பித்தப்பையில் ஸ்டோன் (GALL BLADDER STONES)Help

கால்ப்ளாடர் ஸ்டோன் என் கணவ்ருக்கு இருக்குனு ஸ்கேன் தெரிந்தது இங்க யாருக்காவது பித்தப்பையில் ஸ்டோன் இருந்துருக்கா என்ன ட்ரீட்மென்ட் எடுத்தீர்கள் இதை ச்ரி செய்ய முடியுமா இப்பாதான் துபாயிலிருந்து 1 மாதம் வந்தாங்க என்ன உணவு முரைகள் சாப்பிடலாம் என்ன செய்யனும்னு ப்ரண்ட்ஸ் சொல்லுங்கள் எனக்கு பயமா இருகூ அவங்க ஹெல்த்ல ரொம்ப கவனமா இருப்பாங்க நிறைய தண்ணீர் குடித்துகிட்டே இருப்பங்க எப்படி வந்ததுனு தெரிய்லை காலையில் யூரின் வராமல் ரொம்ப கஷ்ட்ட பட்டாங்க doctor காமித்து அப்புறம் என் பாட்டி பன்னீர் கொடுத்தா urineவ்ரும்னு சொன்னாங்க அப்புறம் எல்லாம் பண்ணி யூரின் வந்திச்சி இப்ப ஸ்கேன்ல ஸ்டோன்ஸ் தெரிந்தது இன்னைக்கு மாலைதான் டாக்டர்கிட்ட ரிப்போர்ட் காமிக்கனும் நீங்க உங்கள் ஆலொசனயை எனக்கு சொல்லுங்கள்

வாவ்.... நல்ல விஷயம். ஆனா ஏன் அந்த 2 வரல?? சின்னவங்க வந்துட்டாங்க, பெரியவங்க வர முடியலயோ என்னவோ???!! ;( அப்போ பெருசா இருக்கது வர என்ன செய்வது??? கல் கரையாதா இதை சாப்பிட்டா?? எனி வே... எதுவா இருந்தாலும் உங்க கணவருக்கு குறைந்ததில் மகிழ்ச்சி. மீண்டும் ட்ரை பண்ணி பாருங்க... இதுக்குலாம் ஒன்னும் சைட் எஃபக்ட் இருக்காது தானே....

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//இரண்டு கற்கள் (two gallbladder stone ) 4-5MM அதே சைசில் இருக்கிறது முன்னாடி பார்த்த ஸ்கேன்ல மல்டிபல் கால் பிளாடர் ஸ்டோன் (multiple gall bladder stone )சொன்னாங்க இப்ப இரண்டு ஸ்டோன் இருக்குனு சொன்னாங்க//

ரொம்ப சந்தோசம்ங்க.. ஆச்சரியமாவும் இருக்கு.! உங்களுக்கு சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா அடுத்து ட்ரை பண்ற முதல் ஆள் நானாத்தான் இருப்பேன். எனக்கும் சரியா ஆச்சுன்னா, உடனே அந்த பூவுக்கு பேட்டண்ட் ரைட்ஸ் வாங்குறதுக்கும் முயற்சி பண்ணிடுவேன். :-)

எனக்கு சின்ன சின்ன சந்தேகங்கள் இருக்கு. இதுக்கு முன்ன மல்ட்பிள் ஸ்டோன்ஸ்னு சொன்னீங்க.. எத்தனை கற்கள் இருந்துச்சுங்கிறது ஸ்கேன் இமேஜ் பார்த்தாலே ஓரளவுக்கு தெரியுமே. உங்க பழைய ரிப்போர்ட்டை எடுத்து நீங்களே பாருங்க. இப்ப கடைசியா எடுத்த ரிப்போர்ட்டையும் வச்சுப் பார்த்தாலே உங்களுக்கு தெரியும். (ஸ்கேன் பண்ணி பார்த்தவங்க 2 கல்லுதான் இருக்குன்னு பொய் எல்லாம் சொல்ல மாட்டாங்க. நான் தெரிஞ்சுக்க விரும்புறது என்னன்னா, வெளியேறின கற்கள் எல்லாம் சின்ன சைஸ் கல் மட்டும்தானா, இல்ல, இப்ப இருக்கிற 4MM, 5MM சைஸ்ல உள்ள கல்லும் வெளியே போயிருக்காங்கிறதுதான்.)

