தேதி: November 9, 2012
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பாசிப்பருப்பு - ஒரு கப்
பொட்டுக்கடலை - ஒரு கப்
சீனி (பொடித்தது)
நெய்
பாசிப்பருப்பை நன்றாக சிவக்க வறுத்து ஆற விடவும்.

ஆறியதும் பாசிப்பருப்பை மாவாக அரைத்துக் கொள்ளவும்.

பொட்டுக்கடலையை மாவாக அரைத்து பாசிப்பருப்பு மாவுடன் கலக்கவும். இப்பொழுது மாவுருண்டை மாவு தயார்.

இந்த மாவுக் கலவையிலிருந்து ஒரு கப் மாவிற்கு அரை கப் பொடித்த சீனி மற்றும் இரண்டு மேசைக்கரண்டி நெய் சேர்த்து சிறுதீயில் வறுக்கவும். மாவில் நன்கு சூடு ஏறியதும் இதுபோல் ஒரு சிறிய கிண்ணத்தில் மாவை எடுத்து அச்சுகளாக செய்யலாம்.

உருண்டையும் பிடித்து வைக்கலாம். சுவையான, சத்தான தீபாவளி பலகாரம் தயார்.

பொட்டுக்கடலை சேர்க்காமல் பாசிப்பருப்பில் மட்டும் கூட இதைச் செய்யலாம். காரைக்குடி பக்கம் இது மிகவும் பிரபலம்.
Comments
அட்மின்
குறிப்பை அழகா எடிட் செய்து வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிகவும் நன்றி, நன்றி....
நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்
அனுஷ்யா
எனக்கு பாசி பருப்பு உருண்டை ரொம்ப பிடிக்கும்....
பொட்டு கடலை சேர்த்தால் இன்னும் சுவை கூடும் என்று நினைக்கிறன்....
வாழ்த்துக்கள்... :)
hai
உருண்டை ரொம்ப அழகு...
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
அனு
நல்ல காம்பினேஷன், அருமையான சத்தான இனிப்பு குட்டீஸ்க்கு. செய்துடுவோம் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அனு
அனு,
சத்தான குறிப்பு
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
அனு சத்தான உணவு செய்முறைக்கு
அனு சத்தான உணவு செய்முறைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.