மட்டன் சூப்

தேதி: November 10, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (5 votes)

மட்டன் - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - ஒன்றரை தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
சீரக தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சோம்பு தூள் - கால் தேக்கரண்டி
பாதாம் பருப்பு - 15
பட்டை - ஒன்று
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
புதினா - ஒரு கொத்து
மல்லித் தழை - 2 கொத்து
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தாளிக்க

பாதாம் பருப்பை ஊற வைத்துத் தோல் உரித்து அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை துண்டுகளாகவும் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும். மல்லி, புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிரசர் குக்கரில் மட்டனை சுத்தம் செய்து போட்டு ஒரு தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, மிளகு தூள், சீரக தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், தக்காளி, பச்சை மிளகாய், மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும்.
மட்டன் வெந்ததும் அதில் அரைத்த பாதாமை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கி வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, புதினா, மல்லித் தழை சேர்த்து தாளிக்கவும்.
சூப்பில் தாளித்தவற்றை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
சுவையான மட்டன் சூப் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

மட்டன் சூப் பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப நன்றி கலை

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

அருமையா இருக்கு... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

halila,சூப்பர் சூப் சூப்பரா செய்து இருக்கீங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ஹளிலா,

சுவையான சூப்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ரொம்ப நன்றி வனிதா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப நன்றி முஹ்சினா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வாழ்த்திற்க்கு ரொம்ப நன்றி கவிதா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஹலிலா சூப் சூப்பர் மா. அழகான படங்கள் சாப்பிட வா வா என்று அழைக்கிறது. வாழ்த்துக்கள் ஹலிலா.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

wow...will try this weekend.

வாழ்த்திற்க்கு ரொம்ப நன்றி நித்யா. அவசியம் செய்து பாருங்கள்

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப நன்றி jaganath. அவசியம் செய்து பாருங்கள்

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஹாய் ஹலீலா நலமா? உங்களுடைய மட்டன் சூப் செய்தேன் ரெம்ப நல்லா இருந்தது. போட்டோ பேஸ்புக்கில் போட்டு இருக்கிறேன். நான் மட்டனை மட்டும் நல்ல வேகவைத்து விட்டேன் என் பையனுக்கு பிடிக்காது என்று அவனும் விரும்பி சாப்பிட்டான் குறிப்புக்கு மிக்க நன்றி.

அன்புடன் கதீஜா.

அஸ்ஸலாமு அலைக்கும் கதீஜா அல்ஹம்துலில்லாஹ் நான் நல்ல இருக்கிறேன் நீங்கள் நலமா ரொம்ப சந்தோஷம் செய்து பார்த்து சொன்னதற்கு நன்றி,

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஹலீலா, உங்க மட்டன் சூப் செய்தேன், மிகவும் சுவையாக இருந்தது. நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

சூப் ரெசிப்பி சூப்பர் ,உங்கள் ரெசிப்பி எல்லாம் ரொம்ப அருமை .நான் உங்கள் விசிறி .i am sameera parvin from ramnad