மினி சுறா மீன் கிரேவி

தேதி: November 1, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

சுறா மீன் துண்டுகள் - 5
வெங்காயம் - ஒன்று (பெரியது)
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மல்லி தூள் - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
சீரகத் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
அரைத்த தேங்காய் விழுது - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

வெங்காயம், தக்காளி, இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் கீறி வைத்துக் கொள்ளவும்.
மீனை சுத்தம் செய்து அதில் உப்பு, கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து முறுகாமல் அரை பாகம் வேகும் அளவிற்கு பொரித்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் அதில் தூள் வகைகள், உப்பு தேங்காய் விழுது, அரை கப் தண்ணீர் சேர்த்து பொரித்த மீன் துண்டுகளைப் போட்டு ஒரு மூடி போட்டு கொதிக்க விடவும் மசாலா வாசம் போனதும் இறக்கவும்.
சுவையான மினி சுறா மீன் கிரேவி தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

வாவ் சூப்பரோ சூப்பரு. என் ஃபேவரட். நான் சுறா மீன் ல புட்டு தாங்க செய்வேன். ம் இப்போ இதயும் டைம் கிடைக்கும் போது ட்ரை பன்றே. வாழ்த்துக்கள் ஹலீலா...

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

சுவையான சுறா மீன் குழம்பு :) எல்லாரும் படத்த காட்டியே ஆசைய காட்டுறீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்லதொரு குறிப்பு கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள் ஹலி(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வாழ்த்திற்க்கு ரொம்ப நன்றி ரேவதி அவசியம் செய்து பாருங்க

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப நன்றி வனிதா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வாழ்த்திற்க்கு ரொம்ப நன்றி அருட்செல்வி.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஹலிலா,கிரேவி பார்க்கும் போதே செம ருசி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

உங்க கிரேவி ரொம்ப நல்லா இருக்கு. படங்களும் அழகு. வாழ்த்துக்கள்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ரொம்ப நன்றி முஹ்சினா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வாழ்த்திற்க்கு ரொம்ப நன்றி இந்திரா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஹளிலா,

குழந்தை பிறந்தால் தேங்காயில்லாமல் இது போலே செய்து தருவாங்க.
அருமையான குறிப்பு

என்றும் அன்புடன்,
கவிதா

ரொம்ப நன்றி கவிதா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)