அப்படியே இவருக்கும் உங்கள் ஆலோசனைகளை வழங்கிடுங்கள்.

மின்னஞ்சல் மூலமாக ஒரு அறுசுவை நேயர் அவரது பிரச்சனையைக் குறிப்பிட்டு தீர்வு கேட்டுள்ளார். அவரது பெயர் குறிப்பிடாமல், அவர் அனுப்பியதை அப்படியே (எழுத்துப் பிழைகளுடன்) இங்கே தருகின்றேன். உங்களால் இயன்ற ஆலோசனைகளை அவருக்கு வழங்கிடுங்கள்.

அவசர தீர்வு தேவை

அன்புள்ள அம்மா ....
எனக்கு திருமணம் ஆகி இருபது மாதங்கள் ஆகியது.எனது மனைவி எனது தாய் மாமன் பெண்.அவருக்கு மூன்று பெண்கள்.பையன் கிடையாது சொந்தம் விடக்கூடாது என்று திருமணம் செய்ய என் தாய் ஏற்பாடு செய்தாள்.எனக்கு அப்பா இறந்து விட்டார் அம்மா மட்டும் தான்.நாங்கள் வரதட்சணை ஏதும் வேண்டாம் என்று சொல்லிவிட்டோம்.இப்போது என் மாமியாரின் ஆலோசனையின் பெறில் என் மனைவிக்கு என் தாயாரை பிடிக்கவில்லை.எப்போதும் சண்டை போடுவதும் அடிபதும்மாக இருக்கிறாள்.இதை கேட்டதற்கு என் எட்டு மாதம் அவர்கள் வீட்டில் வைத்துகொன்டர்கள்.இடையில் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது அதனால் எல்லாவற்றையும் மறந்து நாங்கள் எங்கள் வீட்டில் அவளை கூப்பிட்டு சந்தோசமாக இருந்தோம்.அவள் தாயார் இடையில் தினமும் போன் செய்து பெசிகொண்டிருப்பார்கள்.மீண்டும் தேவை இல்லாத சண்டை வளர்த்து என் தாயை என் மனைவி அடிதுவிட்டாள்.அவளது வீட்டிற்கு குழந்தையை கூடிக்கொண்டு சென்றுவிட்டாள், இப்போது என் தாய் என் மனவியை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.என் விருப்பமும் அது தான்.அனால் என் குழந்தையிடம் நான் என் உயிரை வைதுகொண்டிருகிறேன்.நான் என் குழந்தையை பார்கவிட்டால் கட்டாயம் இறந்துவிடுவேன்.என் மனைவியை மீண்டும் வீட்டில் வைத்தல் என் தாய் அடிபடுவாள்.நீங்கள் தான் இதற்க்கு தீர்வு சொல்ல வேண்டும் ......................

நீங்கள் யாராக இருந்தாலும் சரி... மனதில் பட்டதை சொல்கிறேன்.

படிக்க வருத்தமாகவே இருக்கிறது... மாமியாரை கை நீட்டும் பெண்ணா???!!! பெண்களாக நாங்கள் அவமானப்படுகிறோம். என்ன செய்ய.

நீங்க உங்க மனைவியிடம் அவர் அப்படி நடந்துக்க காரணம் கேட்டீங்களா? பேசி இருக்கீங்களா பிரெச்சனை ஏன் என்று?? அவர் என்ன சொல்றார்? உங்க அம்மா என்ன சொல்றாங்க (உங்க மனைவி வேண்டாம் என்பதை தவிற)? நீங்க இருக்கும் போதே அடிப்பார்களா உங்க மனைவி? உங்க மாமியார் வீட்டில் மனைவி செய்வது பற்றி பேசி இருக்கீங்களா? அவங்க பதில் என்ன? ஏன் இப்படி மனைவி நடந்து கொள்வதாக அவர்கள் சொல்கிறார்கள்? 8 மாதம் உங்க மனைவியை வீட்டில் வைத்திருந்தார்களே... நீங்க போய் பார்த்தீங்களா? எதாவது பேசினீங்களா? அப்போ எப்படி நடந்துகிட்டாங்க மனைவியும், மனைவி வீட்டாரும்? இப்படி நிறைய கேள்வி மனசுல இருக்கு.

