மிகுந்த குழப்பத்தில் உள்ளேன்

நான் 4 நாட்களுக்கு முன்னர் தான் 6 வார கர்ப்பத்தை உறுதி செய்தேன்...ட்யுப் ஸ்கேன் பண்ணியதில் பேபி நார்மல் , ஹார்ட் பீட் நன்றாக உள்ளது என்று கூறினார்கள்...
அதற்கு மறுநாள் எனக்கு ஒரு ட்ராப் ப்ளீடிங் ஆனது...மறுநாளும் ஒரு ட்ராப் இருந்தது....நான் செக் அப் செய்த டாக்டர் அடுத்த மாதம் தான் அப்பாயின்ட்மென்ட் தந்துள்ளார்கள்...எனக்கு மிகவும் பயமாக இருந்ததால் பாலி க்ளீனிக்க்கில் இன்று செக்கப் செய்தேன்...அந்த டாக்டர் வெயிட் தூக்க வேண்டாம்...ரெஸ்ட் எடுங்கள் வேண்டும் என்றால் ஸ்கேன் செய்துக் கொள்ளுங்கள்...மற்றபடி ப்ரச்சனை இல்லை என்று கூறினார்...எனக்கு மிகவும் குழப்பமாக உள்ளது...என் கணவர் அடுத்த செக் அப்பில் ஸ்கேன் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்....உங்களுக்கு யாருக்காவது இது பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ்?

ரொம்ப சந்தோசம்........உடனே 2 ரக்கா தொழுது அல்லாஹ் க்கு நன்றி சொல்லுங்க எதையும் போட்டு மனசே குழப்பிக்காதிங்க...........எனக்கும் இதுபோல்தான் இருந்தது நல்லா ரெஸ்ட் எடுங்க சரியாகிடும்........

assalamu alaikum shameela...epdi irkeengama!..
Enakku unga padhivai parthu kashtama irundhudu..apram neenga scan pannittu vandhu sonnadhuku aprm tan konjam nimmadhiya irukku...alhamdulillah allah endha kurayum illama nalla padiya neenga aasa padura madiri kulandhai pirakka udhavi seivan..enga elorudaya dua ungaluku epavum irukum ma...neengalum indha nerathla enga ellorukahavum dua seingama..

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

ஷமீலா முதலில் என் வாழ்த்துக்கள்......குழந்தை நல்ல இருக்குல ரொம்ப சந்தோஷம்ப்பா......
கவலைபடாதீங்க என் friend க்கும் இப்படி தான் இருந்தது அதுவும் period date kku 2 நாளைக்கு முன்னாடியே இருந்தது.அவளும் எங்க குழந்தையா இருக்கப்போதுனு நினைத்து தான் டாக்டரை போய் பார்த்தா அவங்க scan பண்ணிட்டு குழந்தை நல்ல இருக்குனு சொல்லிட்டாங்க இப்ப அவளுக்கு 5 மாதம்.அல்லா மேல பாரத்தைப் போட்டுட்டு தைரியமா இருங்க. நல்ல healthy யான food சாப்பிடுங்க.

வாழ்த்துகள் ஷமீலா. நல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும்

டாக்ட்டர் ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டாங்கள்ளே இப்பத்தான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு ஷமீலா உங்க அண்ணாட்ட கூட சொல்லி ரொம்ப பீல் பண்ணிக்கிட்டு இருந்தேன்...இருந்தாலும் ரொம்ப கடினமான வேலை செய்யாதீங்க,முதல் ஐந்து மாதத்துக்கு ரெஸ்ட் எடுங்க.நல்லா சத்தான ஆகாரங்கள் சாப்பிடுங்கள்,சூடு ஐடெம் அவாய்ட் பண்ணிக்கோங்க.

எல்லாத்துக்கும் மேலா அல்லாஹ்விடம் ரொம்ப ரொம்ப துஆ கேளுங்கள்.இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு கண்டிப்பா நல்ல அழகான ஆரோக்கியமான சாலிஹான குழந்தையை தருவான்....

எனக்காக நீங்கள் செய்யும் துஆக்கு ரொம்ப நன்றிப்பா...உங்க வார்த்தை பலித்தால் எனக்கு ரொம்ப சந்தோசம்.
இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்கள் துஆவை கபூல் செய்யட்டும் ஆமீன்....

