மீன் எண்ணை tablett பாவித்தால்

அன்பு உள்ளங்களுக்கு, முகம் தெரியாத தோழிகளாய் நீங்கள் என் மீது காட்டும் அக்கறை என்னை நெகிழவைக்கிறது. உங்கள் எல்லோரையும் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என ஒரு ஏக்கம் பிறக்கிறது. நாடு கடந்து தேசம் கடந்து எத்தனை ஆயிரம் கிலோ மீற்றர்கள் தொலைவிலிருந்தாலும் அன்பு மட்டும் அரை நொடிகளுக்குள் எப்படி நம்மை இணைக்கிறது. என்னுடைய தற்கொலை எண்ணத்தையும், தாழ்வு மனப்பாண்மையையும் முதலில் உங்கள் அன்பிற்கும் அக்கறைக்குமாக அழித்துவிடுகிறேன். என் கணவர் எனக்கு எதற்குமே மறுப்பு சொல்ல மாட்டார். எனக்கு கல்யாணமாகி 8 வருடங்களாகிறது. ஒரு பெண் (6வயது) ஒரு ஆண்(1 1/2 வயது) இரண்டு குழந்தைகள். நாங்கள் ப்யூர் வெஜிடேரியன். எனக்கு கொழுப்பினாலோ, நீரினாலோ உடம்பு குண்டாகவில்லை, தைராய்ட் தான் அதற்கு காரணம் என்று சொன்னார். தைராய்ட் பிரச்சனை இருந்தாலும் உடற் பயிற்சியாலும் டயட்டாலும் உடம்பை குறைக்கமுடியுமா? மீன் எண்ணை tablett பாவித்தால் ok ஆகுமா? ப்ளீஸ் தோழிகளே பதில் தாருங்கள்.

மீன் எண்ணை மாத்திரை உடலுக்கு ரொம்ப நல்லது ,அதுவும் தென் கிழக்கு ஆசியாவில் வசிப்பவர்கள் (முக்கியமாக நம் நாட்டவர்கள் ) தினமும் பயன் படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் , இந்த மாத்திரையினால் உடல் எடை குறைவதை நான் கேள்விப் பட்டதில்லை ,ஆனால் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து இதயத்தை சீராக இயங்க வைக்கிறது.

தற்கொலை எண்ணம் பற்றிய உங்களின் பதிவைப் படித்தேன். தைராய்டு குறைவாக சுரப்பது,விட்டமின் டி3 குறைபாடு,விட்டமின்பி12 குறைபாடு இந்த மூன்றின் போதுவான பின் விளைவுகளில் ஓன்று தான் மனச்சோர்வு அல்லது மன அழுத்தம் .இந்த குறை பாடுகள் தான் உங்களுக்கு இப்படியான எண்ணத்தை கொண்டு வருகின்றன ,மட்டுமல்லாது இந்தப் பிறச்சனை உள்ளவர்கள் எப்பொழுதும் எதையொ இழ்ந்தவர்கள் போன்றே இருப்பார்கள். இந்த குறை பாடுகள் உங்களின் மன ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கும். ஆகவே உடனடியாக மருந்து மத்திரைகளை எடுத்துக் கொள்வது நல்லது.

விட்டமின் பி12 குறைபாடு சைவம் மட்டுமே உண்பவர்களுக்கு வரக்கூடிய ஒன்று , மாத்திரைகள் மூலம் சரிபடுத்தலாம்.

விட்டமின் டி3 குறைபாடும் மாத்திரை மூலம் சரிப் படுத்தாலாம்,இது குளிர் நாடுகளில் வாழ்பவர்களை அதிகம் பாதிக்கும்,காரணம் தேவையான சூரிய ஒளி உடலுக்கு கிடக்காததினால் தான்.

மருத்துவரின் ஆலோசனைப் படி தைராய்டு மாத்திரையும் எடுத்துக் கொள்ளுங்கள் ,தைராய்டு மாத்திரை கோர்ஸ் முழுவதும் முடிந்ததும் உங்கள் உடல் எடை சீராவதை உணர்வீர்கள்.

மேலும் சில பதிவுகள்