ப்ரோக்கலி ப்ரை

தேதி: November 6, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

ப்ரோக்கலி (சிறியது) - ஒன்று
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

ப்ரோக்கலியை சிறு சிறு பூக்களாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் கீறி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.
பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
ப்ரோக்கலியை சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
பின்னர் தூள் வகைகள், உப்பு சேர்க்கவும்.
ப்ரோக்கலி எளிதில் வெந்து விடும். தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான எளிதில் செய்ய கூடிய ப்ரோக்கலி ப்ரை தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆரோக்கியமான சூப்பரான குறிப்பு. வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Assalamu alaikum shameela..romba healthyana recipy..easya vum irku..kandippa try panraen..weight loss panradhuku idhu rightana vegetable..thanx for your recipy.

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி...

வாழ்த்திற்க்கு ரொம்ப நன்றி வனிதா அக்கா....

வலைக்கும் சலாம் சம்னாஸ்....மிக்க நன்றி....
செய்து பார்த்து பிடிச்சுதான்னு சொல்லுங்க :)

Hi, can u pl tell me how to clean this brocoli? is it like cauli flower