பச்சரிசி தோசை

தேதி: November 14, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (4 votes)

 

1. பச்சரிசி - 4 கப்
2. வெந்தயம் - 1 1/2 தேக்கரண்டி
3. உப்பு


 

பச்சரிசியை வெந்தயத்துடன் சேர்த்து ஊற வைத்து வடித்து விட்டு உதிரி மாவாக அரைக்கவும்.
அரைத்த மாவில் வரும் நொய்யை தனியாக வைக்கவும்.
நொய் ஒரு கப் அளவு வைத்துக் கொண்டு மீதம் உள்ள நொய்யை மீண்டும் அரைத்து மாவாக்கவும்.
பாத்திரத்தில் தேவையான நீர் விட்டு கொதி வந்ததும் நொய் சேர்த்து கஞ்சியாக காய்ச்சவும். (நொய் வெந்து கிடைக்கும் பதம் பாயாசம் பதத்தில் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ப நீர் வைக்கவும்.)
நொய்யை காய்ச்சி எடுத்து இந்த கஞ்சியுடன் அரைத்து வைத்த உதிரி மாவை சேர்த்து கெட்டி இல்லாமல் கலந்து உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
இந்த மாவு அப்படியே 1 நாள் புளிக்க வேண்டும்.
அடுத்த நாள் வழக்கமாக கல் தோசை ஊற்றுவது போல் இதை ஊற்றலாம். சிறுந்தீயில் மூடி போட்டு வேக விட வேண்டும். திருப்பி போட கூடாது. ஆப்பம் போல் பஞ்சு போல் வரும்.
சுவையான பச்சரிசி தோசை தயார்.


இது எங்கள் ஊர் பக்கம் தீபாவளிக்கு செய்யப்படுவது.

மேலும் சில குறிப்புகள்


Comments

பச்சரிசியை மட்டும் வைத்து பஞ்சு போல் ஆப்பம் என்பது வியப்பாக உள்ளது.செய்து பார்க்க ஆவலாக உள்ளது.ஆனால் எனக்கு சரியா புரிய மாட்டேங்குது.நொய் என்றால் என்னப்பா?

SSaifudeen:)

அரிசியை அரைக்கும்போது ரவை பதத்தில் கிடைப்பது. என் பதில் சரியா?

அதே தான்... ஒவ்வொரு முறையும் மாவை அரைத்து சலிக்க வேண்டும். அதில் நைசாக அரைத்த மாவை எடுத்துக் கொண்டு, ஜல்லடையில் நிற்கும் ரவை போன்றதை தனியாக சேகரிக்க வேண்டும். ஒரு கப் அளவு கிடைத்ததும் மீதம் உள்ள ரவையை மீண்டும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து மாவாக்கலாம். அந்த ரவை போன்றது தான் நொய் என்போம்.

சமீஹா... வெந்தயம் மிஸ் பண்ணிட்டேன், சாரி. இப்போ சரியா இருக்கு... ட்ரை பண்ணுங்க, ரொம்ப பிடிக்கும் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா அக்கா ,ஜெயா உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி:)

SSaifudeen:)