பட்டிமன்றம் - 77 "இன்றைய காதல் மனதை பார்த்து வருகிறதா?வசதியை பார்த்து வருகிறதா?"

அறுசுவை தோழிகளுக்கு வணக்கம்...

இந்த வார பட்டிமன்ற தலைப்பு

"இன்றைய காதல் மனதை பார்த்து வருகிறதா?வசதியை பார்த்து வருகிறதா?"

தலைப்பு தந்த தோழி கல்பனா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..

முதன்முறையாக பட்டி நடுவராக பொறுப்பு ஏற்றிருக்கிறேன்.அதனால் குறை நிறைகளை அன்பு தோழிகள் பொறுத்து பட்டியை நல்ல முறையில் நடத்தி செல்ல உதவ வேண்டும்...

பட்டிமன்ற விதிமுறைகள்:
1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது.
3. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
4. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.
5. அரட்டை... நிச்சயம் கூடாது.
இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

சூடான வாதங்களுடன் வாங்க தோழிகளே.....உங்களுக்காக நான் காத்திருக்கேன்....

அன்பு தோழிகளே பட்டி இனிதே ஆரம்பமாகி விட்டது....எல்லாரும் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு சீக்கிரமா பட்டிக்கு வாங்க....
உங்க கருத்துக்களை சரவெடியாக வெடிங்க :)

நடுவர் அவர்களுக்கு வணக்கம். தங்கள் தலைமையில் பட்டி சிறக்க வாழ்த்துக்கள். மனதை பார்த்து வருவதே காதல். அதுவே என்றென்றும் நிரந்தரமானது. எனது வாதங்களுடன்
வருகிறேன். வசதிகள் நிரந்தரமானவை அல்ல.

ஈஸ்வரன்
தமிழ் வாழ்க

காதல் என்பது மனதை பார்த்து வருவதுதான். ஆனால் இன்றைய காதல் வெறும் வசதியை பார்த்து மட்டுமே வருகிறது. ஆண்கள் மட்டுமல்ல அவர்களுக்கு இணையாக பெண்களும் இன்றைய காலங்களில் ரொம்ப மாறிட்டாங்க. யாரும் மனதை பார்ப்பதே இல்லை. இவரை திருமணம் செய்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் (வசதி அடிப்படையில்) யோசித்து அதற்க்கு பிறகு தான் காதலிக்கவே ஆரம்பிக்கிறாங்க. காதலை கொச்சை படுத்துரவுன்களே அதிகம் இப்போ. 5 பேரோட பழகணும், 4 பேரோட friendship வச்சிக்கணும், 3 பேரோட நெருக்கம், 2 பேரோட டேட்டிங், 1 ஆளோட -- ஆனா கல்யாண வேறொரு ஆளோட.

அப்போ ஆணும் பெண்ணும் ஒத்துமையா இருந்துச்சு..
அது காதலிலே உலகத்தையே மறந்துச்சு..
அது வாழ்ந்த போதிலும் இல்ல இறந்த போதிலும்..
அது பிரிந்ததே இல்ல.. அது மறந்ததே இல்ல..
தினம் ஜோடி ஜோடியா இங்கே செத்து கிடக்கும் டா..

நீ சொல்லும் காதல் எல்லாம் மலை ஏரி போச்சு சிட்டு..
தும்பல போல வந்து போகுது இந்த காதலு..
காதலுன்னு சொல்லுராங்க.. கண்டபடி சுத்துராங்க..
டப்பு கொரைஞ்சா.. மப்பு கொரைஞ்சா.. தள்ளி போராங்க..
காதல் எல்லாமே ஒரு கண்ணாம்பூச்சி..
இதில் ஆணும் பெண்ணுமெ தினம் கானாம்போச்சி..
காதலிலே தற்கொலைகள் கொரைஞ்சே போச்சு..
உண்மை காதலே இங்கே இல்ல சித்தப்பு..
இங்க ஒருதன் சாகுறான் ஆனா ஒருதன் வாழுறான்..
இது என்னடா உலகம்... இதில் எத்தனை கலகம்..
இந்த காதலே பாவம்.. இது யார் விட்ட சாபம்..

இன்னிக்கு காதல் எல்லாம் ரொம்ப ரொம்ப மாறிடிச்சு..
கண்ண பாக்குது.. கைய கொர்க்குது.. ரூமு கேட்குது..
எல்லாம் முடிந்த பின்னும் பிரன்டுனு சொல்லிக்கிட்டு..
வாழுரவங்க ரொம்ப பேருடா.. கேட்டு பாருடா..
இப்ப காதல் தொதுட்டா யாரும் சாவதே இல்ல..
அட ஒன்னு தொதுட்ட ரெண்டு இருக்குது உள்ள..
இப்பல்லாம் தேவதாஸ் எவனும் இல்ல..
அவன் பொழுதுபோக்குக்கு ஒரு பிகர பாக்குரான்..
அவ செலவு பண்ணதான் ஒரு லூச தெடுரா..
ரெண்டு பேருமெ இங்கே பொய்யா பழகுரா..
ரொம்ப புடிச்சி போச்சுனா கை குலுக்கி பிரியுரான்..

