கலந்துரையாட வாங்க தோழிகளே...

தோழிகளே உங்கள் கலந்துரையாடலை இங்கே தொடருங்கள்... உங்கள் பதிவுகள் அனைத்தும் கண்டிப்பாக தமிழில் இருப்பது அவசியம் தமிங்கிலம், ஆங்கிலம் கூடவே கூடாது. அப்பாடா ஒரு வழியா நானும் தமிழ்ல இழை துவங்கி ரூல்ஸ் போட்டுட்டேன்:)

இங்கே வாங்க தோழீஸ்...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஹாய் நித்தி எப்படி இருக்கீங்க.. குட்டி எப்படி இருக்காங்க.. வேலையெல்லாம் முடிஞ்சதா..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் ரேவதி எப்படி இருக்கீங்க? ஷாதிகா தீபாவளிக்கு கொஞ்சம் ரெடி ஆகிட்டோம் இன்னும் முழுசா ரெடி ஆகல பா. உங்களுக்கு பக்ரித் எப்படி போச்சு? சாரி பக்ரித் டைம்ல என் மொபைல் ஃபால்ட் ஆகி விஷ் பண்ண கூட வர முடியல.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஹலோ நித்யா எப்படி இருக்கீன்க என்ன நியாபகம் இருக்கா தமிழில் பதிவிடுரீங்களே சூப்ப்ரா இது எப்பொதிலிருந்து..

அன்புடன்,
zaina.

ரே நாங்க நல்லா இருக்கோம் பா. ஹர்ஷியும் நலம் நீங்க அண்ட் குட்டி பையன் நலமா? FB ல உங்க ரீசண்ட் ஃபோட்டோ பார்த்தேன் அழகா இருக்கீங்க ரே இன்னும் வேலை செய்ய ஆரம்பிக்கவே இல்ல ரே. நீங்க சாப்டிங்களா?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஹாய் ஜைனா எப்படி பா இருக்கீங்க? என்னப்பா இப்படி கேட்டுட்டீங்க? உங்கள எப்படி மறக்க முடியும்? நீங்க தான் வர்றதே இல்ல என்ன ஆச்சு? ஏன் இவ்ளோ நாள் வரல? ஆமா பா தமிழ் ல நேத்துல இருந்துதான் ஆரம்பம் புது மொபைல் வாங்கியாச்சு அதான்

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஷாதிகா, சுகா எங்க போய்ட்டீங்க? இங்க வாங்க பா.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

புது மொபைலா.. கலக்குங்க.. நான் ஊருக்கு போய் இருந்தேன் அங்க நெட் கிடையாது அதான் அருசுவை பக்கம் வரவே இல்ல ..

அன்புடன்,
zaina.

நானும் குட்டி பையனும் நலமோ நலம்.. அந்த குட்டி என் தங்கையின் குட்டி.. காலை வேளை முடிந்தது.. மதியம் இனிமே தான்.. போட்டோ பார்த்தீங்க ரொம்ப நன்றிப்பா.. ஏன் இன்னும் வேலை செய்ய ஆரம்பிக்கவில்லை.. தீபாவளியெல்லாம் எப்படி போகுது.. நீங்க எந்த ஊர் நித்தி..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

கார்த்தி என்னப்பா இன்னைக்கு இன்னும் வரல? ஊருக்கு கிளம்ப பேக்கிங் வேலை நடக்குதா? உமா நீங்க என்ன பண்றீங்க? சமையல் பண்றீங்களா? எனக்கு என்ன பனிஷ்மென்ட் னு நீங்களும் கார்த்தியும் டிஸ்கஸ் பண்ணிட்டீங்களா?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்