மொசைக் கடல் பாசி

தேதி: November 3, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

கடல் பாசி - 50 கிராம்
சீனி - தேவையான அளவு
ஃபுட்கலர் - சிறிது
முட்டை - ஒன்று
தேங்காய் பால் - அரை கப் (முதல் பால் மட்டும்)
வெனிலா எசன்ஸ் - கால் தேக்கரண்டி

ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கடல் பாசியை அதில் போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும். தேங்காய் பால், முட்டை சேர்த்து கலக்கி வைக்கவும்.
அடுப்பில் வைத்து கடல் பாசி கரையும் வரை கொதிக்க விடவும். கடல் பாசி நன்றாக கரைந்ததும் சீனி சேர்க்கவும்.
சீனி கரைந்ததும் முக்கால் வாசி கடல் பாசியை ஒரு தட்டில் வடிகட்டி ஊற்றவும். அதில் ஃபுட்கலர் போட்டு உடனே கலக்கி விடவும்.
மீதம் இருக்கும் கடல் பாசியில் வெனிலா எசன்ஸ் கலக்கி வைத்து இருக்கும் பாலையும், முட்டையும் அதில் ஊற்றி திரியும் வரை கொதிக்க விடவும்.
அதை ஊற்றி வைத்த கடல் பாசியின் மேல் ஊற்றி கலக்கி விடவும்.
நன்றாக ஆறிய பின் தேவையான வடிவில் வெட்டவும். ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும். சுவையான மொசைக் கடல் பாசி தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

ஹலீலா ரொம்ப க்ரீனிஸா இருக்கு. வாழ்த்துக்கள் இது கேக்கா?

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

முட்டை சேர்த்து கடல்பாசியா! வித்தியாசமா இருக்கு.

‍- இமா க்றிஸ்

சூப்பரா இருக்கு,கடல் பாசி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வாழ்த்திற்க்கு ரொம்ப நன்றி ரேவதி. இது கேக் இல்லைமா. இது பார்க்க ஜெல்லி போல் இருக்கும். டேஸ்டும் அருமையா இருக்கும். இதை சைனா கிராஸ்/ அகர் அகர்/கடல் பாசி என்று சொல்வார்கள். பார்க்க வெள்ளையாக வைகோள் போல் இருக்கும். அதை தான் இப்படி செய்வோம்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப நன்றி இமா. முட்டை, தேங்காய் பால் சேர்த்திருப்பதால் டேஸ்டும் அருமையா இருக்கும்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப நன்றி முஹ்சினா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

உங்க மொசைக் கடற் பாசி இப்போ தான் செய்து ஆற வைத்து இருக்கேன்.

ஒரே ஒரு பீஸ் கட் பண்ணி சாப்ட்டு பார்த்தேன் மிக அருமை.
எங்க தலைவரு வந்ததும் (மொசைக் கல்லை சாரி )மொசைக் கடற் பாசியை கட் பண்ணி கொடுத்து அசத்தனும்:-)

SSaifudeen:)

ஹளிலா,
கண்கவரும் குறிப்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வஅலைக்கும் முஸ்ஸலாம் ஷமீஹா ரொம்ப சந்தோஷம் செய்து பார்த்து சொன்னதற்க்கு நன்றி.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வாழ்த்திற்க்கு ரொம் நன்றி கவிதா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

பார்க்கவே பளிச்சுன்னு அழகா இருக்கு கடல்பாசி :) சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி வனிதா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

தேங்காய் பால் சேர்த்து செய்திருகிறேன் முட்டை சேர்த்ததில்லை முட்டை வாடை வராதா.................

வஅலைக்கும் முஸ்ஸலாம் மீரான்துனைவி முட்டையுடன், தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடுவதால் முட்டை வாடை இதில் தெரியாது. எசன்சும் சேர்த்திருப்பதால் வாசம் நல்லா இருக்கும்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)