டொமேட்டோ ஆலு

தேதி: October 24, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (4 votes)

உருளைக்கிழங்கு - 2
தக்காளி - 2
தக்காளி ப்யூரி - ஒரு தேக்கரண்டி
சிகப்பு மிளகாய் - ஒன்று
பூண்டு - 4 பல்
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
கடுகு, சீரகம் - தலா அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை, மல்லி தழை - சிறிதளவு
உப்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - தாளிக்க.

உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி வைக்கவும். இரண்டு பல் பூண்டை தட்டி வைக்கவும். மிக்சியில் தக்காளி, சிகப்பு மிளகாய், இரண்டு பல் பூண்டு, தக்காளி ப்யூரி எல்லாம் சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்.
பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பிறகு மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தாளித்து, அரைத்த விழுதை ஊற்றவும்.
பின் உப்பு, உருளைக்கிழங்கு சேர்த்து 10 நிமிடம் சிறு தீயில் வேக விடவும்.
கிழங்கு வெந்த பின் மல்லி தழை தூவி இறக்கவும்.
சுவையான டொமேட்டோ ஆலு ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

நல்ல குறிப்பு கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள் முசி(:- தக்காளி ப்யூர்னா என்ன, சிவப்பு மிளகாய் என்பது வறமிளகாயா? சிவப்பு குடமிளகாயா?

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க நன்றி,செல்வி,என்றால் பாடம்பண்ணிய தக்காளி விழுது,டின்களில் கிடைக்கும்;அது கிடைக்கவில்லை எனில் தக்காளி விழுதே பொதுமானது.சிகப்பு மிளகாய் பட்சை மிளகாய் போன்றெ பழுத்த சிகப்பு மிளகாய்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

டொமேட்டோ ஆலு நல்லா செஞ்சு இருக்கிங்க செய்முறையும் ஈஸியா இருக்கு வாழ்த்துக்கள்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

குறிப்பு நன்றாக இருக்கிறது. படங்களும்தான்.

‍- இமா க்றிஸ்

டொமோட்டோ ஆலு பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கு.சூப்பர் வாழ்த்துக்கள்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

super pa parkum pothe sappida vendum pola ullathu

எதிர்பார்ப்பு இல்லாமல் புன்னகை செய்தால்,நம்மை விட அழகானவர் இந்த உலகில் இல்லை.

ரொம்ப நன்றி ஹலிலா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு மிக்க நன்றி இமா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க நன்றி,இந்திரா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ரொம்ப நன்றி,புனிதா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பாக்கும் போதே நாக்குல தண்ணி வருது அவ்வலவு சுப்பரா இருக்கு..

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

நன்றி லக்ஸ்மி,செய்து பாருங்க டேஸ்ட்டும் சூப்பரா இருக்கும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முசி,
பளிச்+ எளிமை..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

போட்டோ சூப்பர்... குறிப்பும் சூப்பர் :) ஐ லைக் இட்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாழ்த்திற்க்கு நன்றி கவிதா..

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க நன்றி வனிதா

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

super receipe

ALL IS WELL