அடுத்த விசயம் என்னன்னா, இந்த பூவுக்கு கல்லை வெளியேத்துற சக்தி இருக்கிறதாவே வச்சுப்போம். பித்தப்பை பையில இருந்து வெளியேறுற பாதையான cystic duct diameter 4 or 5 mm தான் இருக்கும். அப்புறம் common bile duct சைஸ் 5 இல்ல 6 mm தான் இருக்குமாம். சிலருக்கு அபூர்வமா அது 10 mm வரைக்கும்கூட இருக்க வாய்ப்பு இருக்காம். உங்க கணவருக்கு இருக்கிற கல் சைஸ் எல்லாமே 4, 5mm தான்ங்கிறதால உங்களுக்கு பிரச்சனை எதுவும் இருக்காது. ஆனா, எனக்கு இருக்கிற ஒரே கல் 13 mm சைஸ்ல இருக்கு. அது மொதல்ல gallbladder ஐ விட்டு வெளியே வரமுடியுமானே தெரியலை. அடுத்து அப்படியே வந்தாலும், எனக்கு இருக்கிறது அபூர்வ common bile duct ன்னு வச்சுக்கிட்டாலும், 10 mm dia duct வழியா 13 mm கல் எப்படி வெளியாகும்னு தெரியலை. bile duct ல கல் வந்து அடைச்சிக்கிட்டா விளைவுகள் விபரீதமா போகலாம். அதனால எனக்கு இந்த மருத்துவம் ஒத்து வருமான்னும் தெரியலை. சும்மா கிடக்கிற கல்லை கிளப்பி விட்டு, பிரச்சனையை பூ கொடுத்து வாங்கிக்கக்கூடாதேன்னும் பயமா இருக்கு. :-) இந்த பூ கல்லை அப்படியே வெளியேற்றாம கரைச்சு வெளியேற்றுச்சுன்னா, என்னோட பிரச்சனை சால்வ் ஆகும்னு தோணுது.

எதுவானாலும், இங்க உங்க கணவர்தான் எங்களுக்கு எல்லாம் guinea pig :-) அவருக்கு நல்லபடியா எல்லா கற்களும் வெளியாகட்டும். அதுக்கப்புறம் நாங்க ட்ரை பண்றோம்.

அப்புறம், தொடர்ந்து அந்த பூவோட சாறை குடிக்கலாமான்னு கேட்டு இருக்கீங்க. நீங்க இந்த கேள்வியை மூணு நாட்கள் குடிக்க சொன்ன உங்க உறவுகாரங்ககிட்டேதான் கேட்கணும். எனக்கு இதைப் பத்தி ஒரு ஐடியாவும் இல்லை. நீங்க சொல்லித்தான் இப்படி ஒரு பூ இருக்கிறதையும், இந்த மாதிரி ஒரு சிகிச்சை இருக்கிறதையும் தெரிஞ்சுக்கிட்டேன். தொடர்ந்து குடிச்சா வேற எதுவும் பிரச்சனை வருமான்னு தெரிஞ்சவங்ககிட்டே கேட்டு முடிவெடுங்க. உங்களோட அடுத்த டெஸ்ட் ரிசல்ட்காக ரொம்ப ஆர்வமா வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம். :-)

எங்கள் பக்கம் தேங்காய்ப்பூக் கீரை என்பார்கள். யூரின் இன்ஃபெக்க்ஷன் இருந்தால் அவித்துக் குடிக்கச் சொல்வார்கள். பலனுண்டா என்பது தெரியாது. சாதாரணமானவையாகத் தெரிந்தாலும்... இவையெல்லாம் நிச்சயம் தெரியாமல் முயற்சிக்க வேண்டாம் என்பது என் தனிப்பட்ட கருத்து.

