தற்கொலை எண்ணம் அடிக்கடி வருகிறது

அன்புத் தோழிகளே பிரசவத்திற்குபிறகு என் உடல் எடை 14 கிலோ கூடி விட்டது எவ்வளவு டயட் செய்தாலும் குறையவில்லை,எனக்கு தைராய்ட் குறைவாக சுரக்கும் பிரச்சனை உள்ளது, அத்தோடு விற்றமின் B12,D3 ஆகிய குறைபாடுகளும் உள்ளது. உடல் பருமனால் நான் மனதளவில் மிக மிக அதிகமாக பாதிக்க பட்டுள்ளேன். தற்கொலை எண்ணம் அடிக்கடி வருகிறது, வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் நரக வேதனையாக உள்ளது, என் உடல் எடை குறையவே மாட்டுதா?

உடம்பு அதிகமா இருப்பதால் தற்கொலை செய்றீங்கன்னா சொல்லுங்க நாங்க நிறைய பேர் இருக்கோம் சேந்தே போவோம்..நீங்க உடம்புக்காக இல்ல எதோ சில மனப்பரச்சனைகளால் இல்ல ஹார்மோனல் மாற்றங்களால் தான் இப்படி நினைக்கறீன்ப்க்க..உடம்பு குறைக்க குறைக்க கான்ஃபிடென்ஸ் அதிகமாகும்..ஒரு யோகா க்லாஸுக்கு நிச்சயம் போங்க நிச்சயம் எப்பேர்பட்ட எடையும் குறையும்

லக்ஷ்மி பிரபா... என்னங்க இது.. உடல் எடை 14 கிலோ கூடிருச்சுன்னு இந்த அளவுக்கு டிப்ரஸ் ஆகலாமா... தைராய்டு பிரச்னை இன்னிக்கு நிறைய பேருக்கு இருக்கு... நீங்க எந்த அளவுக்கு தைரியமா இருக்கரீங்களோ அந்த அளவுக்கு உங்க ஹெல்த் நல்லா இருக்கும்... எவ்வளவோ பேரு எத்தனையோ பிரச்சனையோட எவ்வளவு தைரியமா சந்திக்கறாங்க... போராடறாங்க... நம்ம அறுசுவைல கூட நீங்க பாருங்க... பல வருஷமா குழந்தை இல்லன்னு எத்தனையோ சகோதரிங்க பதிவு போடறத பார்க்கறோம்.. ஆனாலும் எவ்வளவு நம்பிக்கையா தைரியமா இருக்காங்க.. புற்றுநோய் வந்து வாழ்கையை ஜெயிச்சு சாதிச்சவங்க கதையெல்லாம் நீங்க பார்த்ததில்லையா... எவ்வளவோ இருக்குங்க...

கடந்த ஒரு வருஷ காலத்துல எங்க வீட்ல பெரியவங்க 3 பேருக்கு ஆபரேஷன் பண்ண வேண்டிய சூழ்நிலை வந்துச்சு... எல்லார் கூடவும் ஹாஸ்பிடல்ல கூட நான் இருந்தேன்.. கிட்டத்தட்ட ஒவ்வொருத்தர் கூடவும் 2 வாரம் வரைக்கும் ஹாஸ்பிடல்ல தங்கி இருந்தேன்... அங்கதான் எனக்கு புரிஞ்சுது நாமல்லாம் வாழ்க்கைல எவ்வளவு கொடுத்து வெச்சு பிறந்திருக்கோம்ன்னு... எத்தனை விதமான மனிதர்கள்.. எத்தனை குறைகளோட இருகாங்க... நடக்க முடியாம, உட்கார முடியாம, பார்வை இல்லாம, ஏன் அவங்களோட தேவைகளை கூட அவங்களே செய்துக்க முடியாமன்னு நிறைய பேரு இருக்காங்க... ஆனா எவ்வளவு தைரியமா இருகாங்க தெரியுமா.. ஆச்சரியமா இருந்துச்சு... அவங்க கிட்ட இருந்தெல்லாம் கத்துக்கணும்.. தைரியமா ஒரு நோயை சந்திக்கறவங்க தான் அதை ஜெயிக்கறாங்கன்னு நான் அங்கதான் கத்துகிட்டேன்... இதெல்லாம் இருக்கும்போது உடல் எடை அதிகமா இருக்கு எனக்கு வாழவே பிடிக்கலைன்னு சொல்றீங்களே லக்ஷ்மி... உங்க குழந்தை என்ன பண்ணும்...? யோசிங்க... இது பெரிய விஷயமே இல்லன்னு மட்டும் மனசுல fix பண்ணிகோங்க..

