மாரடைப்பு ஒரு பயனுள்ள தகவல்

தோழிகளே,

இளவயதில் மாரடைப்பினால்(Heart attack) இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதில் அதிகம் பாதிக்கப் படுபவர்கள் ஆசியாவில் வசிப்பவர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.அதிலும் இந்தியர்கள் தான் அதிக அபாயம்( High Risk) வாய்ந்தவர்களாம்.இதில் வேறு கண்டங்களில் வசிக்கும் இந்தியர்களும் அடங்கும்.30 வயதிலிருந்து 40 வயதிர்க்குள் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது.மேலும் பெண்களை விடவும் ஆண்கள் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள்.

இதற்க்கு மிக முக்கிய காரணங்கள்:

உணவு பழக்க வழக்கம்(Food Habits)
நம்முடைய வாழ்க்கை முறை(Life style or Culture)

என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

எனக்கு தெரிந்து கடந்த ஓர் ஆண்டிற்க்குள் என் சுற்று வட்டாரத்திற்க்குள் மட்டுமே 4 நபர்கள் பாதிக்கப் பட்டு விட்டார்கள்,3 பேர் மரணத்தை தழுவி விட்டார்கள் .கொடுமை என்னவென்றால் இந்த நால்வரும் 32 லிருந்து 38 வயதுக்குட் பட்டவர்கள். இவர்கள் எல்லோருமே தினமும் உடற் பயிற்ச்சி செய்பவர்கள் ,ஒருவருக்கு நெஞ்சு வலி வந்ததே ஜிம்மில்(Gym) வைத்து தான்.

மருத்துவரின் ஆலோசனை தான் என்ன இதற்க்கு????

என் தோழியின் கணவருக்கு (35 வயது) நெஞ்சு வலி வந்து மருத்துவ மனையில் சேர்த்த போது அவளிடம் டாக்டர் கூறிய விஷயம் ஆசியா கண்டத்தவர்களுக்கு ஏன் மாரடைப்பு என்ற கேள்வியே வேண்டாம்.!!!!

என்னதான் உணவு கட்டுப் பாடு ,உடற் பயிற்ச்சி பின்பற்றினாலும் தினமும்(OMEGA 3) என்று அழைக்கப் படும் மீன் எண்ணைய் மாத்திரையை உட் கொள்வதினால் மட்டுமே அபாயத்தைக் குறைக்க முடியும் என்று.

அதிலிருந்து என் தோழி எங்களைப் பார்க்கும் போதெல்லாம் எப்படி இருக்கிராய் என்று கேட்பதில்லை , மாறாக மீன் மாத்திரை எல்லோரும் சாப்பிடுகிறீர்களா என்றுதான் கேட்ப்பாள்.

மீன் எண்ணை மாத்திரை இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. உணவில் காய்கறிகளும் ,பழங்களும் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் ,அசைவம் உண்பவர்கள் வாரத்தில் குறைந்தது மூன்று முறை Omega 3 உள்ள மீன்கள் உண்ண வேண்டும், மத்தி என்ற்ழைக்கப் படும் சாளை மீன் ( Sardines ) அயிலை (Mackrel) மற்றும் சால்மன்(Salmon fish) மீன் வகைகள். ரெட் மீட் (Red meat)என்றழைக்கப் படும் ஆடு மற்றும் மாட்டிறைச்சிகளை குறைத்து உண்பது நல்லது.

அன்புள்ள வாணி செல்வின். இந்த மாத்திரை எல்லா மெடிக்கல் ஷாப்பிலும் கிடைக்குமா. சரியான தகவல்களுக்காக எதிர்பார்க்கிறேன்

ஆமாம் , எல்லா மாத்திரை கடைகளிலும் கிடைக்கும் , Omega 3 fish liver oil tablets என்று கேட்டு வாங்க வேண்டும்

நன்றி mrs.Selwyn கடவுள் உங்களுக்கு எல்லா செல்வங்களையும் அளிக்கட்டும்

vani இந்த மாத்திரை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா.என் குழந்தைக்கு codliver oil syrupபாக கொடுத்து பார்தேன் அவள் சாப்பிடமாட்றாள்.பெரியவர்கள் சாப்பிட்டாள் weight போடாதா.ரொம்ப weight போடும்னு சிலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.அதான் கேட்டேன்.

Omega 3 மாத்திரைகள் இர்த்தத்தில் உள்ள டிரைகிளிசரைட்(Triglyceride) என்கிற கெட்ட கொழுப்பை குறைக்கிறது. இந்த மாத்திரைகள் உடல் பருமனைக் கூட்டுவதோ , குறைப்பதோ கிடையாது . குழந்தைகளுக்கென்றும் இந்த மாத்திரைகள் விற்க்கப் படுகிறது ,மாத்திரையின் எடை அளவு(dosage )வேறு படும் , அதை தான் கொடுக்க வேண்டும்.

இந்த மாத்திரை எப்போ சாப்பிடனும்.தினந்தோருமா?ஒரு தடவை சாப்பிடனுமா?எப்போல்லாம் சாப்பிடனும்.

எல்லாம் நன்மைக்கே

ஆம் ,தினம் ஒரு மாத்திரை உணவு உண்டதும் சாப்பிட வேண்டும்

தோழிகளே நாங்கள் குழந்தைகு try பன்னிடு இருக்கோம்.என் கனவர் wild norwegian salmon oil tablet சாப்பிடலாமா?

எல்லாம் நன்மைக்கே

pls reply friends urgent

எல்லாம் நன்மைக்கே

மேலும் சில பதிவுகள்