எனக்கு இப்போ உடனடியா ஏதும் யோசனை சொல்ல தோணல... ஆனா கட்டாயம் மனைவி வேண்டாம் என்பது தீர்வு அல்ல. அது மட்டும் உறுதியா சொல்ல முடியும். அவசரப்படாதீங்க... கொஞ்சம் பொறுமையா இருங்க, நம்ம தோழிகள் உங்க மனைவியை வழிக்கு கொண்டு வர வழி சொல்வாங்க. காத்திருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இதெல்லாம் டூ மச்ச்ச்ச்ச்ங்க... அந்த பொண்ணோட மாமியார் யாரா போய்ட்டாங்க? சொந்த பாட்டி தானே.அவங்களை அடிக்க எப்படி மனசு வருதோ? அட்லீஸ்ட் அவங்க வயசுக்காவது மரியாதை தரவேணாமா? தாய் மாமன் பெண்ணாகவே இருக்கட்டும். அதற்காக அம்மாவை அடிப்பதையும் இவர் பொறுத்து கொண்டிருப்பாரா? அம்மாவின் மேல் முதல் அடி விழுந்த போதே இவர் ஒரு அடியாவது மனைவிக்கு கொடுத்திருந்தால் அவர் தொடர்ந்து இதுபோல மாமியாரை அடிப்பதை தொடர்ந்திருக்க மாட்டார். எதற்கும் ஒரு அளவு உண்டு இல்லீங்களா? இவர் ரொம்பவும் அடங்கி போனதால் தான் அவர் மனைவி மனதுக்கு தோன்றியதை எல்லாம் செய்திருக்கிறார். சொந்தம் விடக்கூடாதுன்னு சொந்தத்திலேயே முடிச்சு போட்ட பாவத்தை தவிர அவர் தாய் என்ன பாவம் செய்தார். இதில் யார் தவறு.. யார் சரி என்று நேரில் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும். கேள்விப்பட்டவர்கள் இவர் சொல்வதை வைத்து மட்டும் தான் சொல்ல தெரிந்த ஆலோசனையை சொல்ல முடியும்.

பெண்கள் எப்பவும் பாவப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் பக்கமே பேசிக்கொண்டிருப்பதில் நியாயம் இல்லை. இவர் போன்ற பெண்களை பார்த்தால் அந்த எண்ணத்தில் மண் தான் விழுகிறது. திருமணம் ஆன நாளிலிருந்தே இவர் மனைவிக்கு அடங்கி போயிருப்பாரோ, அல்லது இவர் பெருந்தன்மையாக விட்டுசென்றது அந்த பெண்ணிற்கு இளிச்சவாய்த்தனமாக தெரிந்து இப்படியெல்லாம் செய்கிறாரோ என்று தெரியவில்லை. இப்போதாவது இவர் சுயமரியாதையை வெளிக்கொணர வேண்டும். அதை இவர் மனைவி தன் தாயை அடிக்க கை ஓங்கியபோதே காட்டியிருக்க வேண்டும். ஆனால் காட்டாமல் விட்டதால் இத்தனையும் பட்டுக் கொண்டிருக்கிறார். இனி குழந்தைகளுக்காகவாவது அதை காட்ட வேண்டும். கல்யாணம் ஆகி ஒருவருடம் எட்டு மாதங்கள் தானே ஆகின்றன.விட்டு பிடியுங்கள். மறுபடி சமரசமாக பேசி வீட்டிற்கு அழைத்து பாருங்கள். அப்படியும் வரவில்லையென்றால் கொஞ்சம் காட்டத்தை காட்டுவதில் தவறேதும் இல்லை. அப்படியும் முடியாது என்று சொன்னால் உங்கள் குழந்தையை உங்களோட அழைத்து வரும் உரிமை உங்களுக்கு உண்டு. பெற்ற குழந்தையின்மேல் கணவன் - மனைவி இருவருக்கும் சரிபாதி உரிமை உண்டு. உங்கள் மாமியாரிடமும் சொல்லி, இனி பெண்ணோடு பேசி குடும்பத்தின் அமைதியை குலைத்துக் கொண்டோ, குடும்பத்தை பிரித்துக் கொண்டோ இருந்தால் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் அதையும் மீறி செய்தால் அவர் பெண்ணை அவரோடு வைத்திருக்க சொல்லிவிட்டு உங்கள் குழந்தையை நீங்கள் அழைத்து வந்துவிடலாம். குழந்தைக்காக அந்த பெண் கொஞ்சமாவது மனம் திருந்துவார்.

அட்மின் அண்ணா ஏதோ என் சின்ன புத்திக்கு எட்டியதை சொல்லியிருக்கேன். இதில் தவறேதும் இருப்பின் எடிட் செய்துடுங்க. காலை எழுந்தவுடன் அறுசுவையை ஓபன் பண்ணதும் இந்த இழைதான் கண்ணுக்கு பட்டது. நான் கூட, பாபு அண்ணா நம்மை ஏதோ கிண்டல் பண்றார் போலன்னு நினைச்சுட்டு தான் ஓபன் பண்ணேன். அப்புறம் தான் மேட்டர் தெரிஞ்சு உடனே ஒரு பதிவையும் போட்டுடலாம்னு போட்டுட்டேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்புள்ள அட்மின் சகோதரருக்கு வணக்கம், நான் அறுசுவையில் சேர்ந்ததிலிருந்து உங்களிடமிருந்து எந்த பதிலோ, கேள்வியோ, பங்கேற்போ எதுவும் இல்லை. இப்பொழுது எங்கள் கருத்தை நீங்கள் கேட்டிருப்பது சகோதரிகளின் கருத்துக்களுக்கான் அங்கீகாரமாக நினைக்கிறேன்.

இப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள். மனைவியை பிரிவது மட்டுமே சரியான தீர்வு இல்லை.
உங்கள் மனைவி மனச்சிதைவு நோய்க்கு ஆளாகியிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை, ஏனென்றால் உங்கள் தாயை அடிக்கிறார் என்பதிலேயே அது உறுதியாகிறது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சிறந்த மனநலமருத்துவரை அணுகி உரிய ஆலோசனை பெறுங்கள்.
மனம் விட்டு பேசுங்கள், தாயை அடித்த நிகழ்வை திரும்ப சொல்லிக்காட்ட வேண்டாம். உடல் நோயைப்போன்றே மனதிலும் இனம்புரியாத கோபம், இயலாமையினால் உண்டாகும் மனச்சோர்வு போன்ற வியாதிகள் உட்புகுந்து விடுகின்றன.
குடும்ப வாழ்க்கை சிறப்படைய அறுசுவை தோழிகளின் வாழ்த்துக்கள் சகோதரரே.
தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நான் அந்த அளவு அனுபவம் வாய்ந்தவள் இல்ல. இருந்தாலும் நான் சொல்லறது நல்லதுன்னு பட்ட செயல்படுத்தி பார்க்கலாம்.

அந்த பெண் திமிரினால செஞ்சதா இருக்கலாம் அல்லது அறியாம செஞ்சதாவும் இருக்கலாம். அந்த பெண் திமிரினால செஞ்சா வழி இல்ல. அறியாம நடந்திருந்தா திருத்தி சேர்ந்து வாழ்றது தான் நல்லது.வாழ்க்கைல மனைவி என்பவள் ரொம்ப முக்கிய பங்கு வகிக்கிறவள். அந்த மனைவி அறியாமையாள தவறா நடந்திருக்க நிறைய வாய்ப்பு இருக்கு.

நீங்க இந்த இடத்துல ரொன்ப பொறுமையா இருக்கணும். உங்க மனைவின்னு நினச்சு நியாயமா move பண்ணனும்.

சகோதரி சொன்ன மாதிரி அடிச்சது உங்க கண் முன்னாடியா என்பதையும் உறுதி படுத்துங்க. எந்த பெண்ணும் தன கணவன் தான் உயிரோடு இருக்கும்போது மறுகல்யாணம் பண்ணறதை சகிச்சுக்கிரமாட்டா. நீங்க மிரட்டி பாருங்க.புரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கு.

உங்களோட எப்படி வாழ விருப்பம் என்பதயும் அறிந்துகொள்ளுங்கள் . நாம ஏன் இறங்கி போகனும்னு நினைக்காதீங்க.but அந்த மனைவி வேணாம்னு ஒருபோதும் நினச்சுராதீங்க.

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

// நான் அறுசுவையில் சேர்ந்ததிலிருந்து உங்களிடமிருந்து எந்த பதிலோ, கேள்வியோ, பங்கேற்போ எதுவும் இல்லை.//

கண்டிப்பாக, நீங்கள் சேர்ந்தது அதற்கு காரணம் கிடையாது. :-) சில மாதங்களாகவே என்னுடைய பதிவுகள் அறுசுவையில் இல்லை. வேறு சில பணிகள், மின்வெட்டு, அலுவலகம் சீரமைப்பு என்று காரணங்கள் பல சொல்லலாம். விரைவில் நிறைய பங்களிப்புடன் வருகின்றேன். நீங்கள் எல்லோரும் வெறுத்துப் போய் என்னை வெளியேற்றும் அளவிற்கு என்னுடைய பதிவுகள் அறுசுவையில் இடம்பெறும். தயாராய் இருங்கள். :-)

//காலை எழுந்தவுடன் அறுசுவையை ஓபன் பண்ணதும் இந்த இழைதான் கண்ணுக்கு பட்டது. நான் கூட, பாபு அண்ணா நம்மை ஏதோ கிண்டல் பண்றார் போலன்னு நினைச்சுட்டு தான் ஓபன் பண்ணேன்.//

கிண்டல் எல்லாம் இல்லைங்க.. இந்த மாதிரி கேள்விகள் அப்பப்ப என்னோட மின்னஞ்சல் முகவரிக்கு வரும். மன்றத்துல எப்படி பதிவு கொடுக்கிறதுன்னு தெரியாம, சிலர் தொடர்புக்கு பக்கம் வழியா அவங்க கேள்விகளை கேட்டு அனுப்புவாங்க. அப்படி வர்ற கேள்விகள்ல நிறைய கேள்விகள் ஏற்கனவே மன்றத்துல கேட்கப்பட்டதா இருக்கும். அதுக்கு நான் பதில் கொடுக்கிறது இல்லை. சில கன்னாபின்னா கேள்விகள் வரும். அதையும் அலட்சியப்படுத்திடுவேன். ஒரு சில கேள்விகள் நியாயமா இருக்கும். என்னால முடிஞ்சா அதுக்கெல்லாம் பதில் கொடுத்துடுவேன். இந்த மாதிரியான கேள்விகள் உண்மையா இருந்தாலும், பதில் சொல்ற அளவுக்கு குடும்ப விசயங்கள்ல எனக்கு அனுபவம் கிடையாது. நான் லைஃபை லீட் பண்ற விதம் வேற. அதனால என்னோட ஆலோசனை எல்லாருக்கும் ஒத்து வராது. அதனாலத்தான் இந்த கேள்வியை மன்றத்துக்கு கொண்டு வந்தேன். அதுமட்டுமில்லாம, ஒரு பக்கம் மட்டும் கேட்டு பதில் சொல்றது ரொம்பவே கஷ்டமான விசயம். கேள்வி கேட்டிருப்பவரின் மனைவி "அடித்தாரா.." அல்லது "திருப்பி அடித்தாரா?" ங்கிறது, இன்னொரு பக்க விளக்கத்தையும் கேட்டாத்தான் தெரிய வரும்.

இன்னொரு காரணம், இந்த பிரச்சனைக்கு மற்றவங்க என்ன மாதிரியான ஆலோசனை கொடுக்கிறாங்கங்கிறதையும் தெரிஞ்சுக்க ஆசைப்படுறேன். ஏன்னா, இப்ப சமீப காலமா இந்த மாதிரி ஒரு பிரச்சனை நிறைய வர்ற மாதிரி தெரியுது. அதாவது, கணவன் மனைவி உறவு வேண்டாம், குழந்தை மட்டும் எனக்கு வேணும்னு இரண்டு பேருமே போராடுறது ஒரு ட்ரெண்ட்டா ஆகிட்டு இருக்கு. இங்க எனக்கு மிகவும் அறிமுகமான மூணு பேர் கிட்டத்திட்ட இதே பிரச்சனையில இருக்காங்க. எனக்கு மிகவும் நெருக்கமான நண்பன் ஒருத்தன் (தம்பி போன்றவன், என்னைவிட 7 வயது சிறியவன்) அவனுக்கு சமீபத்துல இதே மாதிரி பிரச்சனை. அவன் மனைவி, மூன்றரை வயது பெண் குழந்தையை அழைச்சிக்கிட்டு அம்மா வீட்டுக்கு போயிட்டாங்க. மறுபடியும் ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்றதைப் பத்தி யாருமே அக்கறை காட்டலை, விரும்பலை. குழந்தை எங்க இருக்கணும்ங்கிறதுதான் பிரச்சனையா இருக்கு. கோர்ட்டுக்கு போனா என்ன தீர்ப்பு வரும்ங்கிறது ரெண்டு தரப்புக்கும் தெரியும். அதனால, ஒரு பக்கம் போக வேண்டாம்னு பார்க்கிறாங்க. ஒரு பக்கம் போகணும்னு முடிவு பண்ணி, இப்ப பையன் மேலே போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் கொடுத்து இருக்காங்க.

நம்முடைய குடும்பம், வாழ்வியல் முறைகள், மேலை நாடுகளோட நடைமுறைக்கு மாறி வருவது, நாம் விரும்பியோ, விரும்பாமலோ நடைபெறும் மாற்றம் அது. தவிர்க்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல், இன்னும் இரண்டு தலைமுறைகள் கஷ்டப்படப்போகின்றது.

பெண்ணோ , ஆணோ ,அடுத்தவர் பேச்சைக் கேட்டு ஆடினால் (அதுவும் அம்மாக்கள் பேச்சைக் கேட்டு) குடும்பம் உருப்படாது . உங்கள் மனைவியின் அம்மாவும் உங்கள் அம்மாவும் நாத்தனார் உறவு முறை , அந்த காலத்தில் அவர்கள் இருவருக்குள்ளும் எப்படிப் பட்ட பந்தம் இருந்தது என்று தெரியவில்லை, ஒரு வேளை உங்கள் மாமியார் தன் மகள் மூலமாக உங்கள் அம்மாவை பழி வாங்குகிறரா??? எது எப்படி இருந்தாலும் மாமியார் நல்லவராக இருக்கும் பட்சத்தில் அவரை அடிப்பது என்பது கொடூரம் தான் . உங்கள் மனைவியை விட எனக்கென்னமோ உங்கள் மாமியார் மேல்தான் சந்தேகம் வலுக்கிறது.நல்ல தாயாக இருப்பவள் மகள் மேல் தவறே இல்லையென்றாலும் நீதான் பொறுத்துப் போக வேண்டும் என்று புத்திமதி கூறுவாள்.

உங்கள் மனைவியை அவள் அம்மாவுடன் கொஞ்ச நாளைக்கு பேச விடாமல் தடுத்துப் பாருங்கள் ,மாற்றம் தெரிந்தால் அது தான் உண்மை. எப்படி பேச விடாமல் தடுப்பது ? உனக்கு நானும் , குழந்தையும் வேண்டுமென்றால் உன் அம்மா பேச்சைக் கேட்காதே என்று கொஞ்சம் கடினமாக கூறி விடுங்கள் .

உங்கள் மாமனாரிடம் (உங்கள் தாய் மாமன் தானே) பேசிப் பாருங்கள் ,அவர் மனைவியை அவரை கண்டிக்கச் சொல்லுங்கள், அப்போது தான் உங்களால் உங்கள் மனைவியுடன் நிம்மதியாக வாழ முடியும் என்று அவரிடம் திட்ட வட்டமாக கூறி விடுங்கள் .

உங்கள் மனைவி அறியாமல் இதை செய்திருந்தாலோ ,அல்லது அவள் தாய் பேச்சைக் கேட்டு இப்படி நடந்திருந்தாலோ ,தன் தவறை உணர்ந்து விட்டால் அவளை மன்னித்து விடுங்கள்.

உங்கள் தாயாரின் உணர்வுகளுக்கு ,நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ,அதே சமயம் உங்கள் குழந்தைக்கு அம்மாவும் , அப்பாவும் மிக முக்கியம். கணவன் , மனைவி பிரிவதினால் பெரிதும் பாதிக்கப் படுவது பிள்ளைகள் தான் ,பின்னாளில் உங்கள் மகன் தாய்ப் பேச்சைக் கேட்டு உங்களை வெறுத்து விட்டால் ,அதை உங்களால் தாங்கிக் கொள்ள முடியுமா???

நம் நாட்டில் எத்தனையோ பெண்கள் எப்படிப் பட்ட கொடூர கணவன்மார்களையும் சமாளித்துக் கொண்டு வாழ்வது அவர்கள் பிள்ளைகளுக்காக மட்டுமே , நீங்கள் இத்தனை நாட்களும் சாதுவாகவே உங்கள் மனைவியிடம் நடந்திருப்பீர்களாகில் , கொஞ்ச நாட்களுக்கு வேறு முகம் காட்டிப் பாருங்கள் , உங்கள் வழிக்கு வருகிராளா என்று தான் பார்க்கலாமே.

எத்தனையோ பெண்களின் மனக் குமுறல்களைப் பார்த்து விட்ட அறுசுவையில் ஒரு ஆண் மகனின் கண்ணீரைப் பார்ப்பதென்றால் என்னவோ கஷ்டமாகத்தான் உள்ளது, அம்மாவுக்கும் மனைவிக்கும் நடுவில் உங்கள் பாடு திண்டாட்டம் தான் . இதுவே உங்களுக்கு ஒரு குழந்தை இல்லாதிருந்திருந்தால் என் ஆலோசனை நிச்சயம் வேறு விதமாகத்தான் இருந்திருக்கும் .

ஒரு சிறிய எடுத்துக்காட்டு:

நாங்கள் UK யில் வசித்து வருகிறோம் ,பள்ளி செல்லும் எனது நாலரை வயது மகள் ஒரு நாள் என்னிடம் கேட்ட கேள்வி என் மனதை சுக்கு நூறாக்கியது , அவள் கேட்டது ,அம்மா நீங்கள் நான் அப்பா மூவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசிக்கிறோம் ,ஆனால் என் தோழியின் அப்பாவும் ,அம்மாவும் வெவ்வேறு வீட்டில் தனித்தனியாக வசிக்கிறார்கள் ,என் தோழி வாரம் இரு முறை மட்டுமே அவள் அப்பாவைப் பார்க்கிறாள்,ஏன் ? ஏன் ?

நாலரை வயது குழந்தைக்கு நான் எப்படி புரிய வைப்பது?

நாளை இதைப் போன்ற கேள்வியை உங்கள் மகன் கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் ?

எங்களால் முடிந்தது ஆறுதலான சில வார்த்தைகள் தான் சகோதரரே ,அவசரப் படாமல் நிதானமாக முடிவெடுக்க இறைவன் உங்களுக்கு அருள் புரிய பிராத்திக்கிறேன்.

dear friend,

vittu koduppavargal kettupovathillai, kettuporavargal vittu koduppathilai. so, neenga first unga ammava samathanam pannunga appuram unga manaiviyai sari pannunga.

unga sandaikku unga kulanthai paligada aaga vendam. amma mela piriyama irukkira ungakitta than unga pillai valarunum appa than antha pillayoda valarpu nalla irukkum.

ungal manaiviyai vittu pirivathu enbathu thavarana mudivu. innum nerameduthu nandraga yosithu pinnar mudivu edungal.

அன்புள்ள அட்மின் அண்ணாக்கு நானும் இது தான் முதன் முறை உங்க பதிவிற்கு பதில் போடுவது.உங்க குடும்பமும் அட்மின் குழுவினரும் நல்லா இருக்காங்களா?நீங்க குறிப்பிட்ட சகோதரர் நிலைமையையும் அவர் தாயின் நிலைமையையும் வைத்து பார்க்கும் போது மனசுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது:(
மாமியாரை அடிக்கும் பெண்ணா என்று புருவம் உயர்த்த வைக்கிறது!.

சொந்தமாக இருந்தால் பிரட்ச்சனை வராது என்று எண்ணி தான் பலர் இப்படி கல்யாணம் செய்கிறார்கள்.சொந்தமோ வெளி இடைமோ எதுவா இருந்தாலும் நல்ல குணமா என்று தான் ஆராய்ந்து சம்பந்தம் முடிக்க வேண்டும் என்று இதிலிருந்து அனைவரும் பாடம் கற்று கொள்ள வேண்டி உள்ளது .

சரி இப்போ அந்த சகோதரரின் விசயத்திற்கு வருவோம்.அந்த பெண், குணம் சரியில்லாதவர் என்றாலும் இதற்க்கு காரணம் அவள் தாய் என்று தான் தெரிகிறது.இடையில் அந்த பெண்ணை அழைத்து சந்தோசமாக இருந்ததாகவும் அவர் தாயுடன் போனில் பேசி திரும்ப அடிப்பதாகவும் சொல்கிறிர்கள்.அந்த பெண்ணை மட்டும் அழைத்து பேசி பார்க்க சொல்லுங்க.

