ஆகாய விமானம்!!!!

அன்புத் தோழிகளே! விமானத்தில் பயணிக்கும் ஒவ்வொவரிடமும் ஒரு கதை இருக்கும் அதைப்பற்றி பகிர்ந்து கொள்ளவே இந்த இழை, இதற்கு முன்பு இது போன்ற இழை இருப்பது போல தெரியவில்லை, கண்ணில் வேப்பெண்ணைய் விட்டும் தேடிப்பார்த்து விட்டேன். (விளக்கெண்ணெய் அதிகமாக எல்லோராலும் பயன்படுத்தப்ப்டுவதால் தட்டுப்பாடு காரணமாக கிடைக்கவில்லை). நடுவானில் நடந்த சுவாரசியம்,அசுவாரசியமான நினைவுகளை இங்கு மெல்லலாமே!

இரண்டு வருடங்களுக்கு முன் பள்ளி விடுமுறைக்கு சிங்கப்பூர் செல்லலாம் என முடிவெடுத்து, எந்த விமானத்தில் குறைந்தசெலவில் செல்லலாம் என் அலசி ஆராய்ந்து, ஒரு வழியாக பட்ஜெட் விமானம் தான் எங்களை அழைத்துச்செல்லும் பாக்கியத்தை பெற்றிருந்தது என்று சொன்னால் மிகையாகாது. எந்த ஜென்மத்தில் அது செய்த புண்ணியமோ எங்கள் காலடிதடம் அந்த விமானத்தில் பட்டது.(லுஃப்தான்ஸாகாரன் எல்லாம் பொடிப்பசங்க, அவன் கோவைலிருந்து சிங்கப்பூர் விமானம் விட்டிருந்தா ஏறமாட்டோம்ல, சில்க ஏர்கூட அப்பிடித்தான் ரெஜெக்ட் பண்ணிட்டோம்(???))
சென்னை விமானநிலையத்தில் ராக்கெட்டில் போகப்போகும் உற்சாகத்தோடு பராக்கு பார்த்துக்கொண்டிருந்தோம். எனது கணவருக்கு இது புதுசல்ல நிறைய விமானப்பயணம் அலுவலக வேலையாக மேற்கொண்டிருக்கிறார். ஆனால் அவர் சொல்லும் அறிவுறையை கேட்கும் மனநிலையில் நாங்கள்(குட்டீஸ்) இல்லை.
இன்னும் நேரமிருக்கிறது என்று கூறினாலும், அதை ஏற்காமல் அரைநாள் முன்பாகவே முகாமிட்டு விட்டோம். எங்கள் வரிசை வந்ததும் வெயிட் அதிகம். வேண்டும் என்றால் ஹேண்ட் லக்கேஜ்ஜில் வைத்துக் கொள்ளுங்கள் என்றனர். ஆட்டத்தூக்கி மாட்ல போட்டு, மாட்டத்தூக்கி ஆட்ல போட்டு பொட்டிபடுக்கையெல்லாம் மீண்டும் ஒருமுறை பிரித்து மேய்ந்தோம்(ன்)(பக்கத்தில் நற நற சத்தம்). ஒருவழியாக மேல்தளத்திற்கு சென்றோம். அங்கேயும் சம்பிரதாயங்களை முடித்துக்கொண்டு விமாநனத்திற்காக காத்திருந்தோம், என்னவரோ இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என கையிலிருக்கும் சிக்னலே இல்லாத தொலைபேசியில் ஆழ்ந்திருந்தார். திடீரென அங்கே ஒரு வரிசை உருவானது ,உடனே அந்த வரிசையில் போயி ஆஜராகப்பார்த்தேன், அது நமக்கான வரிசை இல்லை என்று பொறுமையாக கூறி அமரச்செய்தார். ஒரு வழியாக பட்ஜெட் என்னும் அலுமினிய கழுகு எங்களுக்காக காத்திருந்தது.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஒரு வழியாக விமானத்தில் ஏறி அமர்ந்து பயணம் செய்து சிங்கப்பூரை அடைந்தோம். என்னவர் ஒரு வாரத்திற்கு மட்டுமே அங்கிருந்து அவர் தனியாக வந்துவிட்டார், திரும்பி வரும்பொழுது குழந்தைகளுடன் தனியாக வந்தேன். இதே விமானத்திற்கு ஒரு 10பேர் அடங்கிய குழுவும் பயணம் செய்தது.
அடடா அவர்கள் செய்த அலப்பறையினால் விமானப்பணிப் பெண்கள் தங்கள் சிரித்த முகத்தை மறந்து விட்டனர். விமானத்தில் விற்கப்படும் பொருட்களை வாங்குவதற்கு ஏக கிராக்கி, ஒருத்தர் இன்னொரு நபரிடம், ஏண்டா மாப்பிள, ஊர்ல ஒருத்தர் நல்லா பீடி குடிப்பாருடா, அவருக்கு சிகரெட் வாங்கலாமா, இன்னொருத்தர் சென்ட் இப்படியே ஒவ்வொரு முறையும் ஏர்ஹோஸ்டஸை அழைத்துக்கொண்டிருந்தனர்.
அவர்களுடைய பார்வையே சரியில்ல.
பெண்களை போகப்பொருளாக நினைக்கும் ஆண்கள் எப்பொழுதுதான் திருந்துவார்களோ. சீட்பெல்ட் போடச்சொன்னால் போடுவதில்லை. சீட்டில் அமரச்சொன்னால் அமராமல் நடைபயின்று கொண்டிருந்தனர்.
பக்கத்து சீட்டில் அமர்ந்திருக்கும் பெண்ணையே வைத்த விழி வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பது. முறைக்கறாங்கனு தெரிஞ்சா அதவிட அதிகமா பார்ப்பது. ஒரு 4 ½, மணிநேரத்திற்கே இப்படி எரிச்சல் வருதே 15மணிநேரமெல்லாம் பயணம் மேற்கொள்ளும் பெண்களை நினைத்துக்கொண்டேன். மேலும் ஏர்ஹோஸ்டஸின் நிலைமை. இப்படிப்பட்ட ஒரு சில ஆண்கள் எப்பொழுதுதான் திருந்துவார்களோ!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நா விமானத்தில் போனதில்லைங்க.... உங்க அனுபவம் படிக்க நல்லா இருந்தது... :)