தளி சொல்ற மாதிரி இதுக்கெல்லாம் சாகனும்னா நாங்கல்லாம் கூட சேர்ந்து தான் வரணும்... நீங்க எப்பவும் போல வாக்கிங் போங்க, டயட் பண்ணுங்க... குறைஞ்சா குறையட்டும் இல்லன்னா விடுங்க... வெயிட் குறையலன்னா கூட வாக்கிங் போறது உடம்புக்கு நல்லது... நிறைய பேரு எடை கூட இருப்பாங்க ஆனா ரொம்ப ஹெல்தியா இருகாங்க... தேவையில்லாத விஷயங்களை யோசிக்காம உங்க குழந்தை கூட நேரத்தை செலவு பண்ணுங்க... சந்தோசமா இருங்க...

வித்யா பிரவீன்குமார்... :)

தோழி முதலில் இது ஒரு குறையே இல்லைப்பா.நீங்க மனதளவில் ரொம்ப பாதிக்க பட்டு இருக்கீங்க.இது பிரசவித்த அத்துணை பெண்களுக்கும் உள்ள ஒன்று தான். நான் தலைப்பை பார்த்த உடன் என்னமோ ஏதோன்னு பயந்து போயிட்டேன்.இதற்காக தற்கொலை என்ற எண்ணத்தை பயன்படுத்தாதீங்க ப்ளீஸ்.

உலகத்தில் ஈடு செய்ய முடியாத எத்தனையோ கஷ்ட்டங்களை பலர் அனுபவித்து தான் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.அழகான உடம்போடு ஓடி ஆடி திரிந்த பலர் விபத்துக்களில் தன் கை,கால்,கண் போன்றவற்றை இழந்து நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டு இல்லையா?அதை விடவா இது உங்களுக்கு பெரிய கஷ்ட்டமாக உள்ளது?

நான் சொன்னதை தயவு செய்து தப்பா எடுத்து கொள்ளாதீங்க.தலைப்பை பார்த்ததும் உண்மையா திடுக்கிட்டு போயிட்டேன்.ஆனால் உங்க கஷ்ட்டம் உங்களுக்கு தான் தெரியும்.

இருந்தாலும் முறையான உணவு கட்டுப்பாடும் தகுந்த உடற்பயிர்ச்சியும் நம் உடம்பு குறையும் என்ற நம்பிக்கையும் இருந்தால் நிச்சயம் உங்கள் உடம்பு எடை குறையும் லக்ஷ்மி :)

அப்பறம் உங்களுக்கு குழந்தை இருக்குன்னு நினைக்கிறேன் அந்த உயிரின் முகத்தை பாருங்க தற்கொலை என்ற எண்ணமே தோன்றாது.

லக்ஷ்மி நான் திரும்பவும் சொல்லுறேன் இது ஒன்னும் அவ்ளோ பெரிய குறை இல்லைப்பா.உங்களுக்கு தவறான எண்ணம் தோன்றும் போது உங்களுக்கு பிடித்தமான வேறு வேறு விசயங்களில் கவனத்தை திசை திருப்புங்க

SSaifudeen:)

அன்பு தோழி,
தலைப்பை பார்த்தவுடன் பயந்து தான் வந்தேன்...ஆனால் உடல் எடை அதிகரித்ததற்க்காக தற்கொலை எண்ணம் வருகிறது என்கிறீர்கள்....
இது எப்பொழுதுமே பெண் பிரசவித்ததும் ஏற்படும் உணவு பழக்கங்கள் ,உடல்நிலை மாற்றங்கள் ,அதிகப்படி ஓய்வு தான் காரணம்..இது மாதிரி எண்ணம் தோன்றும் போது உங்கள் குழந்தையின் முகத்தை பாருங்கள்...உங்களுக்காகவே இறைவன் அனுப்பிய வரம்....இதனை எல்லாம் விட்டு ஒரு சாதாரண விஷயத்திற்காகவா தற்கொலை வரை போகிறீர்கள்?
முயன்றால் முடியாதது எதுவுமெ இல்லை....உணவு பழக்கத்தை டயட்டீஷியன் அல்லது டாக்டர் ஆலோசனையோடு மாற்றுங்கள்...
தோழிகள் சொல்வது போல் யோகா,வாக்கிங்,சிறிய உடற்பயிற்சிகள் செய்யுங்கள்..
பகலில் தூங்கும் பழக்கம் இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள்.
குழந்தையுடன் ,வீட்டினருடன் நேரத்தை செலவிடுங்கள்....முக்கியமாக தனிமையில் இருக்காதீர்கள்...நல்ல இசை கேளுங்கள் ,வாசிக்க பிடிக்கும் என்றால் அதனையும் செய்யுங்கள்...
மனதிற்க்கு பிடித்த விஷயங்களில் மனதை செலுத்துங்கள்.....
இந்த எண்ணம் விரைவில் மறந்து நன்றாக வாழ வாழ்த்துக்கிறேன்.

