அன்பு

நமது அன்பை உணராத,புரிந்து கொள்ளாதவரிடம் தொடர்ந்து அன்பு காட்டலாமா?வேண்டாமா?

தோழியே கண்டிப்பாக அன்பு காட்டலாம் ,அன்புக்கே அடிபணியாதவர் ,அன்பை புரிந்துக் கொள்ளாதவர் எனில் அவர் எண்ணம் எப்படி பட்டதாக இருக்கும் ,கண்டிப்பாக அவரை அன்பின் மகிமையை புரிந்துக் கொள்ளும் பொருட்டாவது நீங்கள் தொடர்ந்து அன்பு காட்டுங்கள் .
அன்பைப் பற்றி திருவள்ளுவர் திருக்குறளில் கூறி இருக்கும் குறள்களை ஒரு முறை வாசித்து பாருங்கள் .எப்படி பட்டவரும் அதில் சொல்லி இருக்கும் கருத்துக்களுக்கு விதிவிலக்காக ஆக மாட்டார்கள் .அன்பு ஒரு ஆழ்மன ஊற்று ,அதனை அனைவர்க்கும் தந்திடுங்கள் .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

கண்டிப்பாக காட்டனும் தோழி.உங்க அன்ப அவங்க புரியணும்னு நீங்க மனதார நினைத்தால், சில நேரங்களில் ஏன்தான் முயற்சி செய்யனும்னு தோனும். ஆனால் நீங்க கண்டிப்பா முயற்சிஎய் கை விட கூடாது. தொடர்ந்து பொறுமய நீங்க அன்பு செய்யுங்க.கண்டிப்பா பலன் காண்பீங்க.,

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

நமது அன்பை புரிந்துக்கொள்ள வேண்டும், உணர வேண்டும் என எதிர்பார்க்காமல் அன்பு செலுத்துங்கள்.. எதையும் எதிர் பார்க்காமல் அன்பு காட்டினால் நாம் எதிர்பாராத அளவிற்கு அவர்களிடமிருந்து அன்பு கிடைக்கும்...

நம்ம அன்பை மற்றவர் ஏன் புரிஞ்சுக்கனும்? ஏன் இந்த எதிர்பார்ப்பு? இதெல்லாம் இல்லாம நமக்கு ஒருவரை பிடிக்குதா... அன்பு இருக்கா... அன்பாய் இருங்க... அம்புட்டு தான். அவங்க சுபாவம் எப்படியோ அவங்க அப்படியே இருக்கட்டும். :) அது நமக்கு வேண்டாம்.

நாம ஒரு கிளி வளர்க்கறோம்... அன்பாக தான் இருக்கோம். ஆனா அது நம்ம அன்பை புரிஞ்சுகிட்டு நம்ம பின்னாடியே இருக்குமா? சான்ஸ் கிடைச்சா ஓட தான் பார்க்கும். அதுக்காக அது என் அன்பை புரிஞ்சுக்கல, எங்கனா போகட்டும், நான் ஏன் அதுக்கு தீனி போடனும்னு யோசிக்க முடியுமா?!! முடியாதில்ல... உங்களுக்கு பிடிச்சிருக்குன்னு அன்பாக இருக்கீங்க தானே?

அப்படி பதிலுக்கு நம்மகிட்ட அன்பாக இருக்கணும், நம்ம அன்பை புரிஞ்சுக்கணும்னு எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் வருவது தான் அன்பு. :) நம்மை வெறுப்பவர் மீதும் அன்பு காட்டுவோம்... அன்பு காட்ட தடை ஏது??!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னை பொறுத்தவரை நமது அன்பை உணராத , புரிந்துக்கொள்ளாதவரிடம் நாம் அன்பு காட்டுவது வேஸ்ட்.நாம் அவர்களிடம் அன்பை எதிர்பார்க்கவில்லை.நமது அன்பு வேஸ்ட் என்று தான் சொல்கிறேன்.தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

Expectation lead to Disappointment

நன்றி தோழிகளே...நான் எவ்வுள்வு அன்பு காட்டினாலும் என்னை திட்டி தீர்க்கிறரே?

மேலும் சில பதிவுகள்