தேதி: November 16, 2012
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சேமியா - 100 கிராம்
சீனி - தேவையான அளவு
முந்திரி - 10
ஏலக்காய் - 3
தேங்காய் பால் - ஒரு கப் (முதல் தேங்காய் பால் மட்டும்)
நெய் - 3 தேக்கரண்டி
கிஸ்மிஸ் பழம் - 10
மைதா - 2 தேக்கரண்டி
உப்பு - சிறிது
ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி உடைத்த முந்திரி, ஏலக்காய், கிஸ்மிஸ் பழத்தை போட்டு வறுக்கவும்.

முந்திரி சிவந்ததும் அதில் சேமியாவைப் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.

வறுத்த சேமியாவில் 2 கப் தண்ணீர் ஊற்றி சீனி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

பின்பு மைதாவில் 5 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து கரைத்து அதில் ஊற்றி கிளறிவிட்டு கொதிக்க விடவும்.

சிறிது நேரம் கொதித்ததும் அதில் தேங்காய் பால் ஊற்றி கிளறிவிட்டு மீண்டும் கொதிக்கவிட்டு இறக்கவும்.

சுவையான சேமியா பாயாசம் ரெடி.

Comments
நன்றி.
எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
ஹலீலா
பாயாசம் சூப்பர். நான் தேங்காய் பால் சேர்த்திருக்கேன், ஆனால் மைதா சேர்ப்பதில்லை. சேர்க்கிறேன் ஒரு முறை... கன்ஸிஸ்டன்ஸி நல்லா வரும்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
haleela
assalamu alaikum haleela...paayasam gettiya azhaha vandu irukiradhu..maidha maavu add panradhu 1st time ipatan paarkraen..insha allah ipa try panna poren epdi vandhadu endru vandu solhiren...
"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"
ஹலிலா சேமியா பாயாசம் மிக மிக
ஹலிலா சேமியா பாயாசம் மிக மிக அருமையா இருக்கு. நானும் மைதா சேர்ப்பதை முதல் முறை இப்போதான் கேள்விபடுறேன். அந்த லாஸ்ட் பவுல் எனக்கு அப்படியே கொடுங்க ப்ளீஸ்...
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
ஹலிலா
சேமியா பாயாசம் ரொம்ப நல்லா செய்து இருக்கீங்க,நானும் மைதா சேர்ப்பதை இப்போதான் கேள்விபடுறேன்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
ஹலீலா
ஹலீலா சேமியா பாயாசம் எனக்கு ரொம்ப பிடிக்கும்... மைதா சேர்த்தது வித்தியாசமா இருக்கு கண்டிப்பா செய்து பார்கிறேன்.. வாழ்த்துக்கள்
அன்புடன்,
லலிதா
வனிதா
வனிதா அடுத்தமுறை மைதா சேர்த்து செய்துபாருங்கள் நன்றாக இருக்கும் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் ரொம்ப நன்றி
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
வஅலைக்கும் முஸ்ஸலாம் சம்னாஸ்
வஅலைக்கும் முஸ்ஸலாம் சம்னாஸ் சுவையும் நன்றாகவே இருக்கும் இன்ஷாஅல்லாஹ் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் பதிவிற்கு ரொம்ப நன்றிமா
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
நித்யா
நித்யா உங்களுக்கு இல்லாததா அப்படியே எடுத்துக்குங்க. மைதா சேர்த்து செய்தால் பாயாசம் கெட்டிய டேஸ்டும் அருமையா இருக்கும் ட்ரை பண்ணிபாருங்க பதிவிற்கு ரொம்ப நன்றிமா
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
அஸ்ஸலாமு அலைக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும் முஹ்சினா. மைதா சேர்த்து செய்தால் சுவையும் நன்றாகவே இருக்கும் இன்ஷாஅல்லாஹ் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் பதிவிற்கு ரொம்ப நன்றிமா
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
லலிதா
வாழ்த்திற்க்கு ரொம்ப நன்றி லலிதா செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
ஹலிலா
சேமியா பாயசம் செய்து பார்த்தேன் அருமை(:- வாழ்த்துக்கள்+நன்றி ஹலி.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
ஹளிலா,
ஹளிலா,
மைதா சேர்த்து வித்தியாசமா இருக்கு
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
அருட்செல்வி
அருட்செல்வி ரொம்ப சந்தோஷம் செய்து பார்த்து சொன்னதற்க்கு.வாழ்த்திற்க்கு ரொம்ப நன்றிமா
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
கவிதா.
கவிதா வாழ்த்திற்க்கு ரொம்ப நன்றிமா
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)