அன்புத்தோழி லக்‌ஷ்மி
உடல் எடைக்கு தற்கொலையா?
அதுவும் 14 கிலோ எடை அதிகரிப்புக்கா?
ரோடில் அனாதைகளாக பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் குழந்தைகளை சிக்னலிலோ, வேறு இடங்களிலோ பார்த்திருக்கிறிர்களா? அவர்களின் அம்மாக்கள் என்னவானார்கள்?
இரண்டு கால்களும் இல்லாதவர்கள், பார்வையற்றவர்கள், இன்னும் பிற உடல் ஊனமாக பிறந்தவர்களை பார்த்திருக்கிறீர்களா?
இந்த பூவுலகில் பிறந்தவர்கள் யாருமே நூறாண்டுகளுக்கு வாழப்போகிறார்களா என்ன?
முதல் வேலையாக தோழி சொன்னதுபோல் யோகா வகுப்பில் சேருங்கள்.
எடை அதிகரிப்பு என்பது தீர்க்க முடியாத வியாதியா என்ன? தீர்க்க முடியாத வியாதி வந்தவர்கள் எல்லாம் எவ்வளவு உற்சாகத்துடன் இருக்கிறார்கள் என்று நேரிலோ, வலைத்தளங்கள் மூலமாகவோ அறிந்துகொள்ள முயலுங்கள்.
குழந்தையை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். அடிக்கடி அறுசுவைக்கு நேரம் ஒதுக்கி தோழிகளுடன் மனம் விட்டு பேசுங்கள். நல்ல மனநல மருத்துவரிடம் நேரில் சென்று ஆலோசனை கேளுங்கள்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

தோழிகளே உங்கள் அன்பான அக்கறையான பதில்களை பார்த்ததும் எனக்கு அழுகையே வந்திட்டுது, என்னுடைய கணவருக்கு 40 வயது ஆனால் அவரை பார்த்தால் யாருமே 28 வயதிற்கு மேல் சொல்லமாட்டார்கள், உயரமும் 172 ஆனால் நான் 152 அத்தோடு நான் வசிப்பது ஜேர்மனியில் இவருக்கு எப்பவும் உடலை கட்டுக்கோப்பாக வச்சிருக்கனும் என்கிற எண்ணம் உண்டு, ஏனென்றால் அவர் அப்படித்தான் உடற்பயிற்சி கராத்தே என்று எல்லாமே தெரியும், எனக்கு அவரோடு வெளியே போக வெட்கமா இருக்கு,உடல் பருமனால் குழந்தைகளின் படிப்பு முதல் எதிலயுமே என்னால் கவனம் செலுத்தமுடியாமல் இருக்கு,தனியா இருக்கும் போது அழுதுவிடுவேன். வீட்டில் treadmill இருக்கு அனால் இப்ப 2 மாதமா குதிக்கால் வலியால் அவதிப்படுகிறேன், அதை செக் பண்ண போய்தான் இந்த விற்றமின் குறைபாடுகளுக்கும் மருந்து எடுக்கிறேன் என்னமோ தோழிகளே என் உடல் எடை என்றைக்கு 52 கிலோ ஆகுதோ அன்றைக்கு நான் கொள்ளும் சந்தோஷம் வார்த்தைகளில் அடங்காது, ஒருவேளை எடை குறையாமலே இறந்து போனால் என் ஆத்மா சாந்தி அடையாது, எப்பவும் என்னால முடியும் என்றுதான் ஒவ்வொரு விஷயத்தையும் நினைத்து தொடங்குவேன் இந்த ஒரு பிரச்சனைதான் என்னை பாடாய்படுத்துகிறது, முயற்சி செய்துகொண்டே இருப்பேன் வெற்றி பெற்றால் என் சந்தோஷத்தையும் கண்டிப்பாக உங்களோடு பகிர்ந்துகொள்வேன், நன்றி அன்பு உள்ளங்களே!

நானும் தலைப்பை பார்த்து பயந்து தான் உள்ளே வந்தேன் தோழி.உங்களுடையது ஒரு பிரச்சனையே இல்லை.உடல் எடையை குறைக்க தோழிகள் சொன்னதை போல முறையான யோகா,உடற்பயிற்சி,உணவு கட்டுப்பாடு,மேலும் என் எடை குறையும் என்ற மனதளவில் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை தான் உங்கள் கவலையை தீர்க்கும்.

நாட்டில் உள்ள பலதரப்பட்டவர்களின் பிரச்சனைகளை பார்த்தால் உங்களுடையது ஒரு சிறு தூசு தோழி.என் அப்பா எங்களை வளர்க்கும் போது அடிக்கடி சொல்லுவது என்னவென்றால் பைக்கில் போறவன் சைக்கிளில் போறவனை பார்த்து சந்தோஷம் பட வேண்டும் நம்மிடம் பைக் இருக்கிறது என்று,சைக்கிளில் போறவன் நடந்து போறவனை பார்த்து சந்தோஷப்பட வேண்டும் நம்மிடம் சைக்கிள் இருக்கிறது என்று.

