மிகுந்த குழப்பத்தில் உள்ளேன்

நான் 4 நாட்களுக்கு முன்னர் தான் 6 வார கர்ப்பத்தை உறுதி செய்தேன்...ட்யுப் ஸ்கேன் பண்ணியதில் பேபி நார்மல் , ஹார்ட் பீட் நன்றாக உள்ளது என்று கூறினார்கள்...
அதற்கு மறுநாள் எனக்கு ஒரு ட்ராப் ப்ளீடிங் ஆனது...மறுநாளும் ஒரு ட்ராப் இருந்தது....நான் செக் அப் செய்த டாக்டர் அடுத்த மாதம் தான் அப்பாயின்ட்மென்ட் தந்துள்ளார்கள்...எனக்கு மிகவும் பயமாக இருந்ததால் பாலி க்ளீனிக்க்கில் இன்று செக்கப் செய்தேன்...அந்த டாக்டர் வெயிட் தூக்க வேண்டாம்...ரெஸ்ட் எடுங்கள் வேண்டும் என்றால் ஸ்கேன் செய்துக் கொள்ளுங்கள்...மற்றபடி ப்ரச்சனை இல்லை என்று கூறினார்...எனக்கு மிகவும் குழப்பமாக உள்ளது...என் கணவர் அடுத்த செக் அப்பில் ஸ்கேன் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்....உங்களுக்கு யாருக்காவது இது பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ்?

சமீ நிஷாக்கு சொன்ன அதே பதில்தான் உங்களுக்கும் சொல்லறேன்.

periods date kku முன்னாடி blood பட்டா அது 2 days ஓ அல்லது 3 days ஓ கழிச்சு ரெகுலர் periods ஆகவே வந்துரும். ஆனால் அது periods date ஐ தாண்டி வந்தா அது implantation bleeding தான் . இது படுரனால ஒரு பிரச்சனையும் இல்ல. but சில சொட்டுகள் தான் வரும்.

முதல்ல குழம்பாம இருங்க. நல்லதே நடக்கும்னு நினைங்க. ஸ்கேன் பண்ணி பாக்குற வரை பதட்டபடாம இருங்க.

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

ஃபெரோ,
ரொம்ப நன்றி பா உங்க பதிவிற்க்கு...நான் ரொம்ப மன குழப்பத்தில இருக்கேன்...இங்க நானும் என் கணவரும் தான் இருக்கோம்..பெரியவங்களும் இல்லை எங்க கூட அதனால ரொம்ப பயமாவே இருக்கு...ரொம்ப நாள் கழிச்சு உண்டானது நிலைக்கனும்னு வேற கவலையா இருக்கு....

ஷமீலா
முதலில் வாழ்த்துக்கள். எனக்கும் இது போன்று இருந்தது. உடனே டாக்டரை சந்தித்து ஸ்கேன் செய்து பார்த்தார்கள். பிரச்சனை ஏதும் இல்லை. ஆனால் கம்லீட் பெட் ரெஸ்ட் எடுக்க சொன்னார்கள். வெய்ட் தூக்க கூடாது என்று சொன்னார்கள். அதன்படி நடந்தேன். அப்படி பிறந்தவள் தான் என் மகள் ஷாஜியா, அதனால் பயப்படாதேர்கள் கம்ப்லீட் ரெஸ்ட் எடுங்கள். எதற்கும் ஒரு ஸ்கேன் எடுத்து பாருங்கள் மீன்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்.ஷமீலா

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

நல்லா இருக்கீங்களா?நான் செய்தி கேள்வி பட்டதும் ரொம்ப சந்தோசப்பட்டேன்.என் பதிவை படித்து இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.பரவா இல்லைமா.

நாம் இத்துனை நாள் தவம் கிடந்ததற்கு ஆண்டவன் நமக்கு குழந்தை செல்வத்தை தந்துவிட்டான் என்று நிம்மதியா இருக்க முடியாத நிலைமையாக உள்ளது...இது என் தோழி என்னிடம் ஒரு வருடத்திற்கு முன் கூறியது.ஆமாம் ஷமீலா அவள் ஐந்து வருடம் கழித்து தாய்மை அடைந்ததால் உங்களை மாதிரி தான் டெஸ்ட் பண்ணி ஒரு பத்து நாள் கழித்து அவளுக்கு ப்ளீடிங் வர ஆரம்பித்து விட்டது.டாக்டர் ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு குழந்தை நன்றாக உள்ளதென்றும் அவளை பக்குவமாக இருக்க சொல்லியும் அட்வைஸ் பண்ணினார்.ஒரு மூன்று மாதத்திற்கு அவளுக்கு லைட் லைட்டா ப்ளீடிங் பட்டது.அப்பறம் நல்ல படியாக குழந்தை பிறந்தது.

எனவே ஷமீலா ரொம்ப பக்குவமா தைரியமா இரிங்க.அல்லாஹ் இருக்கிறான் நிச்சயம் உங்களை கைவிட மாட்டான்.நாங்கள் அனைவரும் உங்களுக்காக துஆ செய்கிறோம்.

SSaifudeen:)

நன்றி சமீனா...ஸ்கேன் பண்ணி பார்க்குறேன் மா..