‍- இமா க்றிஸ்

தோழி நீங்கள் சொல்லியிருக்கும் பூ பூளைப்பூ, ஆனா அதுல இதுபோன்ற வைத்தியம் இருப்பதாக இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.
இங்கு கோவையில் பீளமேடு என்பது பூளைமேடு என்பதன் மறுபெயர் எனக்கூறுவர். ஏனென்றால் அந்தபூக்கள் அங்கு நிறைய பூத்துக்கிடக்குமாம்!! பூளைமேடு என்னும் பெயர் ஆங்கிலேயர்களால் உச்சரிக்கமுடியாததால் பீளமேட் எனகூறி அதுவே நிலத்துவிட்டதாக கூறுவர்.
தோழி நீங்க கூறும் பூவினை மார்கழி கடைசிநாளன்று, பொங்கலுக்கு முதல்நாள் போகியன்று வீடுகளில் காப்புகட்டும் பொழுது உடன் வைத்து கட்டுவர். அதிலிருந்து சாறு எடுக்கமுடியுமா என்று தெரியவில்லை, தேங்காய் துருவல் போன்று வெள்ளையாக இருக்கும்.
ஒருவேளை இதன் மூலம் சரியானால் நல்லதே! அந்த பூ சீசனும் இனிமேல்தான் வரும்!!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஹாய் அனைவரும் நலமா?நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன் .

எனக்கும் இருந்தது பித்தக்கல் நானும் லேப்ராஸ்கோப் செய்துதான் எடுத்தேன் .
இதில் பயப்பட ஒன்றும் இல்லை எனக்கு கல்மட்டும்தான் எடுத்தார்கள்
(என் குழந்தைக்கு அப்போஒன்னேகால் வயது) சிகிச்சை ஒருநாள்தான் ஐந்து ஓட்டை போடுகிறார்கள் ஒரு ஹோல் வலது மார்பின் கீழ் அதுதான் மெயின் ஹோல் ஒருஇன்ச்சை; விடவும் சிறிதாகதான் இருக்கிறது மற்ற நான்கு ஹோலும் மிக்ச்சிறிய ஹோல்கலாகத்தான் இருக்கு அது அடிவயிற்றில் கொஞ்சம் கொஞ்சம் இடைவெளியில் வருகிறது ..சர்ஜரி முடிந்தவுடன் மாலையோ அல்லது அடுத்தநாளோ நாம் நார்மலாக இருக்கலாம். சிறிது நாட்கள் வெயிட் தூக்கவேண்டாம் என்று டாக்டர் சொல்கிறார்கள் .சாப்பாடும் ஆவியில் வேகவைத்த உணவுகள் இட்லி இடியாப்பம் இதுபோல் சாப்பிட சொன்னார்கள்.
((அப்போ சாபிடாததை எல்லாம் சேர்த்து பின்னாடி வெட்டிக்கலாம் ))கவலைவேண்டாம் என் அனுபவம் இது.....
.கல்லை மட்டும் ஏனெடுத்தீர்கள் என டாக்டரிடம் கேட்டதற்க்கு .பைய்யுடன் எடுத்தால் சாப்பிடும் உணவுகள் ஜீரணம் ஆவதில் பிரச்சனை இருக்கும் .இளவயதாக இருப்பதால் கல்லைமட்டும் எடுக்கிறேன் என்றார் .நீங்கள் கொலுப்பு அதிகம் சேரும் உணவுகளை சாப்பிட வேண்டாம் (மறுபடியும் கல் தோன்றலாம்) என்று சொன்னார் .ஆனால் நாக்கு எங்கு கேக்கிறது அதுபாட்டுக்கு உள்ளே போய்கிட்டுதான் இருக்கு .கல் எடுத்து நாலு வருசம் ஆகிருச்சு இதுவரைக்கும் வேறு கல் இருக்கான்னு டெஸ்ட் செய்து பார்க்கவில்லை..இல்லாமல் இருந்தால் நல்லது ...இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது .வருவது வந்துதான் தீரும் டேக் இட் ஈசி .பாய்ய்ய்ய்ய்