இதை எதற்காக சொல்கிறேன் என்றால் தோழி,நம் பிரச்சனை பெரிதாக எண்ணி நாமும் வருந்தி மற்றவர்களையும் வருத்தப்பட வைக்காமல்,ந்ம்மை விட கஷ்டப்படுகிறவர்கள் இருக்கிறார்கள்.அவர்களை பார்க்கும் போது நம் பிரச்சனை எவ்வளவோ பரவாயில்லை,மேலும் தீர்க்க கூடியதி என்று நினைத்து கொள்ளுங்கள்.

நீங்களே இவ்வளவு கவலைப்பட்டால் தீர்க்க முடியாத பிரச்சனை உள்ளவர்கள் என்ன செய்வார்கள் தோழி.

தோழிகள் கூறியதற்கு உங்களுடைய மறு பதிவை பார்த்தேன்.இன்னும் விரக்தி குறையவில்லை தோழி உங்களிடம்.தவறாக எண்ண வேண்டாம்,நீங்கள் உங்கள் சந்தோஷம்,மற்றும் உங்கள் குழந்தை,கணவரின் சந்தோஷம் முழுவதையும் பாழாக்குகிறீர்கள்.தேவையில்லை தோழி.மனதில் உள்ள தற்கொலை எண்ணத்தை முழுவதுமாக கைவிடுங்கள்.குழந்தைக்காக நாம் வாழ வேணும்.ஒரு குழந்தைக்கு அம்மா,அப்பா என்று இரண்டு கண்கள் தேவை.அதில் ஒன்றை கடவுள் பறித்தாலே அந்த குழந்தைகள் பாவம்.நாமே பறித்தால் எப்படி தோழி.

குண்டாக இருப்பது ஒரு பிரச்சனை இல்லை தோழி.உங்கள் வேலைகளை நீங்களே செய்து கொள்ளுங்கள் தோழி,எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள் தோழி.உங்களைடைய மனதில் பாஸிட்டிவ் எண்ணங்களை உருவாக்குகள் தோழி.

இனி தங்களுடைய அடுத்த பதிவு நல்ல தைரியமான லக்‌ஷ்மி போடும் பதிவாக இருக்க வேண்டும் என்பது இந்த தோழி,சகோதரியின் தாழ்மையான வேண்டுக்கோள்.

பி.கு.
தோழி ஏதேனும் தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்.என் அம்மா பெயர் லக்‌ஷ்மி.என் சிறு வயதில் அம்மா உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்கள். நான் என் இரண்டு பிரசவத்தையும் தனியாக பார்த்துக்கொண்டேன்.மேலும் உடல் நலக்குறைவால் சாவில் விளிம்பை தொட்டுவிட்டு திரும்பி வந்துள்ளேன்.என் குழந்தைக்களை நினைத்து அனைத்து வலி,வேதனைக்களையும் தாங்கி கொண்டேன்.நான் உடல் வேதனையை விட மனதால் பட்டது அதிகம்,இன்னும் பட்டுக்கொண்டிருப்பது அதிகம்.குழந்தைகளை பார்த்து அனைத்தையும் மறக்கிறேன்.நாம் இல்லாமல் குழந்தைகள் பாவம் தோழி.

Expectation lead to Disappointment

அன்பு தோழியே, நான் காலையே உங்களின் இந்த பதிவை பார்த்தேன்.எனக்கு வேலை இருந்தபடியால் பதிவு போட முடியாமல் இப்போது வந்து போடுகிறேன். அதற்குள் எனக்கு எதையும் சொல்ல வைக்காமல் எமதருமை தோழிகளே எல்லாவற்றையும் சொல்லி விட்டார்கள். எனக்கு தோன்றிய மிச்சத்தை சொல்கிறேன்.