சமீஹா நல்லா இருக்கிங்களா?நான் 3 நாளா இந்த டென்ஷன்ல எதுவுமே பார்க்கலைமா....என்னால மனசார சந்தோஷபட கூட முடியலை..அல்லாஹ்ன்னு இந்த குழந்தை நிலைக்கனும்னு தான் எப்பவும் கேக்குறேன்...
அப்புரம் ஊர் நியாபகமா இருக்கு..அழுகையா வருது...4 மாசத்துக்கு அப்புறம் தான் ஊருக்கு போகலாம்ன்னு டாக்டர் சொல்றாங்க...எனக்கு இங்க தனியா ரொம்ப கஷ்டமா இருக்கு....
நீங்க எல்லாம் தைரியம் சொல்றது மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு...ரொம்ப நன்றி சமீஹா....

ஷமீலா....கவலைப்படாதீங்கம்மா.
நீங்க ஏன் தனியா இருக்குறதா ஃபீல் பண்ணுறீங்க உங்க கூட நாங்க இருக்கோம்மா.என்ன சந்தேகமா இருந்தாளும் இங்கே கேளுங்கள் நிம்மதிக்கும் ஆறுதலுக்கும் சந்தோசத்துக்கும் நாங்க இருக்கிறோம்.
எது நடந்தாலும் அது நம் நல்லத்துக்காக தான் அல்லாஹ் செய்வான் என்ற மன திடத்தோடு இரிங்க.
இன்ஷா அல்லாஹ் நம் குழந்தையை நல்ல படியாக நமக்கு அல்லாஹ் தருவான் என்று நம்புங்கள்.

SSaifudeen:)

குட் நியூஸ் சொல்லி இருக்கீங்க......சந்தோசமா இருக்குமா.....

பயப்படாதீங்க சமீலா....தலைக்கு தலையனை இல்லாமல் காலுக்கு 2,3 தலையனை வைத்துப் படுங்க....நல்லா ரெஸ்ட் எடுங்க...நிரையப் பேருக்கு இதுப் போலவே பிலீடிங் வரும்....சொ பயப்படாதீங்கமா.....அல்லாஹ் பாதுக்காப்பான்.....இன்சாஅல்லாஹ்...

ஹசீன்

ஷமீ, தயவு செய்து கவலைஎய் கவலையா நினைக்காதீங்க. எல்லாம் நல்லதுக்குனு நினையுங்க. நீங்க வருத்தப்படாம குழம்பாம உங்க மனச சந்தோஷமா வச்சுக்குருங்க.

அல்லாஹ் கண்டிப்பா இந்த குழந்தைஎய் நல்ல படியா பெற்று எடுக்க வச்சுருவான்னு முழுசா நம்புங்க. positive எண்ணத்தையே நினையுன்கமா. ரொம்ப நாள் கழிச்சு conceive னு சொன்னாங்க, எல்லாம் நல்லபடியா அமையும். கவலைபடாதிய.

.ஷமீ சொன்னமாறி நாங்க இருக்கோம். dont worry ya . டவுட் வந்தஆ இங்க கேளுங்க. நம்ம சகோதரிகள் கண்டிப்பா உதவுவாங்க.அல்லாஹ்ட்ட துஆ கேளுங்க. நானும் கண்டிப்பா உங்களுக்கு துஆ செய்றேன். take care மா

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

ஷமிலா பயப்படாதிங்க பிளிடிங் சில பேருக்கு ஆகும் குழந்தை பிறக்கும்வறைக்கூட சில பேருக்கு இருக்கும் எங்க சின்னம்மாக்கு இப்படி இருந்துருக்கு பயப்படாதிங்க சந்தோஷம் கொடுத்த அல்லாஹ் நிறைவாக்கொடுப்பான் நம்பிக்கையா இருங்க

ஹாய் சமீஹா ,சமீனா ,ஹசீன் ,நிஷா அம்மா,ஃப்ரோ
நான் இன்னைக்கு காலையில டாக்டரை பார்த்து ஸ்கேன் பண்ணிட்டு வந்துட்டேன் மா....
அவங்க பேபி நல்லா இருக்கு.....இது முதல் மூன்று மாதங்களில் சிலருக்கு வருவது தான்....அதனால பேபிக்கு ஒண்ணும் இல்லை அப்படின்னு சொன்னாங்க..
அப்புறம் தான் எனக்கும் என் கணவருக்கும் மனசே நிம்மதியா ஆச்சு....நான் உங்க ரிப்ளை எல்லாம் நேற்று அவங்க கிட்ட காட்டினேன்...பாரு எவ்வளவு பேர் நம்ம பேபிகாக துவா செஞ்சு இருக்காங்க....உடனே ரிப்ளை பண்ணி எல்லாருக்கும் நன்றி சொல்லுன்னு சொன்னாங்க....எனக்காகவும் , என் குழந்தைக்காகவும் துவா செஞ்ச என் தோழிகள் அனைவருக்கும் ரொம்ப நன்றி மா..
சமீஹா: உங்க பதிவு எல்லாம் படிச்சேன்...மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது...உங்களுக்கும் அல்லாஹ் உதவியினால சீக்கிரமே குழந்தை உண்டாவீங்க...அடுத்த வருஷம் கண்டிப்பா பாப்பாவோட தான் இருப்பீங்க...நான் மனசார துவா செய்றேன்....

மேலும் சில பதிவுகள்