நான் எம்,ஏ பொருளாதாரம் படித்துல்ளேன். மேற்கொண்டு பி.எட். கரஸ்ஸில் படிக்க விரும்புகிறேன். இப்போ ஒரு ஸ்கூல்ல வேலை பார்க்கிறேன்.கரஸ்ல எப்படி ஆரம்பிக்கனும்,ஏதாவது ஐடியா
நான் எம்,ஏ பொருளாதாரம் படித்துல்ளேன். மேற்கொண்டு பி.எட். கரஸ்ஸில் படிக்க விரும்புகிறேன். இப்போ ஒரு ஸ்கூல்ல வேலை பார்க்கிறேன்.கரஸ்ல எப்படி ஆரம்பிக்கனும்,ஏதாவது ஐடியா
ஸ்ரீதேவிமுத்து, நீங்க எந்த
ஸ்ரீதேவிமுத்து, நீங்க எந்த ஊர்ல இருக்கீங்கன்னு தெரியல. உங்க ஊர்ல எந்த பல்கலைகழகம் பெஸ்ட் என்று தெரிந்தவர்களிடம் விசாரிங்க. அந்த பல்கலைகழகத்திற்கு நேரில் போய் அலுவலகத்தில் பி.எட். க்கு எப்போ அப்ளிகேஷன் தர ஆரம்பிப்பாங்கன்னு கேட்டு சொல்லும் நேரத்திற்கு போய் அப்ளிகேஷன் போட்டு ஃபீஸ் கட்டி புக் வாங்கி க்ளாஸஸ் அட்டன் பண்ணி படிங்க வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள். நான் சொன்ன தகவல் உங்களுக்கு கண்டிப்பா போதுமானதாக இருக்காது. நம் தோழிகளும் வந்து உதவுவாங்க.
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
நன்றி
நான் தூத்துக்குடில இருக்கேன். ஆனா என்ட்ரன்ஸ் உண்டா.
உறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்
ஸ்ரீதேவி எனக்கு அவ்வளவு
ஸ்ரீதேவி எனக்கு அவ்வளவு விவரம் தெரியலம்மா. நான் பல்கலைகழகம் பக்கம் போயே 3 வருஷம் மேல ஆயிடிச்சு நீங்க விசாரிங்க இல்லைன்னா நம்ம தோழிகள் தெரிஞ்சா சொல்வாங்க.
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
கரஸ்ஸில் பி.எட் படிக்க
கரஸ்ஸில் பி.எட் படிக்க எண்ட்ரன்ஸ் கிடையாதுனு நினைக்கிறேன்.but உங்களுடைய degree & pg degree percentage பார்பாங்கபா.
ஸ்ரீதேவி....... சில
ஸ்ரீதேவி....... சில பல்கலைகழகங்கள் தொலைதூரகல்வி யில் பி.எட் படிப்புகள் நடத்துகின்றனர். அதற்கு என்ட்ரன்ஸ் சில பல்கலைகழகங்கள் தான் நடத்துகின்றனர். 2வருடம் படிக்கனும். நிறைய பேர் ப்ணியில் இருந்துகொண்டே தொலைதூரக்கல்வி மூலமாக படித்துள்ளனர். எனவே கவலை வேண்டாம். என்னுடைய ஒரே ஒரு அட்வைஸ் என்னனா அண்ணாமலை , ஓபன்(திறந்த நிலை) பல்கலைகழகம் மூலம் மட்டும் வேண்டாம். அதில் மற்ற பல்கலைகழகங்களைவிட ஏஸியா வாங்கலாம். ஆனால் அதன் மதிப்பு மிக மிக குறைவு. எனக்கு தெரிந்து காமராஜர், சென்னை பல்கலைகழகம், ம்னோன்மனியம், பெரியார், பாரதியாஅர், பாரதிதாசன் போன்றவை தரமானதாக இருக்கும். அருகில் இருக்கும் ஏஏதேனும் பல்கலைகழக ஸ்டடி சென்ட்டரில் விசாரித்து உங்கள் படிப்பை தொடருங்கள். வாழ்த்துக்கள்.......... :)
அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.
ஸ்ரீ தேவி நீங்க துத்துக்குடி
ஸ்ரீ தேவி நீங்க துத்துக்குடி தான மனோன்மணியம் பல்கலை கழகத்தில் உண்டு.Entrance exam வைப்பாங்க பின்னர் தான் தெர்ந்தெடுப்பார்கள். அண்ணாமலை பல்கலை கழகத்தை தேர்ந்தெடுக்கலாம்.Entrance exam வைப்பார்கள் அது சும்மாதான்.Extra fees கட்டி சேர்ந்து விடலாம்.நீங்கள் ஒரு தடவை மட்டும் அண்ணாமலை பல்கலை கழகத்திற்கு செல்ல வேண்டி இருக்கும்.வகுப்புகள் திருநெல்வெலி கல்லுரிகளில் தான் நடக்கும்.2 மாதத்திற்கு 10 நாட்கள் நடக்கும் .அதில் என்னென்ன assianment work பன்னனும்னு கற்றுகொடுக்கப்படும்.தேர்வுகலும் திருநெல்வேலியில் தான் நடக்கும்.Training சான்றிதழ் நீங்க வேலைப்பார்க்கிற பள்ளியிலெ வாங்கி கொள்ளலாம்.