தனிமையிலும் இனிமை காண முடியுமா?!!!

நம்மில் பலரும் வெளியூர் வெளிநாடுன்னு சொந்தபந்தங்களை விட்டு தள்ளி இருக்கிறோம். அப்போ நாம புதுசா அனுபவிக்கற ஒண்ணுதான் தனிமை. அந்த தனிமை கொடுமையா இருக்கா? இல்லை தனிமையை இனிமையாக மாத்திட்டீங்களா? எப்படி இனிமையா மாத்திக்கிட்டீங்க அப்படீன்னு தோழிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன். பதிவுகல் தமிழில் இருந்தால் இனிமை. ஆங்கிலத்துக்கு பெரிய தடா... :)

கவிசிவா நல்ல தலைப்பு,
நானும் வெளிநாட்டில்தான் இருக்கின்றேன்.தனிமை மிக மிக கொடியது.என் கணவர் காலையில் வேலைக்கு போனால் இரவுதான் வீடு திரும்புவார்.எல்லோரும் நேரத்தினை மனேஜ் பண்ண முடியாமல் நேர அட்டவணை தயாரித்து செயல்படுவார்கள்.நான் நேரத்தினை எப்படி செலவு செய்யலாம் என யோசித்து நேர அட்டவணை எனக்காக தயாரித்து வைத்திருக்கின்றேன்.இதில் நான் சிறிதளவு வெற்றியும் கண்டிருக்கின்றேன்,( இதென்ன பெரிய சாதனையா என்று நீங்கள் கேட்கப்படாது)நானும் shopping செல்வது ஏதாவது bills கட்ட பாங்க் செல்வது.இதனால் இப் பொறுப்பை கணவர் என்னிடம் ஒப்படைத்துவிட்டார்.லீவு நாட்களில் இருவரும் பாக்கிற்கோ கோயிலுக்கோ சென்றுவருவோம்.எனக்கும் பாட்டுக் கேட்க ரொம்ப பிடிக்கும்.எனக்கும் ரொம்ப ரொம்ப பிடித்தது மலர்ச்செடிகள் வைத்து அழகு பார்ப்பது,ஆனால் அது இங்கு முடியாது ஏனெனில் நாங்கள் ஒரு சிறிய flat ல்வசிக்கிறோம்,அதனால் எங்களுக்கு garden இல்லை.இப்படி எங்கள் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கும்போது சில மனிதர்கள் போன் பண்ணினால் எப்படி உங்களுக்கு பொழுது போகின்றது?எங்களுக்கு நேரமே இல்லாமலிருக்கின்றது நீங்கள் வேலையில்லாமல்தானே இருக்கின்றீர்கள்.எங்களுக்கு நீங்கள் போன் பண்ணலாம்தானே என்று கூறும்போது மனம் எவ்வளவு வேதனைப்படுகின்றது.ஆனால் நான் இனிமேல் இதற்காக வருந்தப்போவதில்லை.கடவுளிடம் பாரத்தை விட்டுவிடவேண்டியதுதான்.''நம் சந்தோஷத்தை குறிவைக்கும் எந்த மூன்றாம் நபரின் கேள்வியயும் நான் மூளைக்கே கொண்டு செல்வதில்லை''என்ற உங்களின் அந்த வரி எப்பொழுதும் நம் மனதில் இருக்கவேண்டும்.

பரணிகா:)

