரட் போட்டு 2 நிமிடம் வதக்கவும். அதன் பின்னர் வேக வைத்த பட்டாணி போட்டு கிளறவிடவும்.
கடைசியாக தக்காளி சேர்த்துக் கிளறி விட்டு சுமார் 5 நிமிடம் குறைந்த தீயில் வைத்து வேக விடவும். தக்காளியை முதலிலேயே வெங்காயம் வதக்கியவுடன் சேர்த்து வதக்கலாம். கடைசியில் சேர்த்தால் தக்காளியின் சுவை நன்கு தெரியும்.
5 நிமிடம் கழித்து காய்கள் வெந்ததும், ஊற வைத்துள்ள அவலை சேர்க்கவும்.
அவலை நன்கு கிளறிவிட்டு இரண்டு நிமிடங்கள் அடுப்பில் வைத்திருந்து இறக்கவும்.
சுவையான வெஜிடபிள் அவல் உப்புமா ரெடி.
இந்த உணவைத் தயாரித்துக் காட்டியவர், திருமதி. ஜெயா ரவி அவர்கள். வகை வகையான சைவ சமையல்கள் செய்வதில் திறன் வாய்ந்தவர். அனைத்து வகை பிராமண உணவுகளையும் சுவைபட தயாரிக்கக் கூடியவர். புது வகை உணவுகளை கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டிவருகின்றார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

sudha
hi MR ravi
i tried that uppuma
everybody praised me
iam iyengar
so u can send mails also
iam in uae-sharjah
i can also share my receipies
bye keep in touch

sudha

sudha
sorry!! hi MRS ravi

sudha