பஸ்சில் தான் ஜொள்ளர்களின் தொல்லை என்றால் விமானத்திலுமா..... என்னத்த சொல்றது போங்க...

நான் ஆகாய விமானத்தில் முதல் முதலில் வரும் பொழுது திருச்சி-ஸ்டீலங்கா வந்தேன் அது மிகவும் சிறியவிமானம் ஆகவே பறக்க ஆரம்பிக்கும் பொழுது மிகவும் பயமாக இருந்தது.
பின் ஸ்டீலங்கா- சௌதி வந்தேன்.
6 மாதம் கழித்து மீண்டும் சௌதி-சென்னை இந்தியன் ஏர்லைன்சில் இந்தியா சென்றேன் அப்பொழுது விமானம் மிகவும் மோசமாக சென்றது.விரைவு ரயிலில் செல்லிம் பொழுது எப்படி இருக்குமோ அதேப்போல் இருத்தது.இறங்கும் வரை உயிர் இல்லை.
சென்ற ஆண்டு சௌதியில் தமாமில் இருந்து -யான்பு சென்றாம் அப்பொழுது திரும்பி வரும் பொழுது விமானம் தரை இறங்குகையில் மிகபெரிய சத்தம் கேட்டது விமானம் தடம் புரண்டு விட்டதாக நினைத்து அனை வரும் பயந்து கத்திவிட்டார்கள் ஆனால் கடவுள் அருளால் எத்த பிரச்சனையும் இல்லாமல் தரை இறங்கினோம். அது மறக்கமுடியாத நிகழ்வு......................

by,
AnuGopi,
Be happy and Make others happy........

//நான் ஆகாய விமானத்தில் முதல் முதலில் வரும் பொழுது திருச்சி-ஸ்டீலங்கா வந்தேன் அது மிகவும் சிறியவிமானம் ஆகவே பறக்க ஆரம்பிக்கும் பொழுது மிகவும் பயமாக இருந்தது.//

நீங்க ரொம்ப பயந்திட்டீங்க போல நான் ஏர்றக்கு முன்னாடி ஒரு மாசமாவே ஏரோபிளேன்ல போன் எல்லார்த்துகிட்டயுமே சர்வே எடுத்துட்டம்பா.
அதுவுமில்லாம எங்க ஜெயிண்ட்வீல பாத்தாலும் ஏறாம வரமாட்டேன். எங்க ஊர் மாரியம்மன் பண்டிகைக்கு கொடை ராட்டினம் வரும், அதுல ஏறுனா ராட்டிணக்காரர் ராட்டிணத்த கழட்டணும் வேற ஊருக்குப்போகணும்னு கெஞ்சற வரைக்கும் எறங்கமாட்டோம்ல.
இது சின்ன வயசுலப்பா, இப்ப ஏறுனா ராட்டிணம் சுக்கு நூறாயிடும்.

///ஆனால் கடவுள் அருளால் எத்த பிரச்சனையும் இல்லாமல் தரை இறங்கினோம். அது மறக்கமுடியாத நிகழ்வு......................//

என் கணவர் ஒவ்வொரு முறை விமானப்பயணம் மேற்க்கொள்ளும் போதும் சாமிகிட்ட வேண்டிக்கிட்டேதான் இருப்பேன். தொலைக்காட்சில இந்த மாதிரி போடறப்பலாம், மனசு கிடந்து அடிச்சுக்கும்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நான் முதல்முறை விமானம் ஏறும் போது என் பையன் 1 மாத கருவாக இருந்தான் எனக்கு என்னைவிட என் குழந்தைக்கு எதுவும் ஆகாமல் இருக்கவேண்டும் என்று பயம்................

by,
AnuGopi,
Be happy and Make others happy........

மேலும் சில பதிவுகள்