தேதி: November 8, 2012
க்வில்லிங் பேப்பர்
கம்
க்வில்லிங் டூல்
முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

மயிலின் கழுத்து மற்றும் உடலுக்காக ஐந்து சுருள்கள் தேவைப்படும். அதை க்வில் செய்து கொள்ளவும்.

பின் பேஸிக் க்வில்லிங்கில் உள்ளவாறு வட்ட சுருளின் இரு பக்கமும் அழுத்தி படத்தில் காட்டியபடி கண் வடிவில் செய்து கொள்ளவும்.

மயிலின் முகம் செய்ய படத்தில் காட்டியபடி க்வில் செய்து எல்லா சுருள்களும் ஒரே பக்கத்தில் வருமாறு ஒட்டவும். இதற்கு மயிலின் உடலுக்கு பயன்படுத்திய காகிதத்தின் நீளத்தில் பாதி இருந்தால் போதும்.

பின் வெளிப்புற சுருளை மட்டும் சற்று சமதளத்தில் வைத்து நுனியில் அழுத்தி ஒட்டிவிடவும். இது மயிலின் முகம்.

தோகை செய்வதற்கு விரும்பிய வண்ணத்தில் க்வில் செய்யவும். இந்த சுருள் சற்று பெரிதாக இருக்க வேண்டும். நான் ஒரு காகிதத்தை வேறு வண்ண காகிதத்தோடு ஒட்டி க்வில் செய்துள்ளேன்.

கழுத்து மற்றும் உடலுக்கு செய்து வைத்துள்ள க்வில்களை படத்தில் காட்டியபடி மயிலின் முகத்தின் கீழ்பக்கம் ஒன்றன் பின் ஒன்றாகவும், பக்கவாட்டிலும் ஒட்டவும்.

உடல் முடிந்த இடத்தில் இருந்து தொடங்கி தோகையை ஒட்டவும்.

ஒரு சிறிய வெள்ளை காகிதத்தை சுருட்டி கண் செய்துள்ளேன். அதே போல மூக்கு, கொண்டை மற்றும் மரக்கிளையை ஒட்டி, இலைகளை ஆங்காங்கே ஒட்டியுள்ளேன்.

அழகான மயில் ரெடி.

இதேபோல இன்னொரு மயில் செய்து தோகையை சற்று விரித்தாற்போல செய்து இடையே முத்துக்களை ஒட்டி இருக்கிறேன்.

Comments
ரம்யா
ஆகா... மயில் ரொம்ப அழகு :) ரொம்ப நல்லா இருக்குங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
மயில்
ரொம்ப க்யூட்..டா இருக்கு ரம்ஸ். ஃபோட்டோஸ் எடுத்து இருக்கிற பாக்ரவுண்ட்... சூ..ப்பர்.
- இமா க்றிஸ்
ramya karthick
woooooooow romba superb ah senjirukingka.... vazthukkal.
The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)
ரம்யா
அழகு மயில்.வாழ்த்துக்கள் ரம்யா
Kalai
ரம்யா அக்கா, மிகமிக அருமையாக
ரம்யா அக்கா,
மிகமிக அருமையாக தலைமுடிப்பிச்சனையை தடுக்க வழி சொன்னிங்க மிக்க நன்றி.ஆனால் தேங்காய் பால் தேய்த அன்று இரவும், மறுநாள் தொண்டை காய்த்துவிடுகிறது. அதற்கு ஏதாவது வழி இருத்தால் சொல்லுங்க பா.................
நான் சௌதியில் இருக்கிறோன் இங்க குளிர் ஆரமிக்குது குளிர்காலத்துல தேங்காய் பால் போடலாமா?விட்டா மீண்டும் முடி கொட்டுமா?
by,
AnuGopi,
Be happy and Make others happy........
Superb .....
Superb .....