தேதி: November 5, 2012
பேஸ் கோட்
டாப் கோட்
நெயில் பாலிஷ் - நீலம்
ஆர்ட் டெகோ - வெள்ளை, கருப்பு, மஞ்சள், பச்சை
ரெய்ன் ஸ்டோன்ஸ் - பொருத்தமான நிறங்களில்
டாட்டிங்க் டூல்ஸ் (Dotting Tools)
மெட்டல் டூத் பிக்
ஆரஞ்ச் ஸ்டிக் (Orange Stick)
ப்ரஷ் (Brush) - (5/0)
ஒரு தட்டு அல்லது ப்ளாஸ்டிக் பேப்பர்
பேப்பர் டவல்
ஈரமான ஸ்பாஞ்ச் - ஒரு சிறு துண்டு
காட்டன் பட்ஸ்
வேலையை ஆரம்பிக்கும் முன்பே தேவையான எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

முதலில் சாதாரணமாக செய்து கொள்வது போல் நகத்தைச் சீராக்கி சுத்தம் செய்து பேஸ் கோட் பூசி அதன் மேல் நீல நிறம் பூசிக் கொள்ளவும். ப்ரஷ்ஷிலுள்ள பூச்சினை நன்கு பாட்டில் கழுத்தில் துடைத்துக் கொண்டு நகத்தின் ஒரு ஓரத்தில் மெல்லிதாக நீளமாக இரண்டு கோடுகள் தீட்டவும். ப்ரஷ்ஷைத் தட்டையாக நகத்தோடு வைத்து சட்டென்று வெளிநோக்கி இழுத்து விட்டால் சீராக ஒரு கோடு கிடைக்கும். 1 மி.மீ இடைவெளியில் இரண்டாவது கோடு வரைந்தால் அழகாக இருக்கும்.

நகத்தின் குறுக்காக சற்று மேற்பகுதியில் வருமாறு இரண்டு கோடுகள் தீட்டவும். வளைவான நகங்களில் குறுக்குக் கோடுகள் வரையும் போது, ப்ரஷ்ஷை சரியான இடத்தில் வைத்துப் பிடித்துக் கொண்டு ப்ரஷ்ஷை இழுப்பதற்குப் பதிலாக விரலை மெதுவே வளைத்து திருப்பினால் வரைவது சுலபமாக இருக்கும்.

ஒரு தட்டின் பின்பக்கம் ஒரு துளி வெள்ளை நிறம் வைத்துக் கொண்டு, டாட்டிங் டூல் கொண்டு தொட்டு ஒரு பொட்டு மட்டும் வைக்கவும். அதன் நடுவில் டூத் பிக்கை வைத்து பூவின் மத்தியை நோக்கி இழுக்க வேண்டும்.

ஒவ்வொரு இதழாக வரைய வேண்டும். சட்டென்று உலர்ந்து விடும் என்பதால், எல்லாப் புள்ளிகளையும் வைத்துவிட்டு பிறகு ஒன்றாக கோடு வரையும் வேலையைச் செய்ய இயலாது. ஒவ்வொரு இதழிலும் அதன் அளவுக்கு ஏற்றாற்போல் இரண்டு அல்லது மூன்று கோடுகள் இழுக்கலாம். கோடு வரைய வரவில்லையென்றால் சில விநாடிகள் கழித்து இழுத்தால் சரியாக இருக்கும். அல்லது மெதுவாக ஊதிவிட்டு வரையலாம்.

சிறிய டாட்டிங் டூல் கொண்டு ஒரு துளி கருப்பு தொட்டு நடுவில் வைத்து முடிக்கவும்.

ரெய்ன் ஸ்டோன் வைப்பதானால், வெள்ளை அல்லது நிறமில்லாத பூச்சு தொட்டு சின்னதாக ஒரு பொட்டு வைத்துக் கொண்டு அதன் மேல் ஒட்டலாம். ஆரஞ்ச் ஸ்டிக்கின் தட்டையான பகுதியை ஒரு ஈரமான ஸ்பாஞ்சில் ஒற்றிக் கொண்டு தொட்டால் கற்கள் அவற்றோடு ஒட்டிக் கொள்ளும். பிறகு சரியான இடத்தில் வைத்து மெதுவாக அழுத்தி விட வேண்டும்.

மூன்று இதழ் கொண்ட பூ இது. ஒவ்வொரு இதழுக்கும் அருகருகே இரண்டு புள்ளிகள் வைத்து உள் நோக்கி இழுக்க வேண்டும். அரும்பு வரைய டூத் பிக் முனையில் சிறிது நகப்பூச்சு தொட்டுக் கொண்டு முனை வெளிப்பக்கம் இருக்குமாறு மூன்று முறை வைக்கவும்.

தட்டின் பின் பக்கம் பச்சை நிறம் ஒரு துளி மட்டும் எடுத்துக் கொண்டு ப்ரஷ்ஷில் தொட்டு காம்புகள் இலைகளை வரையவும்.

இந்த வடிவம் வரைய, பெரிய இதழ்களுக்கு டாட்டிங் டூலின் பெரிய குமிழ் உள்ள பக்கத்தையும் சின்ன இதழ்களுக்குச் சிறிய குமிழுள்ள பக்கத்தையும் பயன்படுத்த வேண்டும். கோடுகளை தேவைக்கு ஏற்றதுபோல் வளைத்து வரையலாம். புள்ளிகளை சிறிய டூல் கொண்டு வைக்க வேண்டும். (அல்லது சாதாரண டூத் பிக் ஒன்றை எமரி போர்ட் அல்லது சான்ட் பேப்பரில் தேய்த்து மழுங்க வைத்தும் பயன்படுத்தலாம்.) நடுவில் ஒரு கல்லும் வெளியே வளைவாக ஒரு வரி கல்லும் ஒட்டி விடவும்.

இந்த டிசைனுக்கு ஆறு சிறிய இதழ்களுக்கு மத்தியில் ஒரு வெள்ளைக் கல்லும், ஒரு வளை கோட்டின் நடுவே பூ அமைவது போல் மீதிக் கற்கற்களையும் ஒட்டி இருக்கிறேன்.

பெரிய நீளமான நகத்திற்கு ஏற்ற விதமான டிசைன் ஒன்று கொடுக்க விரும்பினேன். அதனால் இந்த ஒன்று செயற்கை நகத்தில் வரைந்திருக்கிறேன். மேலே ஒற்றை இதழும் மீதி கூம்பு வடிவில் வருமாறும் வரைய வேண்டும். அடியில் வரைபவற்றை மட்டும் கீழிருந்து மேல் நோக்கி வைக்கவும். பதினைந்து அல்லது பதினாறு இதழ்கள் வரையவேண்டி இருக்கும்.

இடைவெளிகளில் இதழ்கள் வரைகையில் மேலிருந்து ஆரம்பித்தால் இதழ்கள் ஒன்றன் மேல் ஒன்று அடுக்கியது போன்ற அமைப்பு கிடைக்கும். கீழ் இடைவெளியிலும் ஒன்றிரண்டு இதழ்கள் வரையவும்.

மேலே உள்ள சிறிய பூக்களும் இலைகளும் டூத் பிக் கொண்டு வரைந்தவை. மெல்லிய ப்ரஷ் கொண்டு நீளமான இலைகளையும் காம்பையும் வரைந்து முடிக்கவும்.

Comments
இமா
அழகாக இருக்கு. கலர் எனக்கு பிடிச்ச கலர் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
இமா
ரொம்ப நல்லா இருக்கு(:- வண்ணக்கலவை சரியா பொருந்தியிருக்கு, வாழ்த்துக்கள் தோழி.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
இமா
ரொம்ப அழகா இருக்கு நெய்ல் ஆர்ட். கலர் பொருத்தமா இருக்கு. கடைசியா விரலில் போட்டு இருக்கும் படம் சூப்பர்
Nail art
ஒரு நகத்தை வச்சு என்னவெல்லாம் வேலை பண்றீங்க இமா..பொறுமை ரொம்பவே வேணும் கலையுணர்வும் வேணும் அது உங்ககிட்ட அளவுக்கு அதிகமாவே இருக்கு
nail art
வாவ் இமா அம்மா ரொம்ப அழகா போட்டிருக்கீங்க வாழ்த்துக்கள்
The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)
இமா
சான்ஸே இல்ல சூப்பரா வரைஞ்சி இருக்கீங்க.ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.வாழ்த்துக்கள்...
Love Makes Life Beautiful...
With Love,
Indira.
இமா
பார்த்ததுமே இது நம்ம சில்லு வண்டாத்தான் இருக்கும் என நினைத்தேன். ஹீ...ஹி..ஹீ...ஹி வண்டு போய் பூ வந்தது டும்..டும்..டும்ம்.கலைப் பொறுமையின் பேர் இமா தான் டும்..டும்..டும்ம்
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
ஜெயந்தி
இமாம்மா
இமாம்மா சூப்பரா இருக்கு.. இது செய்ய ரொம்ப பொறுமை வேண்டும் எனக்கு அது இல்லை.. சூப்பரோ சூப்பர் வாழ்த்துகள்ம்மா
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
So nice to look
So nice to look
Sri Deepika
By seeing all your crafts. I would also like to post the craft and mehandi designs. Can anyone help me the way of posting crafts. Thank you friends. Hope you will all help me.
ஸ்ரீ தீபிகாவுக்கு
தமிழில் தட்டச்சு செய்வது மிக முக்கியம். எழுத்துதவி இங்கே இருக்கிறது - http://www.arusuvai.com/tamil_help.html
நிபந்தனைகள் இந்த லிங்கில் இருக்கிறது. - http://www.arusuvai.com/tamil/policy மூன்றாவது பந்தியை தவறாமல் படியுங்கள்.
குறிப்பு, படங்கள் தொடர்பான விபரங்கள் 'யாரும் சமைக்கலாம்' பகுதிக்கு உள்ளது போலவேதான். - http://www.arusuvai.com/tamil/node/14765
இந்த லிங்கையும் படியுங்கள். - http://www.arusuvai.com/tamil/node/14766
குறிப்பை படங்களோடு மின்னஞ்சல் மூலம் arusuvaiadmin @ gmail.com என்ற முகவரிக்கு (@ க்கு முன்னும் பின்னும் ஸ்பேஸ் விடாமல் தட்டவேண்டும்.) அனுப்பி வையுங்கள்.
என் வாழ்த்துக்கள்.
- இமா க்றிஸ்
நெய்ல் ஆர்ட்
கருத்து விட்டுச் சென்றுள்ள அறுசுவை சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்.
- இமா க்றிஸ்
இமாம்மா
ரொம்ப நன்றாக உள்ளது . நகத்தில் இவ்வளவு அழகான கலைவண்ணமா..!! சூப்பர்ப் :-)
நட்புடன்
குணா
இமா
அழகா இருக்கு இமா ஆன்டி.வாழ்த்துக்கள்
Kalai
நன்றி
நன்றி குணா & கலா. :)
- இமா க்றிஸ்