எதனால் அவர் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார் என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.நிச்சயம் ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.நம்ம தோழி அருட் செல்வி சொல்வது போல் ஒரு நல்ல மன நல மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.அந்த பெண்ணிற்கு தகுந்த மாதிரி அவர்கள் கவுன்சிலிங் கொடுப்பார்கள்.எந்த குழந்தையாக இருந்தாலும் அது தாய் தந்தையுடைய அரவணைப்பில் சேர்ந்து வளர்ந்தால் தான் அதன் எதிர் காலம் நல்ல படியாக அமையும்.

உங்களுக்கு மனைவியோ உங்கள் மனைவிக்கு நீங்களோ தேவைப்படாமல் இருக்கலாம் ஆனால் உங்க குழந்தைக்கு இருவருமே தேவை.அதை உங்கள் மனைவியிடம் புரிய வையுங்கள்.அவர் அதற்கும் ஒத்து வர வில்லை என்றால் எப்படியும் குழந்தையை நீங்கள் தன் வைத்து கொள்விர்கள் என்று சொல்லுங்கள்.எந்த ஒரு கல் நெஞ்சமாக இருந்தாலும் பெற்ற பிள்ளை என்று வந்து விட்டால் கரையும்.அவரே சரி என்று வந்து விட்டால் உங்கள் தாயிடம் சொல்லி அவரின் எந்த முன் செயலையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் ஒரு மகள் ஒரு தோழியிடம் நடந்து கொள்வது போல் உங்கள் தாயை நடந்து கொள்ள சொல்லுங்கள்.

நீங்கள் உங்கள் மனைவிக்கு அடங்கியும் போகாமல் அவங்களை அடக்கியும் ஆளாமல் அவங்களுக்கு ஒரு நல்ல நண்பனாக அவர் உங்க தாய்க்கு செய்த கொடுமையை மனதில் வைத்து கொள்ளாமல் ஏதோ கேட்ட நேரம் அப்படிடாம் இவளை நடந்துக்க வைத்துவிட்டது என்று பெருந்தன்மையாக நினைத்து அவங்க தவறை மறந்து இனி நமக்குள் சண்டையா அப்படி என்றால் எண்ண என்று கேட்பது போல் அவங்களை வைத்து வாழுங்கள்.இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா வழுவீங்க.

அந்த பெண்ணின் தாய் குணம் சரி இல்லை என்றால் அதை உங்கள் மனைவிக்கு மிக பொறுமையாக எடுத்து சொல்லுங்கள் ஆனால் எந்த நேரத்திலும் மனைவிக்கு பயந்து நடக்க வேண்டிய அவசியமில்லை.சகோதரரே!நான் ஏதும் தவறாக பேசி இருந்தால் மனம் பொருந்தி கொள்ளவும்.

அட்மின் அண்ணா நான் ஏதும் தவறாக குறிப்பிட்டு இருந்தால் இந்த சின்ன பெண்ணை :)மன்னித்து அதை நீக்கி விடவும்.

/////இதை நான் ஈவ்நிங்கே எழுதிட்டேன் ஆனால் இந்த பாலா போன கரண்ட் என் காலை வாரிடிச்சி சோ டைம் இல்லை இப்பத்தான் சேர்க்கிறேன்////

SSaifudeen:)

எல்லா தோழிகளுக்கும் என் மாலை வணக்கம்

ஒரு பெண்ணாக இருந்து இப்படி செய்தது தவறு,என்ன இருந்தாலும் வயதில் மூத்தவர் தானே,எதையுமே பேசி தான் சரி செய்ய வேண்டுமே தவிர இப்படி செய்திருக்கக்கூடாது,கணவராகிய இவர் மனைவியிடம் இதைபற்றி கண்டிப்பாக பேச வேன்டும் தாயையும்,மனைவியையும் ஒன்றாக வைத்து பேசி ப்ரச்சினையை சரி செய்ய வேண்டும்,இதற்காக மனைவியே தேவை இல்லை என்ற முடிவு தவரானது,கொஞ்சம் விட்டுக் கொடுக்கவேண்டும்,மனைவி வேன்டாம் குழந்தை மட்டும் போதும் என்பது தவறு,அனைவரின் எதிர்காலமும் பாதிக்கும்,ஆகவே உங்கள் தாயிடமும்,மனைவியிடமும் இதை பற்றி பக்குவமாக புரிய வையுங்கள்,மனைவி வேண்டாம் என்ற முடிவை மாற்றிக்கொள்ளுங்கள்

மேலும் சில பதிவுகள்