வனி, நீங்களும் நம்ம கட்சியா? :) சின்ன வயசுல நான் நல்ல குண்டா இருப்பேன் (அப்ப கெட்ட குண்டு கூட இருக்கான்னு எடக்கு கேள்வி கேட்டா தானே தெரியும்.. மக்காஸ் ...;)) என் அக்காவும், தங்கச்சியும் நல்லாவே விளையாடுவாங்க. அவங்க செட்ல என்னை சேர்த்துக்க மாட்டாங்க. என்னால ஓட முடியாது.. ஒளிய முடியாதுன்னு..சுருக்கமா சட்டி மாதிரி ஒரே இடத்துல இருப்பேன்... இப்படி யாரும் என்னை விளையாட்டுக்கு சேர்க்காததாலயே எனக்கு தனிமை கொஞ்ச கொஞ்சமா அறிமுகமாச்சு.. 5 வயசுலயே பாட்டி என்னை தன்னோட ஊருக்கு கூட்டிட்டு போய்ட்டாங்களா? அங்கே அம்மாவை மிஸ் பண்ணி பண்ணி, யாரை பார்த்தாலும் பிடிக்காது. பசிக்குதுன்னாலும் வாய் திறந்து கேக்க மாட்டேன்.(சாப்பிடும் போது வாய் திறக்குமான்னு யாராச்சும் கேளுங்களேன் பார்க்கலாம்.. இருக்கு) பாட்டி வீட்லயே குறிப்பறிஞ்சு கரெக்ட் டயமுக்கு எல்லாம் தருவாங்க. ஸ்கூல் போனப்ப கூட யார்கூடயும் பேச மாட்டேன். எல்லார்க்கும் நானும் வேற்றுகிரகவாசி மாதிரி தெரிஞ்சேனோ என்னவோ.. அவங்களும் எனக்கு அப்படித்தான் தெரிஞ்சாங்க.. வீட்டுக்கு வந்தால் ஹோம் ஒர்க் பண்ணிட்டு, பாட்டி வீட்ல ஒரு ரூம்ல பெரிய கம்பி வச்ச ஜன்னல் இருக்கும். பக்கதுலயே பெரிய சேர் போட்டு வச்சிருப்பாங்க.(இதெல்லாம் மேட்டரா?) அங்கே போய் உக்கார்ந்து zoo ல இருக்க monkey மாதிரி வேடிக்கை பார்த்துட்டு இருப்பேன்..(இங்க்லீஷ்ல போட்டா உங்களுக்கு புரியாதுல்ல.. அதான் இப்படி ஒரு ஐடியா :D) ஜன்னலுக்கு எதிர்ல இருக்க வீட்ல என்னோட படிச்சவ வீடு இருந்தது. அவ அங்கேருந்து பார்த்து சிரிப்பா.. நான் சிரிக்கறதாவது.. மூச்...நீயெல்லாம் அக்கா தங்கச்சியோட பிறக்கலயா.. ஒரு பொம்பளை பொண்ணை பார்த்து சிரிக்கறியேன்னு...(நினைக்க மாட்டேன்..ஏன்னா அவளும் பொண்ணு தானே ;))) இப்படியே டெய்லி டெய்லி அவங்க வீட்டை பார்த்து பார்த்து அவ மேல அசைக்க முடியாத நட்பு உருவானது. அது இன்னைக்கு வரைக்கும் தொடருது. ஸ்கூல்ல படிச்ச தோழிகள்ல அவ மட்டும் எனக்கு இன்னும் நிரந்தர தோழியா இருக்கா.

வனி, நீங்க சொன்ன மாதிரி மாடில தனிமையை அனுபவிக்கற சுகம் இருக்கே.. ஆஹா..தான்.. இங்கே அந்த வசதி இல்லாததால, பின்னாடி டாய்லெட், குப்பை வாசத்தை தான் பிடிச்சுட்டு இருக்கேன் ;((

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கவி, சரியா தான் சொன்னீங்க.. நான் குழந்தையா இருக்கும் போதே, இப்படித்தான் இருப்பேன்னு தெரிஞ்சு வச்சு தான் என் அம்மா - அப்பா இந்த பேரை வச்சிருப்பாங்க போல. கற்பனைலயே கோட்டை,கோபுரம்,குடிசை,பங்களா,வில்லா எல்லாமே கட்டிடுவோம் ;))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அருமையான இழை தொடங்கிய க்விக்கு வாழ்த்துக்கள்+நன்றி.

சின்ன வயசுல இருந்தே தனிமைதான் என் உலகம். ஏன்னா என்கூடப்பிறந்தவங்க எல்லாருமே என்னைவிட வயதில் பெரியவங்க.
அதுனால எம்பேச்சு எப்பவுமே எடுபடாது. அதுனால நானே தனியவே விளையாடிட்டிருபேன், கல்ப்ஸ் சொன்ன மாதிரிதான் சின்ன வயசுல என்னென்ன பண்ணினேன்கிறத இப்பவும் என்னால சொல்லமுடியும்.
ஒரு பூனை ஒண்ணு வளர்த்தினேன். நானெங்க வளர்த்துனேன் அதுவே பாலு,தயிர்னு யார்கிட்டயுமே கேட்காம குடிச்சிட்டு எங்காமாகிட்ட அடிக்கடி அடிவாங்கும். எங்க வீடு தோட்டத்துக்குள்ள இருக்கும். சுத்தி ஆளரவமே இருக்காது, கிட்டத்தட்ட கல்பஸ் இருக்கிற காங்கோமாதிரியேதான்.