உங்களுக்கு பிரசவத்திற்கு பிறகு உடல் எடை அதிகரித்து விட்டது என்றீர்கள். பிரசவத்திற்கு பிறகு உடல் அதிகரிப்பை சந்தோஷமாக உணருங்கள். நம் இல்லத்தை உற்சாகப்படுத்த இந்த உலகிற்கு புதிதாக பூத்த ஒரு மலரை சுமந்த நினைவாக அதை நினையுங்கள். உலக அழகி ஐஸ்வர்யா ராயையே எடுத்துக் கொள்ளுங்கள். அவர் பெரும்பாலும் அறியப்படுவது அவரின் அழகாலும், கொடி இடை போன்ற அவர் உடலாலும் தான். அப்பேர்ப்பட்டவர் பிரசவத்திற்கு பிறகு குண்டானதை பற்றி சிறிதும் அலட்டாமல் அதை ஒரு பெரும்பாக்கியமாக நினைத்து மீடியாக்களை பற்றி கூட கவலைப்படாமல் போட்டோக்களுக்கு போஸ் கொடுத்திருக்கிறார். பொது வாழ்வில் இருப்பவர்களே உடல் எடையை பற்றி கவலைப்படாத போது நம்மை போன்ற இல்லத்தரசிகள் அதை ஒரு பொருட்டாகவே எண்ண கூடாது தோழியே. ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். நாம் நம்மிடம் இருக்கும் உடல் குறையையே எப்போது நினைத்து கவலைப்பட்டு கொண்டிருந்தோமேயானால் அது இரட்டிப்பு ஆகும் தவிர குறையாது. அதை ஒரு பொருட்டாகவே எண்ணாமல், ஆனால் உடல் குறைப்புக்குரிய அத்தனை வேலைகளையும் தன்னம்பிக்கையோடு செய்து வாருங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும். புரிகிறது உங்கள் கவலை. உடல் எடை அதிகரிப்பால் நீங்கள் தன்னம்பிக்கையை இழந்தது போல உணர்ந்திருப்பீர்கள். பலாப்பழத்தை முழுதாக சாப்பிட சொன்னால் நம்மால் முடியுமா? சுளை, சுளையாக உண்டு தானே முழு பழத்தையும் காலி செய்ய முடியும். அதே போல் தான் உடல் எடைக்குறைப்பும் என்பதை மறவாதீர்கள். பயிற்சிகளால் சிறிது சிறிதாக தான் குறையும். முதல் வேலையாக நீங்கள் கண்ணாடியில் உங்களை பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி, யோகா, உணவு கட்டுப்பாடு போன்ற எல்லாவற்றையும் விடாமல் கடைபிடியுங்கள். ஒருமாதம் வரை கண்ணாடியை பார்க்காமலே இத்தனையும் செய்யுங்கள். நடுநடுவே உடல் எடையையும் பார்க்காமல் செய்யுங்கள். ஒரு மாதம் கழித்து பாருங்கள். நிச்சயம் நீங்களே ஆச்சப்படும்விதமாக உங்களின் எடை குறைந்திருப்பதை காண்பீர்கள்.

தோழியே, ஆறுதல் சொல்றவங்களுக்கு என்ன கஷ்டம்.. வாய்க்கு வந்ததை சொல்லிட்டு போய்டுவாங்க. அவஸ்தைபடுவது நாம்தானேன்னு மட்டும் நினைக்காதீங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான கஷ்டங்களை வாழ்க்கையில் சந்திச்சுட்டும், பார்த்துட்டும் தான் இருக்காங்க. அதை எல்லாம் நீங்க கேட்டிருந்தாலோ, பார்த்திருந்தாலோ நிச்சயம் இது போன்ற தலைப்பை போட்டிருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன். எனக்கு நாலேகால் வயதில் குழந்தைகள் உள்ளார்கள். பிரசவம் முடித்து இத்தனை வருஷம் முடிந்தும் எனக்கு வயிறு குறையவில்லை. நேரில் பார்க்கும் போது 5 அல்லது 6 மாதத்திற்கு குறையாமல் இருக்கும் வயிறு தோற்றம். நான் செல்லும் இடங்களில் எல்லாம் கேட்பார்கள் நீங்க ப்ரெக்னெண்ட்டா இருக்கீங்களான்னு.. நான் இதை நினைச்சு ஒரு நாளும் வருத்தப்பட்டதில்லை தோழி. அதற்காக நான் உடல் நலத்தின் மேல் அக்கறையில்லாமல் உலக ஆசையை வெறுத்து விட்டவள் என்று நினைக்க வேண்டாம். எனக்கும் மற்ற பெண்களை போன்று கொடியிடையாளாக இருக்க ஆசைதான். இருந்தாலும் அதற்காக ஒருநாளும் ஏங்கியது இல்லை. என் தோற்றத்தையும் வலுக்கட்டாயமாக பெல்ட் வைத்து மறைத்ததுமில்லை. என் குழந்தைங்க உதைத்து வளர்ந்த அந்த அற்புத தடத்தை நான் ஒரு குறையாகவே நினைக்கவில்லை. இதே குறை எனக்கு பல இடங்களில் நிறையை தந்துள்ளது. பல இடங்களில் நான் கர்ப்பிணி என்று நினைத்து உடனுக்குடன் என் வேலைகளை முடித்து அனுப்பி வைத்துள்ளார்கள். இதை நான் எதற்கு சொன்னேன் என்றால், குறையும், நிறையும் நாம் எடுத்துக் கொள்ளும் மனோபாவத்திலும், பார்க்கும் கண்ணோட்டத்திலும் தான் உள்ளது என்பதை கூறவே. நீங்கள் மேற்சொன்ன உடல் உபாதைகள் அத்தனையும் தீர்க்க முடியாதவை அல்ல. நாம் மனது வைத்தால், அந்த மனதில் சிறிதளவு நம்பிக்கை வைத்தால் மருந்தில்லாமலே குணமாகலாம். (நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்... லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்... இது ஆட்டோகிராப் படத்தில் வரும் பாடல் வரிகள்) இந்த வரிகளை மனசில் எழுதி வச்சு தினமும் சொல்லுங்க. முக்கியமாக உடற்பயிற்சி செய்யும் போது இதை நினைச்சுட்டே செய்யுங்க. என்ன ரிசல்ட் வந்ததுன்னு நீங்களே வந்து சொல்வீங்க.

