அவல் உருண்டை

தேதி: October 24, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (6 votes)

 

அவல் - 2 கப்
சர்க்கரை - கால் கப்பிற்கு சற்று கூடுதல் (அ) சுவைக்கேற்ப
ஏலக்காய் தூள் - சிறிது
நெய் - 3 மேசைக்கரண்டி
பால் - கால் கப் (அ) தேவைக்கேற்ப
முந்திரி - சிறிது


 

அவலை வெறும் கடாயில் லேசாக சிவக்க வறுத்து எடுத்து மிக்சியில் பொடி செய்யவும்.
நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுக்கவும்.
சர்க்கரையுடன் ஏலக்காய் சேர்த்து பொடி செய்யவும்.
பொடித்த அவல், சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
பின் இத்துடன் வறுத்த முந்திரி மீதம் உள்ள நெய் சேர்த்து கலந்து விடவும்.
பிடிப்பதற்கு தேவையான அளவு மட்டும் சிறிது சிறிதாக பால் விட்டு கலந்து உருண்டையாக பிடிக்கவும். சுவையான அவல் உருண்டை தயார். பால் சேர்ப்பதால் ஒரே நாளில் முடித்து விட வேண்டும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எளிதான இனிப்பு பலகாரம் கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்(:- எனக்கு செய்யத்தெரிந்த ஒரே இனிப்பு பலகாரம் குலோப்ஜாமூன் மட்டுமே! இதை முயற்சி செய்து பார்க்கிறேன். நன்றி வனி.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

m romba arumaiyana kuripu adhuvum revs ku piditha inippu kuduthirukinga... vazhthukkal.

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

சுலபமான சுவையான் அவல் உருண்டை சூப்பரா இருக்கு. நிச்சயம் செஞ்சி பாத்துட்டு சொல்றேன்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

அவல் உருண்டை லட்டு ரெஞ்ஜுக்கு சூப்பரா இருக்கு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நல்லா இருக்குதுங்க. எங்க பிடிக்கிறீங்க இந்த குறிப்பெல்லாம்.வாழ்த்துக்கள். இன்னைக்கே செய்துட்டாப்போச்சு.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

வனி என்னிடம் நிறைய அவல் இருக்கின்றது.அவல் உருண்டை உங்கள் செய்முறை பார்க்கும்போதே ரொம்ப சுவையாக இருக்கும்போல தோன்றுகின்றது.நிச்சயம் செய்து பார்ப்பேன்.நல்ல அருமையான குறிப்பு.நன்றி

பரணிகா:)

பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு.செய்முறையும் ஈஸியா இருக்கு
அவசியம் செய்து பார்கிறேன்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

பால் சேர்த்து செய்ததில்லை வனி. ட்ரை பண்றேன்.

‍- இமா க்றிஸ்

வனி, ரொம்ப நாளாச்சு இந்த பக்கம் வந்து பதிவு போட்டு.. படத்தை பார்த்ததும் நிச்சயம் நீங்கதான்னு தெரியும். இன்னைக்கு கன்பார்ம் பண்ணவே உள்ளே வந்து பார்த்தேன்.. அட... நீங்களே தான். அவல் நல்லா ப்ரெளன் கலர் ஆகும் வரை வறுக்கனுமா? சும்மா லைட்டா வறுத்தா போதுமா? இதை மட்டும் க்ளியர் பண்ணிடுங்க. நாளைக்கே செய்து பேஸ்புக்ல ஏத்திடுறேன் ;) இன்னைக்கு அன்புவின் அதிரசம் பண்ணி கை கால் சூடு பட்டு ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கேன் ;) அதனால் நாளைக்கு உங்க ரெசிப்பி. எளிமையான, சுவையான, சத்தான குறிப்பு. வாழ்த்துக்கள் வனி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வனி,
எளிமையான குறிப்பு..ரொம்ப பிடிச்சுருக்கு..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

பார்த்ததுமே சாப்பிட தோணுது..... செய்து பார்த்து சொல்ரேன்...

