ஆப்பம்

தேதி: September 10, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - 200 கிராம்.
புழுங்கல் அரிசி - 200 கிராம்.
உளுத்தம் பருப்பு - 100 கிரம்.
சாதம் - அரை கப்.
உப்பு - தேவையான அளவு.


 

இரண்டு வகை அரிசி மற்றும் உளுந்து இவை மூன்றையும் சுமார் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
நன்கு ஊறியவுடன் அதோடு சாதத்தையும் சேர்த்து, மிக்ஸியிலோ அல்லது கிரைண்டரிலோ நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த கலவையில் தேவையான அளவு உப்பு சேர்த்து 6 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.
பிறகு மாவை நன்கு கரண்டியால் கலக்கினால், ஆப்பம் சுடுவதற்கு மாவு தயார்.
ஆப்ப சட்டியிலோ அல்லது தோசைக் கல்லிலோ ஆப்பத்தை சுட்டு, சூடாகப் பரிமாறுங்கள்.
அதற்குத் தொட்டுக் கொள்ள ஆப்ப ஆணம் அல்லது தேங்காய் பால் பொருத்தமாக இருக்கும்.


எளிதில் செரிக்கக் கூடிய, மென்மையான, காலை பசியாற, இட்லி - தோசைக்கு இணையான, ருசியான ஆப்பம்.
தோசைக் கல்லில் ஆப்பம் சுட்டால் மொறு மொறுவென வரும். கல்லில் மாவை ஊற்றி பரப்பி, அதை ஒரு பெரிய மூடியால் மூட வேண்டும். ஆப்பசட்டியில் சுடும் போது மெது மெதுவென்ற ஆப்பம் கிடைக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இன்றைக்கு காலையில் உங்க ஆப்பம்தான் செய்தேன்,நல்லா சாஃப்டா இருந்தது, கூட உங்க ஆப்ப ஆணம் சூப்பர் போங்க...நன்றி.

ஆப்பம் ரொம்ப நல்ல வந்தது.எப்பவும் சிறிது வெந்தயம் சேர்ப்பேன்,சேர்க்காமல்உங்கள் குறிப்புபடியும் சூப்பராக வந்தது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.