ஆப்பத்துமா பராசாப்பம்

தேதி: October 25, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

பச்சரிசி - 2 கப்
சாதம் - ஒன்றரை கப்
சமையல் சோடா - சிறிதளவு
சீனி - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - கால் மூடி
வெங்காயம் - ஒன்று (பெரியது)
பச்சை மிளகாய் - ஒன்று
முட்டை - 2
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு

அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு நன்கு கழுவி விட்டு சாதத்தை சேர்த்து பிசைந்து அதில் சமையல் சோடாவையும், சீனியையும் சேர்த்து மிக்ஸியில் நைசாக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொஞ்சம் கெட்டியாக அரைத்து கொள்ளவும். 6 மணி நேரம் புளிக்க விடவும். தேங்காயுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். பொட்டுக்கடலை, பெருஞ்சீரகம் இரண்டையும் பொடி செய்து கொள்ளவும்.
புளித்திருக்கும் மாவில் முட்டை சேர்த்து கலக்கி, அத்துடன் மஞ்சள் தூள், உப்பு, அரைத்த தேங்காய், வெங்காயம், பச்சை மிளகாய் விழுது, பொடி செய்த பொட்டுக்கடலை, பெருஞ்சீரகம் போட்டு நன்கு ஒன்று சேர கலக்கி பத்து நிமிடம் வைக்கவும்.
ஆப்பசட்டியை அடுப்பில் வைத்து 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடு வந்ததும், ஒரு கரண்டி நிறைய மாவு எடுத்து ஊற்றவும்.
ஒரு மூடி போட்டு மூடி அடுப்பு தீயை குறைத்து வைத்து வேக விடவும்.
ஓரப்பகுதி சிவந்து மேலெழும்பி நிற்கும்.
சிவந்ததும் திருப்பி போட்டு மறுபக்கமும் சிவக்க விட்டு எடுக்கவும்.
சுவையான ஆப்பத்துமா பராசாப்பம் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

அருமையாக செய்து இருக்கீங்க ஹலிலா,நாங்களும் இப்படி தான் செய்வோம்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

hai halila kurippu nalla iruku nan vagatarian athanal ithai muttai illama seiyalama?

unave marunthu marunthe unavu

நல்ல குறிப்பு கொடுத்து இருக்கீங்க. வாழ்த்துக்கள்(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப நன்றி முஹ்சினா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப நன்றி நிர்மலா.முட்டை இல்லாமலும் இதை செய்யலாம் நன்றாக இருக்கும்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப நன்றி அருட்செல்வி

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

Halila... Unga kurippu romba different ah iruku ma. Romba nallaa iruku seimurai... Vazhthukkal halila...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஹளிலா,
சுவையான குறிப்பு..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

சின்ன சின்னதா சுலபமானதா வித்தியாசமான ரெசிபீஸ் கொடுத்து அசத்துறீங்க. வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆப்பத்துமா பராசாப்பம் இப்பதான் முதன்முறை கேள்விப்படறேன். சுவையான, சுலபமான நல்லதொரு குறிப்பு! வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

அஸ்ஸலாமு அலைக்கும் ஹலிலா
பெருநாள் வாழ்த்துக்கள்...பராசாப்பம் நல்லா செஞ்சு இருக்கிங்க...நேற்று பெருநாளுக்கு செய்யும் போது தான் புகைப்படம் எடுத்தேன்...காலையில அறுசுவையில பார்த்தா நீங்க குறிப்பு போட்டுடிங்க...யார் செஞ்சா என்ன குறிப்பு வந்தா சரிதானே :)

வாழ்த்திற்க்கு ரொம்ப நன்றி நித்தியா டேஸ்டும் அருமையா இருக்கும் ட்ரை பண்ணிபாருங்க.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வாழ்த்திற்க்கு ரொம் நன்றி கவிதா அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வாழ்த்திற்க்கு நன்றி வனிதா அறுசுவை குயினின் பாராட்டு என்றால் சும்மாவா?ரொம்ப சந்தோஷமா இருக்கு.....

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வாழ்த்திற்க்கு ரொம்ப நன்றி சுஸ்ரீ அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் ஷமிலா உங்க அன்பான பதிவுக்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

மிகவும் நன்டாக வந்தது . என் husband கு ரொம்ப பிடிதது. ஆப்ப சொட மட்டும் செர்க்கவில்லை. thanks 4 d recipe sis..

Nevr tel ur problms to any1.20% don't care nd d othr 80% r glad u hav thm.