தோட்ட வேலைக்கி வரவங்களும் மாலை நேரத்தில வீட்டுக்கு போயிருவாங்க. எனக்கு அந்த பூனைதான் உலகம். அதனோட பேறு கேட்டு யாரும் சிரிக்கக்கூடது "பிச்சாயி".
பூனைக்கு ஏன் அந்தப்பேர் வெச்சேனா அடிக்கடி ஒருத்தங்க எங்க வீட்டுக்கு வ்ந்து எங்கம்மாகூட பேசிட்டிருபாங்க அவங்களுக்கு என்னய ரொம்ப பிடிச்சுபோயி எங்கூட விளையாடாமா போகவே மாட்டாங்க, ஆனா நான் பூனைக்கு அவ்ங்க் பேருதான் வெச்சுருக்கேன்னு கடைசிவரை தெரியவே தெரியாது.

மாலை நேரத்துல எங்க தாத்தா கதை சொல்லுவாங்க, ஆனா அவங்களை கதை சொல்லவிடாம அய்யா உங்களுக்கு இங்லீஷ்ல ஒண்ணு,ரெண்டு,மூணு தெரியுமா சொல்லுங்க பார்க்கலாம் அப்படினு அவங்க ஒன்,டூ,த்ரி சொல்லும் அழகை ரசிச்சுப்பார்ப்பேன்.
எனக்கு இப்பவுமே தனிமைதான் ரொம்ப பிடிக்கும், அதுனாலயோ என்னவோ பக்கத்துல இருக்கிற இடத்துல யாருமே வீடு கட்டாம மயில்,அணில்,மரங்கொத்தி ,மஞ்சள்சிட்டு அதுங்களோட பொழுது போக்கிட்டிருக்கேன்.
அந்த வரிசையில அறுசுவையும் சேர்ந்திடுச்சு. அழகான குட்டி தோட்டம் ஒண்ணு உருவாக்கி அதுல மகிழம் பூ மரம் ஒண்ணு வளர்த்திட்ட்ருக்கேன்.

இந்த தோட்டம் போட்ட புதுசுல எங்கூட்டுக்காரர் ஒரு ஏக்ரா கடலபோடற காச புல்லு வளர்த்திரேனு போட்டு வெச்சிருக்குது பாரும்பாரு,
ஆனா இப்ப அலுவலகம் முடிஞ்சு வந்தவுடனே மரத்தையே அண்ணாந்து பார்த்து எத்தன் குருவிக்கூடு இருக்குனு எண்ணிக்கிட்டிருக்காரு.

ஆனா வீட்டுக்கு வர்ற உறவினர்களெல்லாம் வாடகைக்கு கட்டாம வெட்டி பண்ணி வெச்சிருக்கீங்கனு சொல்வாங்க. அவங்க தலை மரஞ்ச உடனே நாம்போயி ஏதாவது களை இருந்தா வேகவேகமா புடுங்க ஆரம்பிச்சுடுவேன்.

ஈரோட்லருந்து கோயம்புத்தூருக்கே இந்தப்போடுண்ணா வெளிநாடு வாழ் தோழிகளை நினைச்சு இதெல்லாம் ஒரு கஷ்டமானு நினைச்சுக்கிறேன்.

