தேங்காய் பால் ரசம்

தேதி: November 2, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

தக்காளி - ஒன்று
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
புளி - எலுமிச்சை அளவு
தேங்காய் - அரை மூடி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
கறி மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
சீரக தூள் - அரை தேக்கரண்டி
வடகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - முக்கால் தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி


 

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் புளி தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். மிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும். தேங்காயை பிழிந்து பால் எடுக்கவும்.
புளித் தண்ணீருடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு நன்கு பிசைந்து கலக்கவும்.
பின்பு அதில் மஞ்சள் தூள், கறி மசாலா தூள் உப்பு சேர்த்து கலக்கி, அடுப்பில் வைத்து கொதி வந்ததும் இறக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடகம், மிளகாய் தூள், சீரக தூள், கறிவேப்பிலை தாளிக்கவும்.
தாளித்தவற்றை ரசத்தில் போட்டு, கடைசியாக தேங்காய் பால் சேர்த்து கலக்கவும். தேங்காய் பால் ரசம் தயார். இது வயிற்று புண்ணுக்கு மிகவும் நல்லது. கறி குழம்புடன் இதனை சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனது குறிப்பினை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி....

பார்க்கும் போதே ரசம் சம வாசம்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நல்லா செய்து இருக்கீங்க. இதே போல தான் நாங்களும் செய்வோம்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஹை ரசம்ல கறி மசாலா தூள் லாம் சேர்த்து ஒரு புது ரசமா சொல்லித்த்ந்திருக்கீங்க ஷமீ. வாழ்த்துக்கள்....

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

assalamu alaikum shameela.indha rasam ku plain rice vache saapdalam.thanx 4 the rasam recipy.

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

வாழ்த்திற்க்கு நன்றி முசி....
அவசியம் செய்து பாருங்க..

ரொம்ப நன்றி ஹலிலா....நீங்களும் இப்படிதான் செய்வீங்களா....உங்கள் குறிப்புகளும் எங்கள் வீட்டு சமையல் போல தான் இருக்கிறது :)

வாழ்த்திற்க்கு நன்றி ரேவதி...இந்த ரசம் செய்து பாருங்க...புது ருசியாக இருக்கும்..

வலைக்கும் சலாம் சம்னாஸ்...இந்த ரசத்திற்க்கு ப்ளைன் சாதமும் நன்றாக இருக்கும்...செய்து பாருங்க...நன்றி...

ஷமீலா,
புதுமையான குறிப்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

அம்மாடியோ... வாசம் இங்குட்டு வருதே ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா