உதவுஙகள் தோழிகளே..

என் மாமனாருக்கு வீட்டில் யாரயுமே பிடிப்பதிலை,எல்லோரிடமும் சண்டை போடுகிறார்,என்ன செய்யலம்?உதவுஙகள் தோழிகளே..

நிறைய பேருக்கு இப்படி ரிடயர்மென்ட் வயசில் ஒருவித மனழுத்தத்துக்கு ஆளாவதால் சுபாவம் மாறிவிடும்..யாருக்கும் நம்மை பிடிப்பதில்லை என்று அவங்க மனசுக்குள் தேவையில்லாத எண்ணம் வரும்..அவரை எதிலாவது எஙேஜ் பண்ணிவிடலாம்..தெரிந்த ஒருவரது அப்பா நல்லா தான் இருந்தார் வேலைக்கு போகும் வரை ரிடயர் ஆனதும் ஆளே மாறிப் போயிட்டார்..அதன் பின் அவங்க வயசானவங்க மட்டும் சேர்ந்து இருக்கும் க்லபு எதிலோ சேர்த்து விட்டார் நல்ல மாறிட்டதா சொன்னாங்க..அவரை எதிலாவது ஈடுபடுத்தி விடுங்க..நேரம் எடுத்து அவரோடு பேசவோ அன்பு காட்டவோ செய்து பாருங்க

தோழியே, பெரும்பாலான ரிடையர்டு ஆன ஆண்கள், ஆக போகிறவர்கள் இப்படி தான் நடந்து கொள்கிறார்கள். அவர்கள் ஏன் வெறுப்பு கொள்கிறார்கள். அர்த்தமில்லாத விஷயங்களுக்கு ஏன் கோப படுகிறார்கள் என்பதை மேலோட்டமாக பார்த்தால் விடை தெரியாது. கொஞ்சம் அவர்கள் மனஓட்டத்தோடு அவர்கள் நிலையில் இருந்து பார்த்தால் தெரியும். வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இனி நாம் வீட்டிற்கு பிரயோஜனப்படாதவர்கள், நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள், பரண்மேல் தூக்கி போட்ட பழைய பொருள் போல தான் நம்மை நடத்துவார்கள். என்று அவர்கள் தங்களுக்குள்ளே ஒரு வட்டத்தை போட்டுக்கொள்வதால் வரும் வினை இது. அவர்கள் வயதையொத்தவர்கள் சொல்ல கேட்பதை வைத்தும், நம் வீடுகளிலும் நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள் என்ற அவரே ஒரு மனபிரம்மையை ஏற்படுத்திக் கொள்வதால், யார் என்ன சொன்னாலும் தவறாக தான் தெரியும். யாரிடமும் தன்மையாக பேசவும் வராது. அவரை புரிந்து கொண்ட ஒரே ஜீவன் அவருடைய மனைவி தான். இந்த கட்டத்தை ஸ்போர்டிவாக எடுத்துக் கொள்பவர்கள் அடுத்த கட்டத்துக்கு நகர முற்பட்டு தங்களை தங்களுக்கு பிடித்த துறைகளில் ஈடுபடுத்திக் கொண்டு மீத வாழ்க்கையை இன்பமாக்கி கொள்கிறார்கள். இனி வாழ்க்கையில் என்ன இருக்கிறது என்ற மனநிலையில் இருப்பவர்களுக்கு அழகான பூ கூட கடினமான இரும்பு போல தான் தெரியும். இவர் போன்ற மனநிலையில் இருப்பவர்களை மாற்றுவது சுற்றி இருக்கும் உறவுகளால் மட்டுமே முடியும். மூப்பு நெருங்க, நெருங்க கூட ஒரு சிலருக்கு அர்த்தமில்லாத பயம் தோன்றும். அதன் விளைவாக கூட இப்படி வெறுப்பு கொள்வார்கள். அவரிடம் ஒரு நண்பரை போன்று பேசினால் அவர் மனதில் உள்ளதை அறிய முடியும். அதன்மூலம் நீங்களும் அவர் குணாதிசயத்தை மாற்ற இயலும். குழந்தையிடம் இருக்கும் பிரியமான ஒன்றை பறித்த பின்பு ஒரு சில நிமிடங்கள் அது கோபமாகவோ, அழுது கொண்டோ தான் இருக்கும். தன்னிலைக்கு வந்த பிறகு அது கோபத்தையும் அழுகையையும் விடுத்து நம்மிடம் பழையபடி ஒட்டிக் கொள்ளும். இவரும் அந்த மனநிலையில் தான் இருப்பதாக தோன்றுகிறது. எதுவாக இருந்தாலும், அவர் வயதின் காரணமாக பொறுத்து அன்பு காட்டி செல்வது நல்லது தோழியே..

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்