தற்கொலையை பத்தி நினைச்சு பார்க்கறது இல்ல.. அப்படி ஒரு வார்த்தையை வாய்ல கூட வரவிடாதீங்க. ஏன்னா, தற்கொலையோட அருமையை உணர்ந்தவள் நான். எங்க வீட்ல 2 பேர் தற்கொலை பண்ணிட்டு இறந்து போயிருக்காங்க. ஒருத்தவங்க குழந்தையை சேர்த்து வச்சு இறந்தாங்க. இன்னொருத்தவங்க 2 குழந்தையை விட்டுட்டு இறந்தாங்க. இன்னைக்கு அந்த குழந்தைங்க சித்தி கொடுமைல வளர்ந்து கல்யாணம் ஆகி பிரசவத்தை அக்காவுக்கு தங்கை தான் பார்த்துட்டா.. அக்காவுக்கு ரெண்டாவது பிரசவத்தை முடிச்சுட்டு தான் தன்னோட கல்யாண தேதியை அந்த தங்கச்சி குறிக்க சொன்னா. பெத்த தாய் இருந்தா இப்படி சீரழிய விட்டிருப்பாளா? நாம ஈசியா சொல்வோம்.. எதாவது பிரச்சனைன்னா தற்கொலைன்னு.. ஏன்னா, நாம ஒருமுறை தான் சாக போறோம். ஆனா, வரப்போறவ கைல தினம்தினம் சாக போறது ஒண்ணும் அறியாத பாவப்பட்ட அந்த குழந்தைங்க தானே. அதனால் தான் சொல்கிறேன் தோழியே. தயவு செய்து பேச்சுக்கு கூட அப்படி ஒரு வார்த்தையை சொல்லாதீர்கள்.

உங்களுடையது பிரச்சனையே அல்ல. ஏனென்றால் உங்களின் இந்த பிரச்சனையை விட வாழ்க்கையே கேள்விக்குறியாக இருந்த போதிலும் அதை வெளிக்காட்டாமல் சிரித்து நம்மிடையே அளவளாவும் பல தோழிகளை நான் பார்த்துக் கொண்டு தான் வருகிறேன். இங்கே உங்களுக்கு மன ஆறுதல் சொன்ன தோழிகளை நினைத்து உண்மையில் பெருமை படுகிறேன். தோழி மீனாள் சொன்ன விதம் என்னை மிகவும் கவர்ந்தது. ஏனென்றால், அவரின் உடல்,மன வேதனைகளை ஓரளவு நான் அறிவேன். இருந்தும் அதை ஒரு பொருட்டாக நினைக்காமல் எத்தனை அழகாக ஆறுதலாக உங்கள் மனபுண்ணிற்கு மருந்து போட்டுள்ளார் பாருங்கள் தோழியே. தோழிகள் அனைவரின் பதிவும் உங்களிடையே ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தால் நிச்சயம் அது எங்களுக்கு மன திருப்தியையும், பெருத்த சந்தோஷத்தையும் ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