SSaifudeen:)

ஷமிலா ரொம்ப சந்தோஷம்மா ஆளையேக் கானும் என்னனு தெரியலனு பயந்துட்டேயிருந்தேன் அல்லாஹ் சந்தோஷம் கொடுத்துட்டான் அல்லாஹ் படைத்த உருப்புக்கு பழுதில்லாம நல்லபடியா கைக்குகிடைக்க துவா செய்ரேன் நிம்மதியாயிருங்க

அஸ்ஸலாமு அழைக்கும் ஷமீ, இப்பதான் உங்க பதிவை படிச்சேன். ரொம்ப சந்தோஷமா இருக்குது. அல்லாஹ் எல்லாத்தையும் நல்லதாக்கி தருவான். முதல்ல ரூபி சொன்ன மாறி 2 ரக்க அத் தொழுது அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லுங்க. நல்லா healthy foods எடுங்க. blood level , blood பிரஷர் எல்லாத்தையும் கரெக்டா வச்சுக்கிருங்க. doubts வந்தா பெரியவங்கல்ட்ட consult பண்ணிக்கோங்க. இங்க பதிவு போட்டா friends கண்டிப்பா உதவுவாங்க. 4 months தன பொறுத்துக்கோங்க. அதுக்கப்புறம் என்ன ஊருக்கு பரந்துரலாம் . அல்லாஹ் நல்லபடியா குழந்டைஎய் பெற்று எடுக்க உதவி புரிவானாக!

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

லேகா நான் எங்கேயும் போகல கிஸ்ஸில்தான் இருக்கேன் இப்ப என்ன செய்யிறீங்க ஒரு கட்டு கட்டியாச்சா எனக்கு பிரட் ஜாமுன் ரொம்பபிடிக்கும் கொஞ்சம் பார்சல் ப்லீஸ்

ரூபீ : ஆமாம் ரூபி.அல்லாஹ்க்கு தான் நன்றி சொல்லனும் மா..
சம்னாஸ் : வலைக்கும் சலாம் சம்னாஸ்....அல்ஹம்துலில்லாஹ் நல்லா இருக்கேன்...நீங்க எப்படி இருக்கிங்க?உங்க துவாக்கு எல்லாம் ரொம்ப நன்றி மா....கண்டிப்பா நானும் எல்லாருக்காகவும் துவா செய்றேன்.
சாதிக்கா:நன்றி மா...நானும் ரொம்ப பயந்துட்டேன்..இப்போ தான் மனசுக்கு ரிலாக்ஸா இருக்கு...
ஸ்கந்தா: ரொம்ப நன்றி ஸ்கந்தா....
சமீஹா: இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நம்ம எல்லாருடைய துவாவையும் கபூல் செய்வான் சமீஹா...
நிஷா அம்மா : உங்க அன்புக்கு ரொம்ப நன்றி மா...
ஃப்ரோ : வலைக்கும் சலாம் ஃப்ரோ....இங்க நீங்க எல்லாம் ஆறுதல் சொன்னதும் தான் கொஞம் நம்பிக்கையே வந்துச்சு மா...நானும் 5 மாசாம் எப்போ வரும்ன்னு தான் இருக்கேன்....டாக்டர் அப்போ இருக்குர ஹெல்த் கண்டிஷன் பார்த்து ட்ராவல் பண்ணுறத பத்தி சொல்றேன்னு சொல்றாங்க...

தோழிகளே
திரும்பவும் சந்தேகத்தோட வந்துட்டேன் மா...
எனக்கு பசியே இல்லை....சாப்பிடவும் முடியலை..ஆனால் சாப்பிடலன்னால் வயிற்று வலி வருது...டாக்டர் சாப்பாட பிரிச்சு சாப்பிடுங்கன்னு சொல்றாங்க....நான் லைட் அ என்ன மாதிரி உணவு எடுத்துக்கலாம் ?
இரவு சாப்பிட்டாலும் 2 மணி நேரத்துல மேல் வயிற்று பக்கம் வலிகிறது....என்ன சாப்பிடலாம் சொல்லுங்க?டாக்டர் பேபி நல்லா இருக்கு நல்லா சாப்பிடுங்கன்னு சொல்றாங்க...ப்ளீஸ் சொல்லுங்க பா...

மேலும் சில பதிவுகள்