ட்ரெண்டி ஹென்னா டிசைன் - 8

தேதி: November 12, 2012

4
Average: 3.6 (19 votes)

 

ஹென்னா கோன்

 

மணிகட்டு பகுதியை ஒட்டி உள்ளங்கையில் ஒரு பூவை வரைந்து கொள்ளவும்.
உள்ளங்கையின் மேல் பக்கம் வரும்படி மற்றொரு பூ வரைந்து கொள்ளவும். இவற்றை இணைக்கும்படி ஒரு கொடியோ இலையோ வரையவும்.
மேலே உள்ள பூவில் துவங்கி விரலில் வருவது போல் ஒரு கொடி வரையவும்.
பூ இதழ்களின் நடுவே சிறு சிறு முத்துக்கள் வரைந்து முடிக்கவும். சுலபமாக போடக்கூடிய ஹென்னா டிசைன் இது.
படத்தில் உள்ளது போல் வளைவை முழங்கையில் வரைந்து கொள்ளவும்.
வளைவில் மேல் ஒரு பட்டாம் பூச்சி வரையவும்.
அதன் மேல் மீண்டும் ஒரு சிறு வளைவை வரைந்து கொள்ளவும்.
இனி ஆங்காங்கே சிறு புள்ளிகள் வைத்து முடிக்கவும். இதில் பட்டாம் பூச்சிக்கு பதிலாக பூக்களும் வரையலாம். முன்னும் பின்னும் வளைவுகளும், நடுவே உங்கள் கற்பனைக்கேற்ப ஒரு வித்தியாசமான டிசைன் வரைந்து கொள்ளவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

டிசைனை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

அன்பு தோழிகளே... இம்முறை எனக்கும் ஒரு மாடல் கையை கொடுத்திருக்காங்க... கண்டு பிடிங்க இந்த மாடல் யாருன்னு ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா அக்கா அருமையான டிஸைன். அந்த மாடல் நீங்களே தான் சரியா என் கணிப்பு?

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

மிக்க நன்றி :)

எப்பவுமே எனக்கு நான் தான் மாடல் ;) ஆனா இம்முறை உண்மையில் வேறு ஒரு மாடல் கிடைச்சாங்க... நானில்லை. கண்டு பிடிங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அடடே ஊரில் இருந்து வந்தாச்சு போல..நேரிலும் பாத்தாச்சு போல...;-)

கை பார்த்ததும் வனி இல்லைன்னு தெருஞ்சுது... மாடல் யாரும்ன்னும் தெருஞ்சுடுச்சு..வனி டிசைன் சொல்லவா வேணும். எப்போதும் போலவே அருமை..

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வனி டிசைன் அழகா இருக்கு.... இந்த புது மாடல் யாருனு எனக்கு தெரியும்... (:D) சொல்லவா சொல்லவா... ;)

அன்புடன்,
லலிதா

சூப்பரா இருக்கு வனி. ஹ்ம்!! யாரா இருக்கும்!!
சரியா சொல்லட்டா! ;) வேணாம். சரியா தப்பா சொல்லி மாட்டிருவேன். இமா ஜூட்.

‍- இமா க்றிஸ்

வனி ரொம்ப சிம்பிளா,அழகா இருக்கு.............வனி இது உங்க தங்கை வசு அவங்க கை தானே............

வந்து சந்திச்சாச்சு சுகி :) நீங்க தான் மிஸ்ஸிங்.

ரொம்ப நாட்களுக்கு பின் பதிவு... நன்றி சுகி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. நீங்க எப்படி கெஸ் பண்ணீங்க... சொல்லுங்க... சொல்லுங்க... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. தப்பா சொன்னாலும் பரவாயில்லை... கெஸ் பண்ணுங்க இமா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. வசு கை இல்லைங்க :) அறுசுவை தோழியின் கை... கண்டு பிடிங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க மாடல் பேர் என்னன்னு சரியா தெரியலென்னாலும் அவங்க ஒரு புர்க்கா அணிந்த நூர்ஜஹான்.. கணிப்பு சரியா?? :)

;( ஏன் ஏன் ஏன்??? நானே சொல்லிடுறேன், இது யார் கைகள்னு... நம்ம Mrs. Moorthy லாவண்யா கைகள் :) அவர்களை சந்தித்த இனிமையான அனுபவத்தை நிச்சயம் பகிர்ந்துக்குறேன். நன்றி சாந்தினி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி,
நம்ம லாவியா?!! மீட் பண்ணிட்டிங்களா?! சூப்பர், சூப்ப்பர்ர்ர்... :) நேத்துதான் நினைச்சிட்டு இருந்தேன், உங்களுக்கெல்லாம் மெயில் போட்டு பேசி எவ்வளவு நாள் ஆச்சின்னு. வெரி நைஸ். கண்டிப்பா உங்க சந்திப்பைப் பற்றி சொல்லுங்க, கேட்க ஆவலா இருக்கு.

அன்புடன்
சுஸ்ரீ

ஓ.. லாவண்யா அவர்களாஆஆ.. :) சரி அப்போ அந்த 4வது படத்துலே மணிக்கட்டு கிட்டே ஏதோ மணியெல்லாம் தெரியுதே அது என்ன? அதை வைத்து தான் கெஸ் செய்தேன்... :D இட்ஸ் ஆல் இன் த கேம்..;) சரி சீக்கிரமே அனுபவத்தை பகிருங்க.. :)

லாவியே தான் :) எழுதிட்டேன் சொல்ல விரும்பினேன்ல. பாருங்க :) நன்றி சுஸ்ரீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அவங்களே தான். பகிர்ந்துட்டேன் சொல்ல விரும்பினேன்ல. :) அது அவங்க கையில் இருந்த ப்ரேஸ்லட்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா