26 வாரகர்ப்பிணி வலதுபுற வயிற்றில் வலி

தோழிகளே வணக்கம் ,இப்போது எனக்கு 7வது மாதம் (26weeks) தொடங்கி உள்ளது ,குழந்தையின் அசைவு நல்லபடியாகவே உள்ளது ,இரண்டு நாள் முன்பு ஸ்கேன் செய்து குழந்தையும் நன்றாக இருக்கிறது என்று மருத்துவர் கூறிவிட்டார் ,அதில் எந்த பிரச்சனையும் இல்லை .என் சந்தேகம் என்னவென்றால் அடிக்கடி வலதுபுற மேல் வயிறு(அடி வயிற்றுக்கு கொஞ்சம் மேலே ) ஓரிரு இடங்களில் மட்டும் வலிக்கிறது ,அது எதனால் இருக்கும் ?சூட்டு வலியும் இல்லை என தோன்றுகிறது ,எல்லோருக்கும் இது போல் தான் இருக்குமா ?எனக்கு இது முதல் குழந்தை .அதனால் கொஞ்சம் பயமாக உள்ளது , மேலும் எனக்கு non-veg foods எதுவும் அறவே பிடிக்கவில்லை ,இதனால் குழந்தைக்கு சத்து இருக்காதோ என என் கணவர் பயப்படுகிறார் ,நான் எந்த மாதிரி சத்தான உணவுகள் எடுக்கலாம் ,என் சந்தேகங்களுக்கு கொஞ்சம் உங்கள் பதில் வேண்டும் தோழிகளே.வந்து சொல்லுங்கள் .உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் .

தோழிகளே உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

எனக்கு எந்த தோழியும் பதில் சொல்ல மாட்டீர்களா ?எனக்கு வயிற்றில் ஓரிரு இடங்களில் மட்டும் (ஒட்டு மொத்தமாக இல்லை )வலி விட்டு விட்டு இருக்கிறது ,வயிறு கொஞ்சம் காலியாகும் போது அது போல் உள்ளது ,இது ஆபத்தானதோ என எப்போதும் மனம் நினைக்கிறது ,அதனால் தான் உடனே பதில் வேண்டும் என கேட்டேன் ,தயவு செய்து குழந்தை பெற்றவர்கள்,மூத்த தோழிகள் கொஞ்சம் பதில் சொல்லுங்கள் .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

பாரதி... கவலைப்படாதீங்கப்பா. அதுமாதிரி எங்கயாவது ஓரிரு இடங்களில் எப்போதாவது வலி வந்து போனால் பயப்படத்தேவையில்லை. நீங்கள் ஸ்கேன் செய்தபோது குழந்தை நல்லா இருக்குன்னுதான் டாக்டர் சொல்லிட்டாங்களே அப்பறம் ஏன் பயப்படறீங்க? இந்த நேரத்தில் சூட்டு வலி மட்டுமில்ல வாய்வினால் கூட வலி வரும். கேஸ்ட்ரபிள் ஏதாவது இருந்தா சரி பண்ணுங்க. உங்க திருப்திக்காகவேணா ஒருமுறை டாக்டரைப்போய் பாருங்க.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

பதில் போட்டமைக்கு ரொம்ப நன்றி நித்யா ,நான் மருத்துவரை புதன்கிழமை சென்று பார்க்கலாம் என இருக்கிறேன் ,எனக்கு குழந்தையின் அசைவு எல்லாம் நார்மல் ஆக உள்ளது ,இந்த வலி தான் கொஞ்சம் பயமாக இருந்தது அதான் சந்தேகத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று ,வேறொன்றுமில்லை .மேலும் ஏதேனும் சந்தேகம் என்றால் இங்கேயே கேட்டுக் கொள்கிறேன் ,நீங்களும் தோழிகளும் எனக்கு வந்து பதில் அளியுங்கள் .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

பாரதி கண்டிப்பாக டாக்டரை பார்த்து உங்கள் சந்தேகத்தை தீர்த்துக்கொண்டு நிம்மதியாக இருங்கப்பா. உங்களுக்கு பயமா இருக்கும்போது உங்க குழந்தைகிட்ட பேசுங்க உங்க பிள்ளை உங்களுக்கு தைரியம் சொல்லும். நாங்க இருக்கோம் உங்க சந்தேகத்தை தீர்க்க. டோன்ட் வொர்ரி பாரதி. நல்ல முறையில் குழந்தை பெற்றெடுக்க என் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

பாரதி கவலபடாதிங்க பாரம் இறங்கும்போது விலா வுல வலி இருக்கதான் செய்யும் வெந்தயம் வறுத்து பொடிசெய்து ஒரு ஸ்பூன் வாயில் போட்டு தன்னீர் குடிங்க வெட்டவலியாயிருந்தா போய்டும்

மேலும் சில பதிவுகள்