திருமணமான புதுசுல ஏன் பொண்ண இப்பிடி தூரத்துல(????)கல்யாணம் பண்ணிக்கொடுக்கிறீங்கனு எங்கப்பாவ கேக்காத ஆளில்லை.
அதுனாலயோ என்னவோ எங்கப்பா ஒவ்வொரு புதன் கிழமையும் என்னய பார்க்க வந்திருவாரு, சனிக்கிழமை மாலை நாங்க போய்ட்டு திங்கள்காலை வந்திடுவோம்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பரணிகா எப்படி இருக்கீங்க? இப்போ அங்கே பூந்தோட்டம் வைக்க முடியலைன்னா என்ன? நம்ப தோழிகள் சொன்ன மாதிரி இப்போ கற்பனையில் பூந்தோட்டம் வைங்க. அப்புறமா வாய்ப்பு கிடைக்கும் போது நிஜமாகவே வச்சுக்கலாம்.
சீக்கிரமே வந்து தனிமையா அப்படீன்னா என்னன்னு கேட்கப் போறீங்க பாருங்க.
அப்புறம் சும்மாத்தானே இருக்கறீங்க அப்படி இப்படின்னு வர கேள்விகளை சிறு புன்னகையுடன் கடந்து போய் விடுங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சி 1 மாசத்துலேயே என் கணவ்ர் என்ன இந்தியால விட்டுட்டு அவ்ரு மட்டும் சௌதி கிளம்பிட்டாரு. அப்போ என் சுத்தி எல்லா சொந்த பந்தங்கள் எல்லாரும் இருந்தும் நான் ரொம்ப தனியா இருக்குற மாதிரி உணர்ந்தேன்.ரொம்ப கஷ்டமான காலம் அது. அப்புறம் 3 மாசம் கழிச்சி தான் நான் சௌதி போனேன்.அங்க என் கணவர தவிர வேற யாரையும் எனக்கு தெரியாது. அங்க பக்கத்து வீட்டுல யாரு இருக்காங்கனு கூட தெரியாது. நான் அப்போ போனப்போ தமிழ் சேனல் எதும் இல்ல அதாவது அங்க வரும்னு எங்களுக்கு தெரியாது லேட்டா தான் தெரிஞ்சது அதனால அடுத்த வெக்கேஷன் இந்தியா போனப்போ தான் டிஷ் வாங்கிட்டு வந்தோம். ஒரு வருஷம் தமிழ் சேனலே பார்க்கல.என் கணவர் காலை 7.30 க்கு கிள்ம்புனா நைட் 7 மணிக்கு தான் வருவார். அது வரைக்கும் நான் மட்டும் தனியா தான் இருக்கணும். கணவர் கிளம்பவும் ஒரு குட்டி தூக்கத்த போடுவேன். அப்புறம் குளிச்சிட்டு சாப்பிட்டா அப்புறம் வேலை ஒன்னும் இருக்காது. இந்த நெட்ட தான் நோண்டிட்டு இருப்பேன், அப்போ அறுசுவைல நான் உறுப்பினர் ஆகல சும்மா அப்பப்போ பாப்பேன் அவ்வளவு தான்.என் கணவ்ர் ஃப்ரீயா இருந்தாருனா அவரு கூட தான் சாட் பண்ணிட்டு இருப்பேன் அதான் எனக்கு இருந்த ஒரே டைம் பாஸ்.ஆனா ரொம்ப ரொம்ப பிடிச்ச டைம் பாஸ்.இப்படி தான் தினம் தினம் டைம் போகும். வாரத்துல ஒரு தடவ வெளிய போவோம் அவ்வளவு தான். ஒரு வருசம் இப்படியே போச்சி. ஆனாலும் ஒரு நாள் கூட தனியா இருக்கோமேனு ஃபீல் பண்ணது இல்ல.என் கணவரோட இருக்குரது தான் எனக்கு மிக பெரிய சந்தோஷம் அதுக்கு முன்னாடி இந்த தனிமை எல்லாம் எனக்கு பெருசா தெரியல.அப்புறம் பாப்பா பொறந்ததுக்கு அப்புறம் சொல்லவே வேண்டாம் நேரம் போறதே தெரியல நல்லா என்ஜாய் பண்ணுறேன்.போதாததுக்கு நம்ம அறுசுவை வேற இருக்கு நேரம் தான் பத்தல எனக்கு. இப்போ இன்னும் ஒரு வாரத்துல திரும்பவும் நான் தனிமையா ஃபீல் பண்ண போறேன் அதாங்க இந்தியா போறோம் நானும் பாப்பாவும் மட்டும். என் கணவ்ர் வரல. எனக்கு என்னதான் உலகமே என்ன சுத்தி இருந்தாலும் என் கணவ்ர் என் கூட இல்லனா எதுவுமே பிடிக்காது. கணவ்ர் கூட இருக்கும் போது தனிமையும் இனிமை தான்....