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

அவல் உருண்டை பார்க்க நன்றாக இருக்கு..நான் புதிது இந்த தளத்திற்கு இது என் முதல் கருத்து.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. //எனக்கு செய்யத்தெரிந்த ஒரே இனிப்பு பலகாரம் குலோப்ஜாமூன் மட்டுமே! // - ஹிஹிஹீ... நாங்களும் வேலை பார்த்த காலத்தில் அப்படி தானே இருந்தோம் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரேவதிக்கு பிடிச்சா எனக்கு பிடிக்கும்... செய்துட்டு சொல்லுங்க. மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) அவசியம் செய்துட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. ;) லட்டுன்னே சாப்பிடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) //எங்க பிடிக்கிறீங்க இந்த குறிப்பெல்லாம்// - ரொம்ப பழைய காலத்து குறிப்பு தாங்க... அம்மா செய்ய சொன்னாங்க, செய்தேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க, நிச்சயம் பிடிக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அப்படியே கப்போட கொடுத்துட்டேன். மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அவசியம் ட்ரை பண்ணுங்க... மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) அவசியம் செய்து பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) பொன்னிறமா வறுத்து செய்யுங்க. அதிரசம் சுட்டு கை சுட்டா பரவாயில்லை... பக்குவமா சரியா வந்தா சாப்பிட்டு எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னா, வலி தெரியாது ;) அவைச்யம் செய்து பார்த்து சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) அவசியம் செய்து பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சாரி, உங்க பெயர் தெரியல, அதான் ஐடி அப்படியெ எபோட்டுட்டேன். மிக்க நன்றி. அறுசுவை உங்களை அன்போடு வரவேற்கிறது :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி, உங்களுக்கு 100 ஆயுசு :) அவல் உருண்டை சந்தேகத்துக்கு இன்னைக்கு பதில் போட்டிருப்பீங்களா இல்லையான்னு பார்க்க வந்தேன். காலைலருந்து இந்த பக்கம் வரல.. பிசியா படம் பார்த்துட்டு இருந்ததால..நீங்களும் கரெக்டா இப்ப பதில் போட்டிருக்கீங்க. முடிந்தால் இன்னைக்கே பண்ணிட்டு பதிவு போடுறேன் வனி.. உடனடி பதிலுக்கு தேங்க்ஸ் :) அதிரசம் சுட்டு கை கால் எல்லாம் ஓகே பண்ணியாச்சு ;) அதிரசமும் சூப்பரா வந்திருக்கே..அதை பார்த்தே வலி போய்ருச்சி..

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஓ... சூப்பரா வந்துச்சா... எஞ்சாய் :) இனி வலி இருக்காது தான்.

நானும் காலையில் இருந்து விசி. வெளி வேலை... சுத்திட்டு இப்ப தான் வரேன். அவசியம் செய்துட்டு சொல்லுங்க. :) //உடனடி பதிலுக்கு தேங்க்ஸ் // - இதானே வேண்டாங்குறது ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி, சுட சுட செய்து சாப்ட்டு போட்டோவையு பேஸ்புக்கில் ஏத்தியாச்சு.. அங்கே போனால் பாருங்க.. அவலை நல்லா வறுத்துட்டேன் போல, நல்லா கரகரப்பா, நெய் மணத்தோட, சுவையா, சூப்பரா இருந்தது வனி. சத்தான குறிப்பும் கூட.. மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களோடு நன்றிகள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அட ரவா உருண்டை மாதிரி அவல் உருண்டை!! :‍) சூப்பரா இருக்கு வனி! அவசியம் செய்து பார்க்கிறேன். அந்த கடைசிப்படம், பவுல் வித் யம்மி ட்ரீட்ஸ், லவ்லி! வாழ்த்துக்கள் வனி!!

அன்புடன்
சுஸ்ரீ

செய்து பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) அவசியம் ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

I want to keep it for two days atleast :) how to do it?