சமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 7

தோழிகளே நம்ம தொகுதிக்கி (பகுதி) வாங்க :) சமைத்து அசத்தலாம் பகுதி - 7 இன்று முதல் தொடங்குகிறது.

இம்முறை நாம் அசத்த போகும் குறிப்புக்கள்:

http://www.arusuvai.com/tamil/expert/6508 - மஹிஸ்ரீ - 28
http://www.arusuvai.com/tamil/expert/9 - பைரோஜா ஜமால் - 25
http://www.arusuvai.com/tamil/expert/6504 - அதிரா - 50
http://www.arusuvai.com/tamil/expert/5762 - நூஹு - 3

இன்று முதல் (நவம்பர் 18) துவங்கி நவம்பர் 25 வரை சமைக்கும் குறிப்புகளுடன் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம் எவ்வளவு விரும்பினாலும் சமைக்கலாம்.
அதிகமாக சமைத்து அசத்தும் தோழிகளுக்கே வெற்றி மாலை :)

விருப்பம் உள்ளவர்கள், விளக்க படம் இல்லாத குறிப்புகளுக்கு சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

நம்ம கணக்குபிள்ள ஸ்கந்தாவும் தயாரா இருக்காங்க உங்களுக்கு கணக்கு வழங்க அவங்களையும் உற்ச்சாக படுத்தி சமைத்து அசத்த வாங்க வாங்க வாங்க....

தோழிஸ் உங்கள் ஆதரவை கொடுத்து இந்த பகுதியை வெற்றி அடைய செய்யுங்க...

அன்புடன்,
லலிதா

நான் ரெடி நீங்க ரெடியா.........

தோழிகளே நம்ம சமைத்து அசத்தலாம் பகுதியையும் கொஞ்சம் கண்டுக்கோங்க... வண்டி இன்னும் கிலம்பவேயில்ல... :(

அன்புடன்,
லலிதா

ஹாய் லலிதா,ஸ்கந்தா
நான் இப்போ தான் சமைத்து அசத்தலாம்க்கு பதிவு போட வந்தேன்...நீங்க கண்டுக்கலைன்னு சொல்லி இருக்கிங்க :)
நாங்க கண்டுக்காம இருப்போமா?
நேற்று இரவு- நோன்பு கஞ்சி (ஃபைரோஜா ஜமால்) ,கதம்ப துவையல் (ஃபைரோஜா ஜமால்).இரண்டுமே சூப்பர்....
உறுளைக்கிழங்கு வருவல் -அதிரா....

ஷமீலா மிக்க நன்றி.... :) வண்டி கிலம்பியாச்சு இனி அடுத்த நிறுத்தத்துல யாரு இருக்காங்கனு பாக்கலாம்...
உங்கள் பதிவுகளை தொடரவும்... :)

அன்புடன்,
லலிதா

லலிதா, ஸ்கந்தா,
ஏன் அக்கவுன்ட் ஓபன் செய்திடுங்க...

மஹிஸ்ரீ - ஆலு டொமேட்டோ சப்ஜி & சில்லி சப்பாத்தி..

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஷமீலா (3): நோன்பு கஞ்சி, கதம்ப துவையல், உறுளைக்கிழங்கு வருவல்
பிந்து (2): ஆலு டொமேட்டோ சப்ஜி, சில்லி சப்பாத்தி

இந்த வாரம் பட்டி வாரமாச்சே ;) அதே வாரத்தில் இதுவும் என்பதால் தான் வண்டி நகரல. இருங்க, இதை அந்த வாரம் முடிக்காம அப்படியே அடுத்த வாரம் தொடருங்க. எல்லாரும் வந்துடுவாங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஸ்கந்தா / லலிதா,
என் அக்கவுண்டில் நூஹு - சிக்கன் கிரேவி சேர்த்துக்கோங்க...

தங்கச்சி.... மீதி எல்லோரும் அடுத்த வாரம் ச.அல் பங்கு பெறட்டும், நான் இந்த வாரமே என் கோட்டாவை முடிச்சிடுறேன்... அடுத்த வாரம் நான் சமைப்பது எல்லாம் சந்தேகம் தான் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஷமீலா (3): நோன்பு கஞ்சி, கதம்ப துவையல், உறுளைக்கிழங்கு வருவல்
பிந்து (3): ஆலு டொமேட்டோ சப்ஜி, சில்லி சப்பாத்தி, சிக்கன் கிரேவி
-------------------------------------------------------------------------
லலிதா இந்த பகுதிக்கு மட்டும் நீங்க கொஞ்சம் கணக்கு பார்க்க முடியுமா. எனக்கு கொஞ்சம் பிவேர் லலி, தவற நினைக்காதிங்க

மேலும் சில பதிவுகள்