இது தான் இன்றைய காலகட்டத்துல இருக்குற காதலோட பரிதாபமான நிலை

ஜென்னிவினோ

Dare To Paly With Life

புதிதாய் நடுவர் பொறுப்பேற்றிருக்கும் ஷமீலா வுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.. தலைப்பை தந்த கல்பனா அவர்களுக்கும் என் நன்றிகள் பல.

நல்ல தலைப்பு ஆனால் எந்த அணியை தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் வந்து ஒரு வழியா புடுச்சுட்டோம்ல.
இன்றைய காதல் மனதை பார்த்து வருகிறதா?வசதியை பார்த்து வருகிறதா? நான் "வசதியைப் பார்த்து வருகிறது" என்ற அணியில் பேச வந்துள்ளேன்...

வாதங்களுடன் அப்புறமா வருகிறேன் நடுவரே......

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

முதலாவதாக வந்து வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி...
மனதை பார்த்து வருவதே காதல் என்கிற அணியை தேர்ந்தெடுத்து இருக்கிங்க...
விரிவான வாதங்களுடன் வாங்க ஈஸ்வரன்....

வாங்க ஜென்னி ...
5 பேரோட பழகணும், 4 பேரோட friendship வச்சிக்கணும், 3 பேரோட நெருக்கம், 2 பேரோட டேட்டிங், 1 ஆளோட -- ஆனா கல்யாண வேறொரு ஆளோட.
எடுத்த எடுப்பில கணக்கு எல்லாம் சொல்லி பாடல் மூலமா உங்க அணியை சொல்லிட்டீங்க..
நீங்க சொல்றதும் சரியாகத்தான் இருக்கு..இதுக்கு எதிரணி என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்...

வாழ்த்துக்களுக்கு நன்றி ரேவதி....
நீங்களும் வசதி அணியை தேர்ந்தெடுத்து இருக்கிங்க....சூப்பர்...
வேலைகளை எல்லாம் முடிச்சுட்டு வாங்க...காத்திருக்கேன்....

அன்பு நடுவர் ஷமீலாவிற்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்......

இந்த தலைப்பு கொஞ்சம் கஷ்டம்தான்:( இருந்தாலும் நான் இன்றைய காதல் வசதியைப்பார்த்தே வருகிறதுன்னு பேசவுள்ளேன்.......இப்பதிவு இடம்பிடிக்கவே வாதங்கள் பின்னால் வந்துகொண்டே இருக்கிறது....

அன்பான நடுவர் அவர்களே உலகின் இண்டு, இடுக்கு, சந்து,பொந்து,மூலை,முடுக்கு என அனைத்து இடங்களிலும் நம் பாரத பெருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கும் எதிரணி, சக அணி, பார்வையாளர்களே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம்.
நடுவர் அவர்களே என்னப் பொருத்தவரைக்கும் காதல் வசதி, படிப்பு, அந்தஸ்த்து இது ஒண்ணையுமே பார்க்காம வந்துடுது. காதல் எதப்பார்த்து வ்ருதுங்கிறதுதான் தலைப்பு. அதுனால அதுக்கப்புறம் வர்ற இன்னல்பத்தி யோசிச்சு வாதிட வேணுங்கிறது இல்லைனு நினைக்கிறேன்.
(அதுனால காதல் எதுவுமே பார்க்காம வருது.அப்புறம் நிறைய காரணங்களால இருந்த இடம் தெரியாம போயுடுது). அதுனால மனச பார்த்து வருதுனு வாதாட வருகிறேன்.என்னுடைய முதல் கட்ட வாதத்துடன் வருகிறேன்.
புது முக நடுவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!.
இப்பிடி ஒரு தலைப்புக்கொடுத்த ஆப்பிரிக்க காட்டு(புலி)க்கோழி கல்ப்ஸ்க்கும் வாழ்த்துக்கள்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வாழ்த்துக்களுக்கு நன்றி ரேணுகா...
கஷ்டமான தலைப்புன்னாலும் நம்ம தோழிகள் பிச்சு உதறிடுவீங்களே....சீக்கிரமா விரிவான வாதங்களுடன் வாங்க....

மேலும் சில பதிவுகள்