உங்கள் கணவர் உடலை கட்டுப்கோப்பாக வைத்து ட்ரிம்மாக சிறிய வயதினர் போல இருக்கிறார். அவருடன் வெளியே செல்லும் போது வெட்கமாக உள்ளது என்றீர்கள். முதலில் உங்கள் மனதில் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை தூக்கி எறியுங்கள். நீங்கள் உடல் அளவில் மட்டும் தான் குறையுள்ளதாக நினைத்து கூனி குறுகி போயுள்ளீர்கள். உங்களுக்கு மனது அழகாக உள்ளதே.அதை நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள் தோழியே. அடுத்தவர் குடியை கெடுத்துக் கொண்டு, அடுத்தவர் வாழ்வில் மண்ணை போட்டுக் கொண்டும் இருப்பவர்களே அதை பற்றி குற்ற உணர்வு சிறிதும் இல்லாமல் நடக்கும் போது, உடல் பருமனை போய் பெரிய அவமானமாக நினைத்து ஏன் தலைகுனிகிறீர்கள். தலை நிமிர்ந்து நடங்கள். அது உங்களுக்கு தனி கம்பீரத்தை கொடுக்கும். நானும் ஒரு விதத்தில் உங்களை போல் தான் இருந்தேன்..கொஞ்சம் கூட்டத்தை பார்த்து விட்டால் தூரத்திலேயே தலையை தொங்கப்போட்டுக்கொண்டு ஆடு மாதிரி போய் விடுவேன். பிறகு வந்த காலங்களில் எதற்கு தலை தொங்க போட்டு சென்றோம். நாம் என்ன தவறு செய்தோம்.. என்று எனக்கு நானே கேள்விகளை கேட்டுக் கொண்டு இன்று அவற்றை களைந்து பாரதி கண்ட புதுமை பெண்ணாய் வீறு நடை போடுகிறேன் :) தோழியே, இப்போதும் சொல்வேன். உங்களின் உடலில் குறை இல்லை. மனதில் தான் குறை உள்ளது. தாழ்வுணர்ச்சி, தன்னம்பிக்கை குறை. முதலில் நெகடிவ் எண்ணங்களை அகற்றுங்கள். காலையில் எழும்போது புத்துணர்ச்சியோடு எழுங்கள். தன்னம்பிக்கை மிகுந்த வார்த்தைகளை கொட்டை எழுத்தில் எழுதி பெட் ரூமில் ஒட்டி வையுங்கள். ஒவ்வொரு நாள் எழும்போதும் அதை தாரக மந்திரம் போல் படித்து விட்டு அன்றைய வேலையை தொடருங்கள். நிச்சயம் நீங்கள் நினைத்த நல்லது நடக்கும். பெண்கள் நினைத்தால் முடியாததும் உண்டோ?

அடுத்த பதிவில் உங்களை புதுபொலிவுடன் பார்ப்பேன் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவை முடிக்கிறேன். நான் கொஞ்சம் காமெடியாக பேசுவேன் என்று அறுசுவையில் தோழியர் பலர் சொல்லி கேட்டிருக்கிறேன் தோழியே. ஆனால், யாரையும் மனம் நோக கிண்டல் செய்து பேசியதில்லை. நான் மேலே சொன்னவற்றில் எதாவது மனம் புண்படும்படி இருந்தால் மனதில் வைக்காமல் மன்னித்து விடுங்கள்.

தோழியே ஒன்றை சொல்ல மறந்துட்டேன். தினமும் சீரியல் பார்ப்பீங்கன்னா.. முதல்ல அந்த பழக்கத்தை விடுங்க. உடலும், மனமும் அடுத்த நாளே ஆரோக்கியமா இருப்பதை ஃபீல் பண்ணுவீங்க. அதற்கு பதில் தன்னம்பிக்கை தரக்கூடிய புத்தகங்களையும், ஆன்மீக புத்தகங்களையும் தேடி படிங்க. நீங்க விரும்பின அத்தனையும் கிடைக்கும். இன்னைக்கு தேதியில் பாதி நோய்க்கு காரணம் இந்த தொல்லைகாட்சி சீரியல்கள் தான். நான் கூட சீரியல் பார்க்காத நாள்ல நார்மலா இருப்பேன். சீரியல் பார்த்தால் அன்னைக்கு பத்ரகாளி அவதாரம் தான். இதை நான் சொல்லலைங்க. என் ஆத்துக்கார் சொல்வார்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மற்ற தோழிகள் கூறிய பதில்களை நீங்கள் இன்னும் படித்தீர்களோ இல்லையோ நான் படித்தேன்.
பார்த்தீர்களா எவ்வாறெல்லாம் அறிவுரை சொல்லியிருக்கிறார்கள் என்று. எல்லோரொரையும் நினைத்துப்பாருங்கள் யாரும் உறவுகள் புடைசூழ வாழவில்லை.
நீங்கள் நினைக்கலாம் நாம் தனியாக இருக்கிறோம், உதவிக்கு ஆளில்லை என்ற சுய பச்சாதாபம் உங்களுக்கு ஏற்ப்பட்டிருக்கும். எனது மகளை 21 நாள் குழந்தையிலிருந்து தனியாகவே வளர்தேன். என் தாய் என்னுடன் உதவிக்கு இருக்கமுடியாத சுழ்நிலை. எனது கணவர் அலுவலகம் செல்வதற்குள்ளாக அனைத்து வேலைகளையும் முடித்துவிட்ட, மகனையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, மகளுடன் நானும் சிறு குழந்தையாக மாறிவிடுவேன்.
சினிமாவில் மட்டுமே ஜோடிப்பொருத்தம் பார்த்து நடிக்க வைப்பார்கள் தோழி. நிஜவாழ்வில் அதை எதிர்பார்க்கக்கூடாது. உங்கள் கணவருடன் மனம் விட்டு பேசுங்கள். எதிர்காலத்தைப் பற்றி சிந்தியுங்கள்.
சிறு கல்லை கண்ணுக்கு மிக அருகாமையில் வைத்துப்பார்த்தால் பாறாங்கல்லைப் போன்று தான் தோற்றமளிக்கும், பிரச்சினைகளை தள்ளி வைத்துப்பாருங்கள்.
தோழி நெட்டில் பாராஒலிம்பிக்கை போட்டுப்பாருங்கள்.
தோழி சொன்னதுபோல் என் உருவத்தைப்பார்துவிட்டு எத்துனையோ முறை பேருந்துகளில் கூட்ட நெரிசலிலும் அமர்ந்து செல்லும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். மறுத்தாலும் விடமாட்டார்கள். கையை பிடித்து இழுக்காத குறைதான்.
தோழி காயப்படுத்தும் நோக்கில் நானும் எழுதவில்லை.
உங்களின் நல்ல உற்சாக பதிலுக்காக அனைவரும் காத்திருக்கிறோம்.