நீங்க எந்த ஊர்ல ஆபரேசன் செஞ்சுக்கிட்டீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? இங்க நான் பார்த்த வரைக்கும் எல்லா டாக்டருமே பித்தப்பையோடத்தான் எடுக்கணும்னு சொல்றாங்க. ஆனா, கொஞ்ச நாளைக்கு முன்ன நெட்ல இது சம்பந்தமா தேடுறப்ப, அப்படி ஆபரேசன் பண்ணி கல்லை மட்டும் எடுத்தவர் தன்னோட எக்ஸ்பீரியன்ஸை வீடியோ ஆதாரங்களோட whatisgallstone டாட் காம் னு ஒரு ஒருபக்க சைட்டை கிரியேட் பண்ணி போட்டிருகிறதை பார்த்தேன். அந்த அளவுக்கு தெளிவா, ஆதாரப்பூர்வமா வேற யாரும் டீட்டெயில்ஸ் கொடுத்து நான் பார்த்தது இல்லை. ஆனா அவர் லண்டன்ல இருந்து சைனா போயி, அங்க உள்ள ஒரு ஹாஸ்பிடல்ல இந்த ஆபரேசனை பண்ணி இருக்காரு. நான்கூட சைனா போறதை ஒரு ஆப்சனா வச்சிருந்தேன். :-)

நீங்க இந்தியாவிலேயே அதை பண்ணி இருந்தா ஹாஸ்பிடல் விபரம் சொல்லுங்க. அப்புறம், நாலு வருசமா எதுக்காக அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பண்ணிப் பார்க்காம இருக்கீங்கன்னு தெரியலை. ஸ்கேனிங் ரொம்ப சாதாரணமான விசயம் ஆச்சே. பித்தப்பைக்காக இல்லேன்னாலும், ஆபரேசனுக்கு அப்புறம் வேற எதாவது பிரச்சனைகள் இருக்கான்னு மாஸ்டர் ஹெல்த் செக்-அப் ஆவது செய்துக்கலாம் இல்லையா.. அதில உங்களுக்கு பித்தப்பையோட இப்போதைய நிலவரமும் தெரிய வந்துடும்.

அட்மின் எங்களுக்கும் ஆச்சரியமாதான் இருக்கு முதல்ல உள்ள ஸ்கேன்ல மல்டிபல் ஸ்டோன் தான் இருந்திச்சி (there is evidence of multiple calculi of size 4-5 mm seen in gall bladder freely moving with change in posture )

இப்ப எடுத்த ஸ்கேன்ல ( there is evidence of two calculi of size 4-5 mms seenn in gall bladder )அதே சைஸ்தான் இப்ப வெளியான் கல்லும் அதே அள்வுதான் இருந்திருக்கும் ஏன்னா அந்த கல்ல நாங்க பார்க்கல டாய்லட் போகும் போது ஏதோ அடைச்சிக்கிட்டு எரிச்ச்லா வர மாதிரி இருந்திச்சின்னுதான் என் கணவர் சொன்னார் எங்க சொந்தகாரங்க கொடுத்தது பூளாப் பூவும் அதோடு சேர்த்து நெரிஞ்சி முள்ளும் வேறோட எல்லாத்தையும் ஒரு பாக்ம் எடுத்து சின்ன் சின்னதா க்ட் ப்ண்ணிட்டு மிக்சியில் அடிச்சி சாறு எடுத்து கொடுத்தோம் இது உங்களுக்கு ஒத்து வருமான்னு தெரியலை நாங்க திரும்பவும் முயற்சி பண்ணி பார்த்துட்டு ஸ்கேன் பண்ணி பார்த்துட்டு எல்லா கல்லும் வெளியாகிடுச்சான்னு நிச்சயமா சொன்ன பிறகு நீங்க வேனும்ன முயர்சி பண்ணுங்க அது வரை வெயிட் பண்ணுங்க நாங்க கன்பார்ம்
பண்ணிகிட்டு சொல்றோம் மறுபடி அந்த இலை அனுப்ப சொல்லி இருக்கோம்
அதோட பெயர் AEREVA LANATA நீங்க கூகில்ல பாருங்க அட்மின் அண்ணா

பித்தப்பையை எடுக்காமல் கல்லை நீக்கும் மருத்துவர் யார்? முகவரி தாருங்கள்.

