தேதி: November 17, 2012
பரிமாறும் அளவு: 5 நபர்கள்
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
ஈரப்பலாக்காய் -1
வெங்காயம் -1
பச்சை மிளகாய் -1
தேங்காய்ப் பால் – ¼ கப்
பூண்டு- 5-6 பற்கள்
இஞ்சி – 1 துண்டு
சீரகம் 1 தே.கரண்டி
மிளகுதூள்-1/2 தே.கரண்டி
மிளகாய்த்தூள் -2 தே.கரண்டி
புளி-சிறிதளவு
கடுகு- சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – 2 தே.கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
பலாக்காயைப் நான்காகப் பிளந்து தோல் சீவி நடுத்தண்டுப்பகுதியை நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.
அத்துண்டுகளை தண்ணீர் சேர்த்து அவித்து எடுக்கவும்.
வெங்காயம், மிளகாயை நறுக்கி வைக்கவும்.
இஞ்சி, பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடித்ததும் சீரகம், வெங்காயம், மிளகாய்,பாதியளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின் தட்டி வைத்த இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
தேங்காய்ப்பால் ஊற்றி பலாக்காய், மிளகாய்த்தூள், உப்பு, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவேண்டும்.
நன்கு கொதித்து இறுகிவர, மிளகுதூள் தூவி, மிகுதிப் பாதியளவு கறிவேப்பிலை சேர்த்து இறக்க வேண்டும்.
சுவையான ஈரப்பலாக்காய்கறி தயார். இதை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.
Comments
ஈரப்பலாக்காய் கறி
சூப்பர் வத்சலா. இதற்கு சா'த'ம் (எடிட் பண்ணுங்க) கூட வேண்டாம். சுடச்சுட தனியாகவே சாப்பிடலாமே.
- இமா க்றிஸ்
இமா, உங்கள் கருத்துக்கு மிக்க
இமா, உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"
ஈரப்பலாக்காய் என்பது
எனக்கு சின்ன சந்தேகம், ஈரப்பலாக்காய் என்பது பலாமுசுதான,
மணிமேகலை
என்றும் அன்புடன்,
மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே
ஈரப்பலாக்காய் mean,
bread fruit... சூப்பர் love this vathsala medam
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!!! அன்புடன், farsana.