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நீங்க ரெண்டு பேரும் சொல்லும் போதுதான் எனக்கும் தோணுது. தனிமை எனக்கு ஏற்கெனவே அறிமுகமான ஒன்னாதான் இருந்திருக்கு :(

9ம் வகுப்பிலிருந்து வீட்டில் நான் அப்பா அம்மா பாட்டி மட்டும்தான். என் வயதில் என்னோடு பேச யாரும் கிடையாது. பள்ளியிலும் எல்லார்கிட்டயும் அதிகமா பேசறது கிடையாது. எனக்குன்னு ஒரு நட்பு வட்டம் உண்டு அவங்ககிட்ட மட்டும்தான் பேசுவேன். அப்போதெல்லாம் புத்தகங்கள்தான் எனக்கு துணை. நிறைய புத்தகங்கள் படிப்பேன். நீங்க சொன்ன மாதிரி நிறைய கற்பனைகளும் ஓடும். என்ன கற்பனைன்னு சொன்னால் சிரிக்கப்படாது.

இப்போ திருடன் வந்தால் என்ன செய்வது? அவனை எப்படி சமாளிப்பது இப்படி பல அபத்த கற்பனைகள் :(. இப்பவும் இப்படில்லம் யோசிக்கறது உண்டு ஆனால் உடனே கவனத்தை திசை திருப்பிடுவேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//கணவ்ர் கூட இருக்கும் போது தனிமையும் இனிமை தான்....//

ஆயிரத்தில் ஒரு வார்த்தை இந்திரா! நானும் போன வருடம் இந்தியாவில் இருந்தேன். சுற்றிலும் எல்லாரும் இருந்தாங்க. ஆனாலும் மனதில் ஒரு இனம் புரியாத வெறுமை தனிமை. இங்கே யாரும் இல்லைன்னாலும் மனதில் வெறுமை வருவதில்லை

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

தோழிகளே சும்மா இருக்கிற மனசுல சாத்தான் புகுந்துக்கும் கிற்து 100கு100 உண்மை. அதுபோன்ற நாட்களை நானும் அனுவித்திருக்கிறேன். அப்பொழுது எல்லாம் புத்தகங்கள்தான் துணை. கணவர் அலுவலகம் முடிந்து வந்தவுடன் ஏண்டா வ்ந்தோம் என்று நினைக்கும் அளவுக்கு நானும் புலம்பி, அவரையும் குழப்பி இருக்கிறேன். சமீபகாலமாகத்தான் அறுசுவை என்னும் குடும்பத்தில் இணைந்து தோழிகளுடன் அளவலாவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அறுசுவை தளம் இல்லாவிட்டால்,இப்பொழுது நாம் பேசிக்கொண்ட கருத்துக்கள் இதுவரை பரிமாறிக்கொண்ட கருத்துக்கள் எல்லாம் நம்முடனேயே மக்கி போயிருக்கும். மனமார்ந்த நன்றியை இதன் மூலம் அறுசுவைக்கு தெரிவித்துக்கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
இந்திரா சொல்வது ஆயிரத்தில் அல்ல லட்ச்த்தில் ஒருவார்த்தை மாலை நேரம் என்பது கணவருக்கும், குழந்தைகளுக்குமே உரித்தானதாகிவிட்டது.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வாழ்த்துக்களுக்கு நன்றி அருட்செல்வி. நம்ப தோழிகள் எல்லோருக்குமே பூந்தோட்டம் அமைக்கறது பிடிச்சிருக்கு போல இருக்கே. ஹி ஹி எனக்கு பூந்தோட்டத்தை ரசிக்க மட்டும்தான் பிடிக்கும். என்னை யாராவது தோட்டம் போடுன்னு சொன்னீங்க எனக்கு கெட்ட கோபம் வந்திடும் ஆமா :). எனக்கு கை காலில் மண் ஒட்டுவதே பிடிக்காது அதான். யாராச்சும் செடியெல்லாம் நட்டு களை பிடுங்கி பராமரிச்சாங்கன்னா நான் தண்ணீர் ஊற்றி நல்லாவே பார்த்துக்குவேன் :)

//அதுனாலயோ என்னவோ எங்கப்பா ஒவ்வொரு புதன் கிழமையும் என்னய பார்க்க வந்திருவாரு, சனிக்கிழமை மாலை நாங்க போய்ட்டு திங்கள்காலை வந்திடுவோம்.//

இதுக்குப் பேர் தனிமை இல்லீங்கோ :). தோழிகள் கம்பை துக்கிட்டு வரதுக்குள்ள எஸ்கேப் ஆயிடுங்கோ :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்