தனிமையிலும் இனிமை காண முடியுமா?!!!

நம்மில் பலரும் வெளியூர் வெளிநாடுன்னு சொந்தபந்தங்களை விட்டு தள்ளி இருக்கிறோம். அப்போ நாம புதுசா அனுபவிக்கற ஒண்ணுதான் தனிமை. அந்த தனிமை கொடுமையா இருக்கா? இல்லை தனிமையை இனிமையாக மாத்திட்டீங்களா? எப்படி இனிமையா மாத்திக்கிட்டீங்க அப்படீன்னு தோழிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன். பதிவுகல் தமிழில் இருந்தால் இனிமை. ஆங்கிலத்துக்கு பெரிய தடா... :)

வாங்க பானு. தனிமையை போக்க என்னவெல்லாம் செய்யலாம்னு அழகா சொல்லியிருக்கீங்க. கூடவே விருப்பம் இருந்தா அந்த புது மொழியையும் கத்துக்கலாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இந்த இழை படிக்க ரொம்ப நல்லா இருக்கு பா...
நா கல்யாணம் ஆகி ஒரு மூணு மாசம் தனியா இருந்தேன்... முதல் ஒரு மதம் ரொம்ப ஸ்பீடா போனது...
அதுக்கு பிறகு ரெண்டு மாசம் செம போர்... சிறிது நேரம் நெட்டில் உலவுவேன் போர் அடிக்கும், சிறிது நேரம் டிவி அப்பறம் அதுவும் போர், அப்பறம் கதவு ஜன்னல் கம்பிகள் என்று மெதுவாக துடைத்து கொண்டு இருப்பேன்
ம்ம்ம்ம்.... அப்பவும் நேரம் போகாது.... இதுக்கு மேல முடியாதுன்னு போய் சமத்தா படுத்து தூங்கிடுவேன்... :D

மேலும் சில பதிவுகள்