எப்பொழுதுமே தண்ணீர் வெதுவெதுப்பாக அருந்துங்கள். டப்பாவில் அடைத்த உணவுப்பொருட்களை அறவே தவிர்த்து விடுங்கள். மனதை உற்சாகமாக வைத்திருங்கள். நீண்ட ஆயுளுடன் எல்லா வளங்களையும் பெற்று வாழ வாழ்த்துக்கள் தோழி.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

உடம்பு ஏறினா கொஞ்சம் கவலைபடுவது நல்லது தான்..குறிப்பா ஆம்பிளைக யானை உள்ள போனாலும் அப்படியே இருப்பாங்க நாம மட்டும் ஏறிட்டே போனா நல்லா இருக்காது..இதான் நம்ம உடம்புன்னு திருப்தி படவும் கூடாது..குறைக்க முயற்சி செய்யலாம்..நான் சோம்பேரித்தனமா இருக்கப்ப அப்பப்ப வெயிட் லாஸ் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் எடுத்து பார்ப்பேன் எப்படியெல்லாம் இருந்தவங்க எப்பட்யெல்லாம் குறைச்சாங்கன்னு பார்க்கையில் நமக்கும் கான்ஃபிடென்ஸ் வந்துடும்..உடம்புன்னு உக்காந்து சங்கடப்பட்டா நம்ம உடம்பு குறையுமா..ஒரு 2 வாரம் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து கண்ணாடியை பாருங்க எப்படி இருக்கு உடம்புன்னு...தொடர்ச்சியா செய்தால் 8 மாசம் தான் உங்க உடம்பு பழைய நிலைக்கு வந்துடும்..மாசத்துக்கு ரெண்டு கிலோ வாரத்துக்கு 500 கிராம்னு கணக்கு வெச்சு செய்து பாருங்க..இப்போ நானும் அந்த முயற்ச்சியில் தான் இருக்கேன்..லோ ஃபேட் பால் வாங்கி குடிப்பேன் ..வீட் ரஸ்க் படிக்கும்போது கொரிக்கிறதுக்கு பதில் கொஞ்சமா ப்லாக் டீ எடுத்துட்டு டிப் பண்ணி சாப்பிடுவேன்..இப்படி நம்மால முடிஞ்ச மாதிரியெல்லாம் உணவு கட்டுப்பாஅடும் எது இஷ்டமோ அது ஸ்கிப்பிங் இல்ல எலிப்டிகல் இல்ல யோகா பிலாடெஸ் இப்படி எதுவா இருந்தாலும் காலை மாலைன்னு 30 /30 நிமிஷம் செய்தால் போதும் அருமையா உடம்பு குறையும்..
உடம்பை குறைக்கிறேன்னு காலைல ப்ரேக்பாஸ்ட் கட்டுப்படுத்த கூடாது காலை சாப்பிடுற உணவு தான் மீதமுள்ள வேளை உணவுகளை செரிக்க வைக்க உதவும்..காலைலயே ஸ்கூட்டர் கிக் பண்ணிஉ வைக்கிற மாதிரி..அப்போ திருதியா அதிகம் எண்ணை இல்லாத உணவுகளா விரும்பியதை சாப்பிடலாம்..மதியம் சாதம் தவிர்க்கலாம்..இரவு வேகாஇக்காத எண்ணை இல்லாத உணவு மட்டும்..செய்Dஹு பாருங்க நல்லாவே குஆறீYஊM

மேலும் சில பதிவுகள்