இந்த இழை ஆரம்பித்த நேரம், எனக்கு மீண்டும் வலி, உணவு செரிமனம் குறைவு என்று ஆரம்பித்து விட்டது. மருத்துவரிடம் அப்பாயின்மெண்ட் ஜனவரி 15-தான் கிடைத்தது. அட்மின் மற்றும் farvin உங்களுக்கு எதும் சந்தேகம், அல்லது மருத்துவரிடம் கேட்க வேண்டுமா? any suggestion. நான் US உள்ளேன், இங்கு உள்ள மருத்துவர் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்.

பூளாப் பூ அற்புதம் செய்தால் சொல்லுங்க Farvin தோழி, இந்தியாவிற்கு உடனடியாக பிளைட் டிக்கட் போடுகிறேன்.

தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன் ஸாரி.மூன்றுநாட்களாக கனெக்சன் சரியாக இல்லை. நான் பண்ணியது ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவமனை பெயர் கணகமணி ஹாஸ்பிட்டல் . அங்கு உள்ள டாக்டர்கள் செய்யவில்லை .
இதற்க்கென்றே மதுரையில் இருந்து பெரியசாமி என்ற டாக்டர் ஒருவர் சனிக்கிழமைதோறும் வருகிறார் .அவர்தான் செய்தார் .
இதில் முக்கியமானவிசயம் என்னவென்றால் எனக்கு செய்யும்போது 26 வயது ஒருவேளை அதற்க்குமேல் வயது என்றால் பையுடந்தான் எடுப்பார்களோ என்னவோ தெரியவில்லையே ...

ஆனால் இப்போ எப்படி என்று தெரியவில்லை அதே டாக்டர் வருகிறாரா இல்லையா என்றும் தெரியவில்லை ஹாஸ்பிட்டலின் போன் நம்பர் இரண்டு இருக்கு அது இப்போ வேலை செய்கிறதா என்று பாருங்கள் 4567221201: 4567220544:

நான் இப்போ இருப்பது சவுதியில் அதனால் என்னால் போதுமான விபரம் தர இயலவில்லை ஸாரி ....

விரைவில் ஸ்கேன் செய்து பார்க்கிறேன் நன்றி...

நீங்கள் அனைவரும் சொல்வதை பார்த்தால் எனக்கே சந்தேகம் வந்துருச்சு எனக்கு பித்தப்பை இருக்கா இல்லையான்னு?? ஹி ஹி சும்மா...
/

ஹாய் வித்யா எப்ப்டி இருக்கீங்க எனக்கு நெட் ச்ரியாக வேலை செய்யவில்லை கட்டாகி கிட்டே இருந்தது உங்களுக்கு வ்லி எப்படி இருக்கு நீங்க டாக்டரிடம் கேளுங்க பூளாப் பூ கொடுத்து ஸ்கேன் பண்ணும் போது இர்ண்டு ஸ்டோன் தான் 4- 5 மிமீ காமிக்குது அதுக்கு முன்னாடி மல்டிபல் ஸ்டோன் 4-5 Mm காமிச்ச்து இது சாத்தியமா இருக்குமான்னு கேளுங்க இதுக்கு ஆங்கிலத்தில் உள்ள பெயர் AEREVA LANATA சொல்லி கேட்டு பாருங்க இப்ப இரண்டு ஸ்டோன் தான் இருக்கு இது உடணே பித்தப்பையை எடுக்கனுமா என்ன பண்ணலாம் கேளுங்க என் கணவருக்கு மறுபடி பூளாபூ கொடுக்கனும் பிறகு சொல்கிறேன் என்ன ரிசல்ட்னு நீங்க டாக்டரிடம் விளக்கம்மா கேளுங்க

மேலும் சில பதிவுகள்